கோவையில் காதலுக்கு எதிர்ப்பால் 18 வயது இளம்பெண் தீக்குளிப்பு

இளம்பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதுஇது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையில் காதலுக்கு எதிர்ப்பால் 18 வயது இளம்பெண் தீக்குளிப்பு
Published on

கோவை,

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் அக்கா மற்றும் அவரது கணவருக்கு தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வாலிபருடனான காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினார்.

இதனால் இளம்பெண் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து உடலில் டீசலை ஊற்றி தீ பற்ற வைத்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் தீ அவரது உடல் முழுவதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று இளம்பெண்ணை மீட்டனர்.

பின்னர் அவரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இளம் ெபண்ணுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இளம்பெண்ணை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com