search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "தீக்குளிப்பு"

  • மன வேதனை அடைந்த அருக்காணி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
  • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருக்காணியை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம்:

  பல்லடம் அருகே தெற்குப்பாளையம் முத்துநகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி அருக்காணி (வயது 60). இவர் அங்குள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்டுவதற்கு கடன் வாங்கினார். அதனை கடந்த 4 வருடமாக மாதந்தோறும் தவணையாக பணம் செலுத்தி வந்தார்.

  இ்ந்த நிலையில் இவருடைய கணவர் செல்வராஜ் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதால் அவருடைய ஒரு கால் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 4 மாதங்களாக தவணை தொகை செலுத்தவில்லை.

  இந்த நிலையில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அருக்காணி வீட்டிற்கு வந்தனர். அப்போது அங்கு இருந்த அருக்காணியிடம் கடந்த 4 மாதமாக தவணை தொகை செலுத்தாததால் வீட்டை பூட்டப்போவதாக தெரிவித்தனர்.

  இதனால் மன வேதனை அடைந்த அருக்காணி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தி பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருக்காணியை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகன் தீக்குளித்து தற்கொலை
  • புதுக்கோட்டை அருகே பரிதாபம்

  புதுக்கோட்டை:

  புதுக்கோட்டை திருமயம் அருகே தேக்காட்டூர் லெனா விலக்கில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. முகாமை சேர்ந்தவர் சத்தியசீலன் மகன் கமல்ராஜ் நாயகம் (வயது 47). இவரது தந்தை சத்தியசீலன் உடல்நலக்குறைவு காரணமாக இலங்கையில் உயிரிழந்த செய்தி கேட்டு கமல்ராஜ் மிகுந்த வருத்தத்தில் இருந்து வந்தார். மேலும் கமல்ராஜ் குடும்பமும் இலங்கையில் உள்ள நிலையில் இவர் தனியாக முகாமில் இருந்து வந்ததால் ஆறுதல் கிடைக்காமல் மனமுடைந்த நிலையில் இருந்தார்.

  இந்நிலையில் சம்பவத்தன்று கமல்ராஜ் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் தீக்காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கமல்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • வரவு செலவு கணக்கில் பல குறைபாடுகள் இருப்பதால் தணிக்கை முடிந்த பிறகு நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் வழங்குவதாக கூறினார்.
  • விரத்தியடைந்த சோபித்குமார் அலுவலகம் முன்பு தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்தார்.

  புதுச்சேரி:

  புதுவை நேரு நகரை சேர்ந்தவர் சோபித் குமார்( 62). இவர் அரும்பார்த்தபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஊழியராக வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர். இவர் பணியாற்றிய காலத்தில் வரவு செலவில் சில முரண்பாடுகள் இருந்ததால் ஆடிட் செய்வதற்காக இவரது சம்பளம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.

  இதனால் விவசாய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் மேலாண் இயக்குனர் அய்யப்பனை அடிக்கடி சந்தித்து ஓய்வூதிய பலன்கள் வழங்குமாறு கேட்டு வந்தார். வழக்கம் போல் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள கான்பெட் அலுவலகத்தில் இயக்குனர் அய்யப்பனை சந்தித்து முறையிட்டார்.

  அப்போது அவர் வரவு செலவு கணக்கில் பல குறைபாடுகள் இருப்பதால் தணிக்கை முடிந்த பிறகு நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் வழங்குவதாக கூறினார். தற்காலிகமாக ரூ.10 ஆயிரம் வழங்கிவிட்டு புறப்பட்டு சென்றார்.

  இதனால் விரத்தியடைந்த சோபித்குமார் அலுவலகம் முன்பு தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்தார். உடலில் பற்றிய தீயுடன் அங்குமிங்கும் ஓடி கார் பார்க்கிங் அருகே மயங்கி விந்தார். இதனை பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

  உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து ஜிப்மரில் அனுமதித்தனர். சோபித் குமாருக்கு 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  தற்கொலைக்கு முயன்ற சோபித்குமாருக்கு மாலதி (59) என்ற மனைவியும், மகன் குழல்மாலன், ப்ரித்தி என்ற மகளும் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் தீக்குளிக்கும் முன்பு மனைவியிடம் செல்போனில் பேசி தன்னை மன்னிக்குமாறு கூறியுள்ளார்.

  நேற்று முன்தினம் புதுவை காலாப்பட்டு போலீஸ்நிலையத்தில் கலைச் செல்வி என்ற பெண் தீக்குளித்து இறந்தார். அந்த சம்பவம் அடங்குவதற்குள் அரசு அலுவலக வளாகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர் தீக்குளித்த சம்பவம் புதுவை மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  • புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
  • பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

  கடலூர்:

  கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் வந்திருந்தார். திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அங்கு இருந்த போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த நபரிடம் இருந்த பாட்டிலை பறிமுதல் செய்து அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்பாபு. இவர் வெளிநாட்டில் வேலை செய்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான காட்டுமன்னார்கோயில் பெரியார் நகர் பகுதியில் வீடு கட்டியுள்ளார்.

