search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young woman dead"

    • பொதுமக்கள் மீது காரை மோதியதும் டிரைவர் அங்கிருந்து காரை பின்நோக்கி நகர்த்தி வேகமாக தப்பி செல்ல முயன்றார்.
    • விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிரைவரை கைது செய்தனர்.

    காஜியாபாத்:

    கிழக்கு டெல்லி காஜிப்பூரில் புத் பஜார் என்ற மார்க்கெட் உள்ளது. இங்கு எப்போதும் பொதுமக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். நேற்று இரவு 9.30 மணியளவில் பொதுமக்கள் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்தனர்.

    அப்போது திடீரென ஒரு கார் கூட்டத்தில் வேகமாக புகுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் காஜியாபாத்தை சேர்ந்த சீதா தேவி என்ற 22 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பெண்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    பொதுமக்கள் மீது காரை மோதியதும் டிரைவர் அங்கிருந்து காரை பின்நோக்கி நகர்த்தி வேகமாக தப்பி செல்ல முயன்றார். ஆனால் பொதுமக்கள் காரை சிறிது தூரம் விரட்டி பிடித்து டிரைவரை மடக்கி பிடித்தனர். விபத்து ஏற்படுத்திய டிரைவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிரைவரை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுகன்யா சுயநினைவு இன்றி இருந்ததால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்க்கும் படி சுகன்யாவின் உறவினர்கள் மற்றும் அவரது கணவர் அஜித்திடம் கூறியுள்ளனர்.
    • திடீரென பெண்ணின் கணவர் அஜித் லாரியின் முன்பு பாய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை:

    செங்குன்றம் பாடியநல்லூர் பாலகணேசன் நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் அஜித். இவரது மனைவி சுகன்யா. இருவருக்கும் 27 வயது ஆகிறது.

    இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகிறது. இந்த நிலையில் சுகன்யா கர்ப்பமானார். முதல் 5 மாதங்கள் மாதவரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியின் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தள பக்கத்தில் பிரசவத்தின் போது பெண்ணின் கணவர் உடன் இருந்து பிரசவத்தை பார்த்து கொள்ளலாம் என விளம்பரம் செய்திருப்பதை பார்த்தனர்.

    இதையடுத்து அஜித் அவரது மனைவி சுகன்யாவை அந்த ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். கடந்த 4 மாதமாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

    கடந்த 16-ந்தேதி சுகன்யாவுக்கு பிரசவ வலி ஏற்படவே அன்று ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சில ஊசிகள் போடப்பட்ட நிலையில் திடீரென சுகன்யாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சுகன்யா மயக்கம் அடைந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்ததாக தெரிகிறது. இதில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் சுகன்யா சுயநினைவு இன்றி இருந்ததால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பார்க்கும் படி சுகன்யாவின் உறவினர்கள் மற்றும் அவரது கணவர் அஜித்திடம் கூறியுள்ளனர்.

    இதனால் அந்த ஆஸ்பத்திரி மருத்துவர்கள் பரிந்துரை செய்ததன் பேரில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதித்து சுயநினைவு இன்றி இருந்த சுகன்யாவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சுகன்யா பரிதாபமாக உயிரிழந்தார். சுகன்யாவிற்கு பிறந்த ஆண் குழந்தையும் இங்குபேட்டர் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சுகன்யாவின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று சமரச பேச்சு நடத்தினர்.

    திடீரென பெண்ணின் கணவர் அஜித் அந்த வழியே வந்த லாரியின் முன்பு பாய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தனது மனைவி உயிரிழந்ததாகவும் எனவே சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அஜித் போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

    • திருமணமான 2-வது நாளில் புதுப்பெண் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • சுதாவுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மூச்சு திணறல் இருந்து வந்ததும், இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெள்ளாண்டி வலசு பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மகன் செந்தில் (32), இவர் கொங்கணாபுரம் அருகே உள்ள தங்காயூரில் உள்ள ஒரு பேக்கரியில் வேலைப்பார்த்து வருகிறார்.

