என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாஞ்சிநாதன்"

    • சாதி- மதம் பார்த்து, வேண்டியோர்- வேண்டாதோர் என பார்த்து தீர்ப்பு வழங்குகிறார்
    • சாதி-மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று ஒருசார்பு நிலையெடுத்துப் பேசுகிறார்.

    மதுரை வழக்குரைஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிபதியின் அச்சுறுத்தலைத் தடுத்திட வேண்டும் என்று உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு விசிக வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை உயர்நீதிமன்றத்தின்மதுரை கிளையைச் சார்ந்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சுமத்தி அவரை அச்சுறுத்தும் வகையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் நடந்திருப்பது; குறிப்பாக, நீதிமன்றத்திலேயே பலரின் முன்னிலையில் "நீ ஒரு கோழையா" என்றும் அவர் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தப் போக்கு கண்டனத்துக்குரியதாகும்.

    உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு வழக்குரைஞர் வாஞ்சிநாதன், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் மீது 14 பக்கங்களைக் கொண்ட புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார் என்பதை அறிந்தே அவர் ஆத்திரப்பட்டு இவ்வாறு நடந்திருக்கிறார் என்றும் தெரிகிறது.

    சாதி- மதம் பார்த்து, வேண்டியோர்- வேண்டாதோர் என பார்த்து தீர்ப்பு வழங்குகிறார் என்பதையும்; சராசரி நபர்களைப்போல சாதி-மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று ஒருசார்பு நிலையெடுத்துப் பேசுகிறார் என்பதையும் அந்தப. புகாரில் வாஞ்சிநாதன் குறிப்பிட்டிருக்கிறார் எனத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், ஒரு வழக்குரைருக்கு எதிராக தனது சட்டபூர்வமான அதிகாரத்தைப் பயன்படுத்த முனைவது எவ்வகையில் ஏற்புடையதாகும்? அவர், தனக்கு எதிரான புகாரைத் தானே எப்படி விசாரிக்க முடியும்?

    இதில் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி உடனே தலையிட்டு வழ. வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிபதியின் பழிவாங்கும் நடவடிக்கையை உடனே தடுத்திட வேண்டுமென கோருகிறோம். அத்துடன், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் மீதான புகார் தொடர்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உரிய விசாரணை நடத்திட ஆவன செய்ய வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார். 

    • வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்
    • 8 முன்னாள் நீதிபதிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய சில தீர்ப்புகள் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும், நீதிபதிகள் பதவி ஏற்பின் போது எடுத்துக் கொள்ளும் உறுதிமொழிக்கு மாறாகவும் அமைந்துள்ளதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

    ஆனால், இப்புகார் அதிமுக ஆட்சி காலத்தில் அரசு வழக்கறிஞராக செயல்பட்ட வழக்கறிஞர் இராஜராஜன் என்பவரால் தற்போது சமூகவலைதளங்களில் பகிரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் திடீரென விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அப்போது வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

    இந்நிலையில், வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் நடவடிக்கைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "ஒரு வழக்கில் நீதிபதியின் செயல்பாடு முறையற்றதாகவோ, தவறானதாகவோ இருப்பதாக ஒரு வழக்கறிஞர் கருதினால் அதை அவர் கடிதமாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பலாம் என்ற நடைமுறையை பின்பற்றி மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன், நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் செயல்பாடு குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார். இது எப்படி நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என்ற கேள்வி எழுந்திருப்பதை 8 மேனாள் நீதிபதிகள் ஆதரித்திருப்பது வரவேற்கத்தக்கது.

    மேலும் ஒரு வழக்கறிஞர் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதம் எப்படி சமூக வலைத்தளங்களில் அதிமுக வழக்கறிஞர் ஒருவரால் பகிரப்பட்டது என்ற கேள்வியும், இக்கடிதத்தைகாரணமாக வைத்து கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்ட நீதிபதியே அவ்வழக்கறிஞரை நீதிமன்றத்தில் சம்மன் செய்து விசாரிக்க முடியுமா என்ற கேள்வியும் வலுவாக எழுந்துள்ளது.

    நீதிமன்ற நடைமுறைகள் முறையற்றதாகவும் தவறானதாகவும் அமைந்து விடக்கூடாது என சமூக அக்கரை கொண்ட குடிமக்கள் கருதுவது நியாயமானதே" என்று பதிவிட்டுள்ளார். 

    • வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்
    • 8 முன்னாள் நீதிபதிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய சில தீர்ப்புகள் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும், நீதிபதிகள் பதவி ஏற்பின் போது எடுத்துக் கொள்ளும் உறுதிமொழிக்கு மாறாகவும் அமைந்துள்ளதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

    ஆனால், இப்புகார் அதிமுக ஆட்சி காலத்தில் அரசு வழக்கறிஞராக செயல்பட்ட வழக்கறிஞர் இராஜராஜன் என்பவரால் தற்போது சமூகவலைதளங்களில் பகிரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் திடீரென விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அப்போது வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

    இந்நிலையில், வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வுக்கு 8 முன்னாள் நீதிபதிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக வாஞ்சிநாதன் அளித்துள்ள புகார் மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு நிலுவையில் உள்ள நிலையில், இந்த விவகாரத்தை சுவாமிநாதன் விசாரிக்கக் கூடாது என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • ஆங்கிலேய கொடுங்கோலர்களின் கொட்டத்தை அடக்க, தனது இருபத்தைந்து வயதிலேயே தேசத்திற்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்த மாவீரர் வாஞ்சிநாதனின் நினைவு நாள் இன்று.
    • வீரத்தையும் தியாகத்தையும் நினைவுறுத்தும் இத்திருநாளில், வாஞ்சிநாதன் அவர்களின் புகழைப் போற்றுவோம்!