  அப்போது அதே பகுதியைச் சார்ந்த நபர் ஒருவர் அவரது வீட்டின் அருகே உள்ள பொதுப் பாதையில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அவரிடம் தெரிவித்த போது ஆட்கள் வைத்து மிரட்டுவதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்திலும்,  பரபரப்பு ஏற்பட்டது.

  • திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகள், பேத்தி தீக்குளிக்க முயற்சி செய்தனர்
  • பாதுகாப்பு நின்றிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்

  திருச்சி,

  திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதை.தொடர்ந்து வழக்கம் போல் நுழைவாயில் பகுதியில் போலீசார் மனுதாரர்களை சோதனைக்கு உட்படுத்தி உள்ளே அனுப்பி வைத்தனர்.இருந்த போதிலும் போலீசின் கண்ணில் சிக்காமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் சென்றனர். பின்னர் கலெக்டர் கார் நிறுத்தப்படும் பகுதியில் நின்று கொண்டு திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் 3 பேரையும் மீட்டு விசாரித்தனர். விசாரணையில் தீக்குளிக்க முயன்றவர்கள் திருச்சி முசிறி கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மனைவி பாப்பாத்தி (வயது 65)அவரது மகள் மாலதி( 40 )பேத்தி ஹரிப்பிரியா( 8 )என்பது தெரியவந்தது.இவர்களுக்கு சொந்தமான வீட்டை உறவினர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.இதற்கு நீதி கேட்டு வருவாய்த்துறை அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தும் எந்த தீர்வும் காணப்படவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி அவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது

  • அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார்
  • கீழப்பழுவூர் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம்

  அரியலூர்,

  திருநெல்வேலி நகரம், குன்றுத் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி பேச்சியம்மாள்(30). இவர் தற்போது அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் சுண்ணாம்பு கால்வாய் தெருவிலுள்ள ஒரு வாடகை வீட்டில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.கடந்த 20.5.2023 அன்று இவர்களது 7 வயது மகளை, வீட்டின் உரிமையாளர் ராமசாமி மகன் பரமசிவம் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்தகாவும், இது குறித்து புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய போலீஸôர் வழக்குப் பதிந்தனர்.மேலும், பரமசிவம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பேச்சியம்மாள் கடந்த 19.6.2023 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.இந்நிலையில் கடந்த 24.6.2023 அன்று கீழப்பழுவூர் காவல் நிலைய ஆய்வாளர் சகாய அன்பரசு, உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் சிலர், பேச்சியம்மாள் வீட்டுக்குச் சென்றதாகவும், அங்கு அவரிடம் பரமசிவம் மீது கொடுக்கப்பட்ட புகார் மனுவை திரும்ப வேண்டும் என்றும், இல்லையென்றால் உன் மீது பொய் வழக்குப் போட்டு, சிறையில் அடைப்பதாகவும் கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.இதனால் மன உளைச்சலில் இருந்த பேச்சியம்மாள் திங்கள்கிழமை தனது கைகுழந்தை, கணவர் லட்சுமணனுடன் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸôர் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து பேச்சியம்மாள்,கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த போது போலீஸôர் தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி, வலுக்கட்டயமாக வேனில் ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பேச்சியம்மாளை கடைசி வரை ஆட்சியரை சந்திக்க விடாமல் போலீஸôர் தடுத்தனர். இச்சம்பவம் ஆட்சியர் அலுலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
  • வாரிசு சான்றிதழ் வாங்க 7 லட்சம் வரை கொடுத்து ஏமாந்த விரக்தியில் விபரீத முயற்சி

  திருச்சி,

  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள மாதா கோவில் தெரு இடையாற்று மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி அமல சாந்தி (வயது 39). இவரது பெரியம்மாவுக்கு சொந்தமாக ரூ. 2 கோடி மதிப்பிலான சொத்து தஞ்சாவூரில் உள்ளது. இதனை தனது பெயருக்கு மாற்றம் செய்ய வாரிசு சான்றிதழ் வாங்குவதற்கும், பெயர் மாற்றம் செய்வதற்கும் இரு நபர்களிடம் ரூ. 7 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் இன்று குடும்பத்துடன் வந்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தலையில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை தடுத்து அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

  இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  சென்னை:

  திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்  பொன்னுசாமி. இவர் சுப்பிரமணி என்பவரிடம் கடன் கொடுத்துள்ளார். ஆனால் கடன் வாங்கிய சுப்பிரமணி பணத்தை திருப்பித் தரவில்லை. 

  இதனால் மனமுடைந்த பொன்னுசாமி பணத்தை திருப்பி வாங்கி தர வேண்டும் என வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம்  அருகே உள்ள பேருந்து நிலையத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

  இதையடுத்து அங்கிருந்தவர்கள் பொன்னுசாமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

  இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  ×