    இவருக்கும் எடப்பாடி அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரது மகள் சுதா (27), என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் நேற்று மதியம் சுதாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது தாய் சின்ன பொண்ணு என்பவர் சுதாவை எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது வழியிலேயே சுதா மயங்கினார்.

    இதையடுத்து அவரது தாயார் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் சுதாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அப்போது சுதா இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது சுதாவுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மூச்சு திணறல் இருந்து வந்ததும், இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது.

    திருமணமான 2-வது நாளில் புதுப்பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சிவராமக்கனி பிளஸ்-2 முடித்துவிட்டு மேலத்திருச்செந்தூர் ஊராட்சியில் ஊரக வேலைத்திட்டத்தில் வேலை செய்து வருகிறார்.
    • இரவில் சாப்பிட்ட உணவு செரிமானமாகததால் குளிர்பானம் குடித்த 21 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலு மூலைக்கிணறு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சவுந்திரராஜன். இவரது மகள் சிவராமக்கனி.

    இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு மேலத்திருச்செந்தூர் ஊராட்சியில் ஊரக வேலைத்திட்டத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சிவராமக்கனி நேற்று இரவு கடையில் முட்டை போண்டா வாங்கி சாப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இரவு வீட்டில் மீன் குழம்பு வைத்து உணவை சாப்பிட்டுள்ளார். இதனால் அவருக்கு உணவு செரிமானம் ஆகாமல் இருந்துள்ளது.

    இதனால் செரிமானம் ஆக அவர் குளிர்பானம் வாங்கி குடித்து விட்டு தூங்க சென்றுள்ளார். தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இரவில் சாப்பிட்ட உணவு செரிமானமாகததால் குளிர்பானம் குடித்த 21 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பலத்த காயம் அடைந்த செல்சியா சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • செல்சியாவின் தோழி யாழினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    தாம்பரம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், புத்தர் தெருவை சேர்ந்தவர் யாழினி (வயது23).

    இவர் நெருங்கிய தோழியான காரைக்குடியை சேர்ந்த செல்சியா (23) என்பவருடன் ஊரப்பாக்கத்தில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.

    நேற்று மாலை தோழிகள் இருவரும் தி.நகரில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்க மின்சார ரெயிலில் செல்ல திட்டமிட்டனர். இதைத்தொடர்ந்து இருவரும் ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு நடந்து வந்து கொண்டு இருந்தனர்.

    ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் ஓரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தபோது, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரெயில் தோழிகள் யாழினி, செல்சியா மீது மோதியது. இதில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்ட னர்.

    இதில் பலத்த காயம் அடைந்த செல்சியா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தோழி யாழினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தண்டவாளம் அருகே தோழிகள் இருவரும் பேசிக்கொண்டு நடந்து வந்தபோது மின்சார ரெயில் வருவதை கவனிக்காமல் சென்றதால் அவர்கள் விபத்தில் சிக்கி இருப்பது தெரிந் தது.

    இதுகுறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாட்டறம்பள்ளி அருகே தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் சென்னை-பெங்களூர் 6 வழி சாலையில் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சுவேதாவின் சாவிற்கு காரணம் மாமனார், மாமியார் மற்றும் அவருடைய கணவர் தான் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி கிராமம் மணியகார் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சுவேதா (வயது 22) இவர்களுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. ஜெயஸ்ரீ (வயது 2) பெண் குழந்தை உள்ளது. கணவன் மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுவேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திம்மாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். சுவேதாவின் உறவினர்கள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கத்தாரி கிராமத்திலிருந்து சாலை வசதி இல்லாத காரணத்தால் சுவேதாவின் உடலை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தோளில் தூக்கி வந்தனர்.

    நாட்டறம்பள்ளி அருகே தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் சென்னை-பெங்களூர் 6 வழி சாலையில் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுவேதாவின் சாவிற்கு காரணம் மாமனார், மாமியார் மற்றும் அவருடைய கணவர் தான் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி டி.எஸ்.பி.சுரேஷ் பாண்டியன், நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் அடிப்படையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். திம்மம்பேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆவதால் திருப்பத்தூர் ஆர்.டி.ஓ. விசாரணை செய்து வருகிறார்.

