திருச்செந்தூர் அருகே உணவு செரிமானம் ஆகாததால் குளிர்பானம் குடித்த இளம்பெண் மரணம்

சிவராமக்கனி பிளஸ்-2 முடித்துவிட்டு மேலத்திருச்செந்தூர் ஊராட்சியில் ஊரக வேலைத்திட்டத்தில் வேலை செய்து வருகிறார். இரவில் சாப்பிட்ட உணவு செரிமானமாகததால் குளிர்பானம் குடித்த 21 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்செந்தூர் அருகே உணவு செரிமானம் ஆகாததால் குளிர்பானம் குடித்த இளம்பெண் மரணம்
Published on

திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலு மூலைக்கிணறு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சவுந்திரராஜன். இவரது மகள் சிவராமக்கனி.

இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு மேலத்திருச்செந்தூர் ஊராட்சியில் ஊரக வேலைத்திட்டத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சிவராமக்கனி நேற்று இரவு கடையில் முட்டை போண்டா வாங்கி சாப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இரவு வீட்டில் மீன் குழம்பு வைத்து உணவை சாப்பிட்டுள்ளார். இதனால் அவருக்கு உணவு செரிமானம் ஆகாமல் இருந்துள்ளது.

இதனால் செரிமானம் ஆக அவர் குளிர்பானம் வாங்கி குடித்து விட்டு தூங்க சென்றுள்ளார். தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இரவில் சாப்பிட்ட உணவு செரிமானமாகததால் குளிர்பானம் குடித்த 21 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com