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பாரதத் தேசத்தை அடிமைப்படுத்தியதோடு, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்ற பெரும் தலைவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து, சித்திரவதை செய்த ஆங்கிலேய கொடுங்கோலர்களின் கொட்டத்தை அடக்க, தனது இருபத்தைந்து வயதிலேயே தேசத்திற்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்த மாவீரர் வாஞ்சிநாதன் அவர்களின் நினைவு நாள் இன்று.

    வீரத்தையும் தியாகத்தையும் நினைவுறுத்தும் இத்திருநாளில், வாஞ்சிநாதன் அவர்களின் புகழைப் போற்றுவோம்! என்று கூறியுள்ளார். 



    • வாஞ்சி மணிமண்டபத்தில் உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • செங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதன் 112-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் அரசு சார்பில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில், செங்கோட்டையில் உள்ள வாஞ்சி மணிமண்டபத்தில் உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சயில் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், செங்கோட்டை வருவாய் தாசில்தார் முருகுசெல்வி, செங்கோட்டை நகர தி.மு.க. செயலாளர் வக்கீல் வெங்கடேசன், நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி, வடகரை சேர்மன் சேக்தாவூது, வருவாய் ஆய்வாளர் குமார், வி.ஏ.ஓ. முருகேசன், நூலகர் ராமசாமி, வாஞ்சிநாதனின் உறவினர் ஹரிஹர சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ரஹீம், கலைஞர் தமிழ்சங்க செயலாளா் வக்கீர் ஆபத்துக்காத்தான், முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் லிங்கராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதபோல் செங்கோட்டை பஸ் நிலையம் அருகில் திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு செங்கோட்டை நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் வக்கீல் வெங்கடேசன் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    • எதிரி படைகளால் சூழப்பட்டபோது, ​​ஆங்கிலேயர்கள் தன்னை பிடித்து காவலில் எடுத்து விடாதபடி தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.
    • ஏராளமான இளைஞர்களை சுதந்திரத்துக்கான போராட்டத்தில் சேரத் தூண்டி, இறுதியில் நமது சுதந்திரத்துக்கும் வழிவகுத்தது என்று கூறியுள்ளார்.

    சென்னை:

    சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் நினைவுநாளையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனை அவர் உயிர் நீத்த நாளில் தேசம் ஆழ்ந்த நன்றியுடனும் பெருமையுடனும் நினைவுகூர்கிறது. சொந்த ஊர் மக்களுக்கு எதிரான ஆங்கிலேயர்களின் சொல்லொணா அட்டூழியங்களை தன்னால் தாங்க முடியாதபோது, வாஞ்சிநாதன் காலனித்துவ சக்திக்கு சவால் விடுத்து, திருநெல்வேலியின் அடக்குமுறை மாவட்ட ஆட்சியர் ராபர்ட் ஆஷை படுகொலை செய்தார்.

    எதிரி படைகளால் சூழப்பட்டபோது, ஆங்கிலேயர்கள் தன்னை பிடித்து காவலில் எடுத்து விடாதபடி தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். அவரது தணியாத துணிச்சல், தேச சுதந்திரம் மீதான காதல் மற்றும் நாட்டுக்கான அவரது உச்சபட்ச தியாகம் ஆகியவை ஏராளமான இளைஞர்களை சுதந்திரத்துக்கான போராட்டத்தில் சேரத் தூண்டி, இறுதியில் நமது சுதந்திரத்துக்கும் வழிவகுத்தது என்று கூறியுள்ளார்.

    • தமிழக மக்களிடம் பேசும் போதெல்லாம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாஞ்சி மணியாச்சி சந்திப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம்.
    • கொரோனாவுக்கு எதிரான நமது நாட்டு மக்களின் போராட்டம் இன்னும் தொடர்கிறது.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி இன்றைய மன் கி பாத் உரையில் பேசியதாவது:-

    இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் அற்புதமான, வரலாற்று தருணத்தை காண போகிறோம். ஆகஸ்ட் 13 முதல் 15 வரை மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்.

    சுதந்திர போராட்டத்தில் இந்திய ரெயில்வே பங்களிப்பை அறிய வேண்டும். சுதந்திர தினத்தையொட்டி 24 மாநிலங்களில் உள்ள 75 முக்கிய ரெயில் நிலையங்களை அலங்கரிக்கும் பணி நடக்கிறது.

    தமிழக மக்களிடம் பேசும் போதெல்லாம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாஞ்சி மணியாச்சி சந்திப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த நிலையத்திற்கு தமிழர் விடுதலை போராட்ட வீரர் வாஞ்சி நாதனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இதே இடத்தில் தான் 25 வயது வாஞ்சி என்ற இளைஞன் ஆங்கிலேய கலெக்டரின் செயலுக்கு தண்டனை கொடுத்தான்.

    கொரோனாவுக்கு எதிரான நமது நாட்டு மக்களின் போராட்டம் இன்னும் தொடர்கிறது.

    இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

    ×