search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "courts"

    • பொதுமக்களை போலவே வழக்கறிஞர்களுக்கும் சொந்த அரசியல் விருப்பங்களும் நம்பிக்கைகளும் இருக்கும்.
    • வழக்கறிஞர்களின் உண்மையான விசுவாசம் நீதிமன்றங்களுக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

    நாக்பூரின் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கலந்து கொண்டார்.

    அந்நிகழ்வில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், "வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் தங்கள் "அரசியல் விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு" மேலாக வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து அண்மை காலங்களில் வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கும் போக்கு கண்டு நான் மிகவும் கவலை அடைந்துள்ளேன்.

    நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது வழக்கறிஞர்கள் பொதுமக்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

    பொதுமக்களை போலவே வழக்கறிஞர்களுக்கும் சொந்த அரசியல் விருப்பங்களும் நம்பிக்கைகளும் இருக்கும். ஆனால், அவர்கள் அதற்கு மேல் சிந்திக்க வேண்டும். அவர்களின் உண்மையான விசுவாசம் நீதிமன்றங்களுக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும்.

    செய்தித்தாள்கள், ஊடகங்கள் வழியாக நீதிமன்ற தீர்ப்புகள் பற்றிய விவரங்களை பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய கடமை வழக்கறிஞர்களுக்கு உள்ளது .

    இந்த வகையில், நீதிமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படும் ஆற்றல் வழக்கறிஞர்களுக்கு உள்ளது. சிக்கலான சட்ட கருத்துக்கள் மற்றும் நடைமுறைகளை பொதுமக்களுக்கு புரியும் படி எடுத்து சொல்வதன் மூலம் தான் நமது புரிதலை நாம் மேம்படுத்த முடியும்.

    எவ்வாறாயினும், நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் வழக்கறிஞர்களின் சுதந்திரத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது" என்று தலைமை நீதிபதி எச்சரித்தார்.

    • திமன்றங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • சிவகங்கை மாவட்ட வக்கீல் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் நெல்சன் ஜீவா வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணைசெயலாளர் இளையராஜா தொடக்க உரையாற்றினார்.

    சிவகங்கை வழக்கறி ஞர்கள் சங்க தலைவர் நாகேஸ்வரன், செயலாளர் சித்திரைச்சாமி' பொரு ளாளர் செல்வராஜ், இணை செயலாளர் மணிகண்டன், அரசு வழக்கறிஞர்கள் அழகர்சாமி, பிரபாகர், ஸ்ரீசாய் சுந்தர், துஷாந்த் பிரதீப்குமார், நிர்மலா, சேகர் ஆகியோர் பேசினர். மாவட்ட துணை தலைவர் அஜீதாகூர் குற்றவியல் விசாரணை பற்றி கருத்துரையாற்றினார்.

    மாநில பொதுச் செயலா ளர் முத்து அமுதநாதன் நிறைவுரை ஆற்றினார். மாநாட்டில் மாவட்ட தலைவராக ராஜசேகரன், மாவட்ட செயலாளராக மதி, மாவட்ட பொருளாளராக சொர்ணம், மாவட்ட துணை தலைவர்களாக கமலதயாளன், அஜூ தாகூர், மாவட்ட துணை செயலாளர்களாக நெல்சன் ஜீவா, இளைய ராஜா, மாவட்ட குழு உறுப்பினர்களாக சகாய சுதாகர், காளைஈஸ்வரன், நிருபன் சக்ரவர்த்தி, சரவணன், ஜேம்ஸ் ராஜா, தீபா, துரைபாண்டி, பூர்ணிமா, சுசீலா, செந்தில்வேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    வழக்கறிஞர்கள் சேம நல நிதியை ரூ.15 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்மாகை வட்டத்தில் வாடகை கட்டிடத்தில் செயல்படும் நீதிமன்றங்களுக்கு சொந்தமாக நீதிமன்ற கட்டிடங்கள் கட்டி தர வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், சுத்தமான குடி தண்ணீர், சுகாதாரமான கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும். உயர் நீதிமன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக்க சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன.

    • உசிலம்பட்டி நீதிமன்றங்களுக்கு கட்டிடம் கட்ட இடம் ஆய்வு செய்யப்பட்டது.
    • மேலும் புதிய நீதிமன்றங்கள் அமைப்பதற்கு போதிய இடவசதி உள்ளதா? எனவும் கேட்டு அறிந்தனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சார்பு நீதிமன்றங்களுக்கு கட்டிடம் கட்ட இடத்தை அதிகாரிகள் பார்யிவைட்டனர்.

    உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரலிங்கம், நீதிபதிகள் மாரிக்காளை, மகாராஜன், தாசில்தார் கருப்பையா, நில அளவர் பிச்சைமணி மட்டும் அரசு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு நீதிமன்ற வளாகத்தில் பின்புறம் உள்ள அரசு பயணிகள் விடுதி மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலகம் ஆகிய பகுதியில் உள்ள காலியிடங்களை பழுதடைந்துள்ள கட்டிடங்களை பார்வையிட்டனர்.

    மேலும் புதிய நீதிமன்றங்கள் அமைப்பதற்கு போதிய இடவசதி உள்ளதா? எனவும் கேட்டு அறிந்தனர்.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் 11 ஊர்களில், நீதிமன்றங்களுக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டப்படும் என்றார். #edappadipalanisamy #tnassembly

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நீதி நிருவாகம் துறையின் மூலம் செயல்படுத்த உள்ள பின்வரும் அறிவிப்புகளை இப்பேரவையில் அறிவிக்கின்றேன்.

    கன்னியாகுமரி மாவட்டம், பூதபாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு இருசக்கர வாகன நிறுத்தத்துடன் கூடிய கட்டடம் மற்றும் குடியிருப்புகள், 4 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப் பீட்டில் கட்டப்படும்.

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதி மன்றக்கட்டடம் மற்றும் குடியிருப்புகள், 6 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடத்தின் மேல் தளங்களில் சார்பு நீதிமன்றம், கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களுக்கு கூடுதலாக இரண்டு நீதிமன்ற அறைகள் மற்றும் அலுவலகங்கள், 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களுக்கு உணவகம், இருசக்கர வாகன நிறுத்தத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கட்டடம் மற்றும் வாகன நிறுத்தத்துடன் கூடிய இரண்டு குடியிருப்புகள், 6 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றக் கட்டடம், சைக்கிள் நிறுத்தம், வாகன நிறுத்தம், உணவகம், பொது கழிப்பிடம் மற்றும் சுற்றுச் சுவருடன் கூடிய குடியிருப்பு, 8 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் மற்றும் குடியிருப்புகள், 5 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    தருமபுரி மாவட்டம் அரூரில் சார்பு நீதிபதி, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான குடியிருப்புகள், ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள சார்பு நீதிபதி குடியிருப்பு கட்டப்படும்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 நீதிபதிகளுக்கான குடியிருப்புகள், 3 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் விரைவு நீதிமன்ற நீதிபதிக்கான குடியிருப்பு கட்டப்படும்.

    கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #edappadipalanisamy #tnassembly 

    ×