பெண்ணை பார்த்து கண் அடிப்பதும், பிளையிங் கிஸ் கொடுப்பதும் பாலியல் தொல்லைதான்- சண்டிகர் நீதிமன்றம்

முதியவர் ஒருவர் ஒரு பெண்ணை பார்த்து ஆபாச சைகைகள் செய்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட அசோக் குமாரை குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
பெண்ணை பார்த்து கண் அடிப்பதும், பிளையிங் கிஸ் கொடுப்பதும் பாலியல் தொல்லைதான்- சண்டிகர் நீதிமன்றம்
Published on

பெண்ணை பார்த்து கண் அடிப்பதும் பிளையிங் கிஸ் கொடுப்பதும் ஒருவித பாலியல் தொல்லைதான் என்று சண்டிகர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

2021 ஆம் ஆண்டு 62 வயது முதியவர் ஒருவர் ஒரு பெண்ணை பார்த்து கண் அடித்தும் பிளையிங் கிஸ் கொடுத்ததும் ஆபாச சைகைகள் செய்துள்ளார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சண்டிகர் நீதிபதி சச்சின் யாதவ், குற்றம் சாட்டப்பட்ட அசோக் குமாரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். இருப்பினும் குற்றவாளியை விடுவித்த நீதிமன்றம் அவர் 6 மாத கால கண்காணிப்பில் இருப்பார் என்றும் அந்த காலகட்டத்தில் அவர் ஏதேனும் தவறு செய்தால் சிறைத்தண்டனை அனுபவிப்பார் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com