என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Murugan Temple"

    • நீதிமன்றங்களின் மீது நம் அனைவருக்கும் முழு நம்பிக்கை இருக்கிறது.
    • இது போன்ற முடிவுகள், எப்போதும், எதற்காகவும் வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்து மதுரையில் முருக பக்தர் பூர்ண சந்திரன் தீக்குளித்து உயிரிழந்ததாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்த திமுக அரசைக் கண்டித்து, மதுரை மாநகர் நரிமேடு பகுதியை சேர்ந்த தீவிர முருக பக்தர், சகோதரர் திரு. பூர்ண சந்திரன், தீக்குளித்து உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

    வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றங்களின் மீது நம் அனைவருக்கும் முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், இது போன்ற வருந்தத்தக்க முடிவை, சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் எடுத்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. ஒவ்வொருவரும், அவர்களது குடும்பத்தினருக்கு முக்கியம். இது போன்ற முடிவுகள், எப்போதும், எதற்காகவும் வேண்டாம் என்று அனைவரிடமும் பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன்.

    சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருமாறு, மதுரை பாஜக சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

    சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் ஆன்மா, முருகன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • திருப்பரங்குன்றம் விவகாரத்தை மையமாக வைத்து தான் கந்தன் மலை என்ற படத்தை உருவாக்கியுள்ளனர்.
    • கந்தன் மலை படத்தில் பாஜக உறுப்பினர் எச்.ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    அண்மையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை அகற்ற வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது திருப்பரங்குன்றம் என்பது கந்தர் மலை, அது சிக்கந்தர் மலை அல்ல என்று எச். ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    தற்போது சிக்கந்தர் தர்கா அருகே உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும் என்று இந்துத்துவ அமைப்பினர் அண்மையில் பிரச்சனை கிளப்பினர்.

    இந்நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தை மையமாக வைத்து தான் கந்தன் மலை என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் எச் ராஜா முறுக்கு மீசையுடன் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில், கந்தன்மலை திரைப்படம் நாளை (டிசம்பர் 19) தாமரை யூடியூப் சேனலில் வெளியாகவுள்ளதாக எச் ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

    • ஆலயத்தில் கிருஷ்ணர், ருக்மணி சத்யபாமா சமேதராக அருள்பாலிக்கிறார்.
    • தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இத்தலம் வந்து கனகாசல குமரனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் பிரசித்தி பெற்ற கனக்கிரி மலை உள்ளது. இந்த மலை உச்சியில் கனகாசல குமரன் கோவில் அமைந்துள்ளது. ஒரு முறை அகத்திய முனிவரின் அறிவுரைப்படி, புலிப்பாணி சித்தர் பத்தரை மாற்று தங்கத்துக்காக இந்த மலையை குடைந்தார். அப்போது முருகப்பெருமானின் அருளால் தங்கம் கிடைத்தது. ஆனால், அது ஏழரை மாற்றுத் தங்கமாக அவருக்கு கிடைத்தது. இதன் காரணமாக இந்த ஊர் 'ஏழரைமாற்றூர்' என்று அழைக்கப்பட்டது. பின்பு ஏழரைமாத்தூர்' என்றாகி, தற்போது மருவி எழுமாத்தூர்' என்றானது.

    இப்பகுதியில் இருந்த மக்கள் இந்த மலையின் சிறப்பையும், முருகப்பெருமானின் மகிமையும் அறிந்து, மலை உச்சியில் கோவில் எழுப்பினர். தங்கத்தை தந்த மலை என்பதால், இங்கு அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு 'கனகாசல குமரன்' என்று திருநாமம் சூட்டி வழிபட தொடங்கினர்.

    ஆலயத்தில் கிருஷ்ணர், ருக்மணி சத்யபாமா சமேதராக அருள்பாலிக்கிறார். இக்கோவிலின் தல விருட்ச - மாக இலந்தை மரம் உள்ளது. இந்த இலந்தை மரத்தடியில் விநாயகப்பெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு முன்பாக சிறிய மூசிகம் காணப்படுகிறது. விநாயகரின் அருகில் ராகு, கேது மற்றும் ஏழு கன்னியர்கள் உள்ளனர். இங்குள்ள விநாயகரை வணங்கிவிட்டு, கனகாசல குமரனை மனதார வழிபட்டு வந்தால் பிரார்த்தனைகள் நிறைவேறும், நல்ல வாழ்க்கை அமையும், பொன்னும் பொருளும் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இத்தலம் வந்து கனகாசல குமரனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். மேலும் செவ்வாய்க்கிழமை தோறும் கோ பூஜை சிறப்புற நடைபெறுகிறது. அப்போது இந்தக் கோவிலைச் சேர்ந்த கன்றுக்குட்டிகள் தானாக மலையேறி வந்து, பூஜை செய்யும் காட்சியை பார்ப்பது வியப்பளிக்கிறது.

    ஆலயத்தில் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, தைப்பூசம், விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை, சிவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    • மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் கலந்துகொள்கிறார்.
    • இதே கோவிலில் அவர் நடித்த "பில்லா" படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.

    அவ்வகையில் மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள அஜித்குமார் மலேசியா சென்றுள்ளார்.