    நாட்டறம்பள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் 30 நிமிடம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பலியான இளம்பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
    • இளம்பெண்ணுக்கு சுமார் 35 வயது இருக்கும். அவரது உடல் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த படாளம்-கருங்குழி இடையே உள்ள அரியவாக்கம் பகுதியில் இளம்பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த ரெயில் அந்த பெண் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து செங்கல்பட்டு ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பலியான பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    பலியான இளம்பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவருக்கு சுமார் 35 வயது இருக்கும். அவரது உடல் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    பலியான பெண்ணை அடையாளம் காணும் முயற்சியில் ரெயில்வே போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக மாயமானவர் பற்றிய விபரத்தை சேகரித்து வருகிறார்கள்.

    • காரை வேகமாக இயக்கி டிரைவர் பாலத்தை கடக்க முயன்றார். அப்போது கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
    • காரில் இருந்த 5 பேரும் அலறி கூச்சலிட்டனர். உடனடியாக மவுனிகா மனம் தளராமல் தனது செல்போன் மூலம் நண்பர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பி கொத்தகோட்டா மண்டலம் தொகலப்பள்ளியை சேர்ந்தவர் ரமணா. தனியார் பள்ளி நடத்தி வருகிறார். இவரது மகள் மவுனிகா (வயது 22), பி.டெக் முடித்துவிட்டு பெங்களூரில் பணிபுரிந்து வந்தார்.

    ரமணா தனது மனைவி உமாதேவி (37) மற்றும் உறவினர் ஸ்ரீநிவாசுலு (39), ஆகியோர் தனியார் கார் டிரைவருடன் பெங்களூருவுக்கு சென்றனர். பின்னர் தனது மகளை அழைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு காரில் நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது பலத்த மழை பெய்ததால் சம்பாதி கோட்டா என்ற இடத்தில் ஆற்றின் நடுவில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் சென்று கொண்டு இருந்தது.

    காரை வேகமாக இயக்கி டிரைவர் பாலத்தை கடக்க முயன்றார். அப்போது கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    இதனால் காரில் இருந்த 5 பேரும் அலறி கூச்சலிட்டனர். உடனடியாக மவுனிகா மனம் தளராமல் தனது செல்போன் மூலம் நண்பர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதனை அறிந்து உடனடியாக அங்கு வந்த அப்பகுதி மக்கள் உதவியுடன் போலீசார் கயிறு கட்டி காரை வெளியே எடுத்தனர். இதில் கார் டிரைவர் உட்பட 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால், மவுனிகா மட்டும் காரில் இருந்த அனைவரையும் காப்பாற்ற கடைசி மூச்சு வரை முயன்ற நிலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

    பின்னர், பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் மவுனிகாவின் உடல் பாலத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் மீட்கப்பட்டது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சீவலப்பேரி அருகே குளத்தில் மூழ்கிய இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    பாளை அருகே உள்ள சீவலப்பேரியை அடுத்த குப்பை குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மாரிதுரை.

    இவரது மகள் ஹரிச்சந்திரா (வயது 19). இவரும், இவரது தாயார் சரஸ்வதியும் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள குளத்தில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஹரிச்சந்திரா ஆழமான பகுதியில் மூழ்கினார்.

    உடனடியாக சரஸ்வதியும் மற்றவர்களும் கூச்சல் போட்டனர். அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து தண்ணீரில் மூழ்கி கிடந்த ஹரிச்சந்திராவை மீட்டனர். மயக்க நிலையில் இருந்த அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் ஹரிச்சந்திரா பரிதாபமாக இறந்தார். இது குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    போளூரில் மின்சாரம் தாக்கி இளம்பெண் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    போளூர்:

    போளூர் கண்ணன் தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மனைவி நிர்மலா (வயது32). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    நேற்று போளூரில் கன மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது வீட்டில் இருந்த நிர்மலா டி.வி.யில் பாதிப்பு ஏற்படுமோ என்று பயந்து கேபிள் வயரை டி.வியில் இருந்து கையால் பிடுங்கி எடுத்தார்.

    அப்போது மின்சாரம் தாக்கி நிர்மலா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த போளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×