    இந்நிலையில், 24H சீரிஸ் கார் பந்தயத்திற்கு முன்பாக, பத்து மலை முருகன் கோயிலில் அஜித்குமார் சாமி தரிசனம் செய்தார். இதே கோவிலில் அவர் நடித்த "பில்லா" படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

    • சப்த ரிஷிகள் தவம் செய்ததால், இந்த மலைக்கு ‘தபசு மலை' என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
    • கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மூலிகை கலந்த பிரசாதம் வழங்கப்படுவது, இக்கோவிலின் தனிச் சிறப்பாகும்.

    புதுக்கோட்டை மாவட்டம் தபசுமலை எனும் ஊரில் சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது, தபசுமலை பால தண்டாயுதபாணி கோவில்.

    சப்த ரிஷிகள் தவம் செய்ததால், இந்த மலைக்கு 'தபசு மலை' என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலில் முருகப்பெருமான், கையில் தண்டத்துடன் நின்ற கோலத்தில் பால தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். இவர் முனிவர்களாலும், சித்தர்களாலும் போற்றி வணங்கப்பட்டவர்.

    ஒரு காலத்தில் இங்கு முனிவர்கள் வேல் வைத்து வழிபட்டுள்ளனர். அந்த இடத்திலேயே முருகப்பெருமானுக்கு விக்ரகம் அமைத்து பிரதிஷ்டை செய்து, பின்பு கோவில் எழுப்பி மக்கள் வழிபட தொடங்கினர். மலை அடிவாரத்தில் சப்த ரிஷிகளின் சிலைகளும், பீடமும் அமைந்துள்ளன. இந்த பீடங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    கோவிலை அடைய, 75 படிக்கட்டுகளை ஏறி செல்ல வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மூலிகை கலந்த பிரசாதம் வழங்கப்படுவது, இக்கோவிலின் தனிச் சிறப்பாகும்.

    இந்த பிரசாதத்தை சாப்பிட்டால் சர்க்கரை நோய், வயிறு சம்பந்தப்பட்ட நோய் போன்றவை குணமாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வீற்றிருக்கும் முருகப் பெருமானை வழிபட்டால் அனைத்து வித தோஷங்களும் நிவர்த்தியாகும் என நம்பப்படுகிறது.

    கந்த சஷ்டி திருநாளில் பெண்கள் விரதம் இருந்து தபசுமலையில் வீற்றிருக்கக்கூடிய முருகப்பெருமானை தரிசனம் செய்து, விளக்கேற்றி வழிபட்டால் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும் என்றும், குழந்தை இல்லாதவர்கள் முருகப்பெருமானின் காலடியில் வைக்கப்பட்ட எலுமிச்சம் பழத்தை சாறு எடுத்து குடித்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.

    மனவேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர், இங்குள்ள முருகப்பெருமானிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தால் விரைவில் ஒன்றுசேர்வார்கள் என்பது நம்பிக்கை. புதுக்கோட்டையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

    • ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்து, பின்னர் பார்வதியால் ஒருவராக மாறியவரே, முருகப் பெருமான்.
    • ஐந்தாம் படைவீடு திருத்தணி. சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமானுக்கு கோபம் தணிந்த இடம் இது.

    கார்த்திகை மாதத்தில் முருகப்பெருமானுக் குரிய ஆறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபட்டால் 16 பேறும் நமக்கு வந்து சேரும். ஆறுபடை வீட்டிற்கும் செல்ல இயலாதவர்கள் அருகில் இருக்கும் ஒரு படை வீட்டிற்காவது சென்று ஆறுமுகனை வழிபட்டு வரலாம். முருகப்பெருமான் ஆறுமுகங்களைப் பெற்றிருப்பதால் ஒரே நேரத்தில் ஆறு வகையான பிரச்சனைகளை அழிக்க வல்லவன். பன்னிரெண்டு கரங்களைப் பெற்றிருப்பதால் அள்ளிக் கொடுக்கும் ஆற்றலைப் பெற்ற வள்ளல்.

    முருகனை 'கந்தா' என்றும், 'கடம்பா' என்றும், 'கார்த்திகேயா' என்றும், சரவணா, சண்முகா, வேலாயுதா, வெற்றிவேலா, சிவபாலா, வள்ளி மணாளா, மயில்வாகனா என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் அழைக்கிறோம். அந்த ஆறு முகப்பெருமான், திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறுபடை வீடுகளிலும் குடிகொண்டிருக்கிறார்.

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் பறந்து வந்தது. அந்தத் தீப்பொறிகள் கங்கையில் பறந்தபோது கங்கையே வற்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. எனவே ஈஸ்வரனின் ஆணைப்படி சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களின் மீது ஆறு தீப்பொறிகளையும் தவழ விட்டனர். அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக உருவெடுத்து, பின்னர் பார்வதியால் ஒருவராக மாறியவரே, முருகப் பெருமான்.

    கந்தப்பெருமான் கங்கையில் தோன்றியதால் அவருக்கு 'காங்கேயன்' என்றும், சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவணபவன்' என்றும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பெற்றதால் 'கார்த்திகேயன்' என்றும் திருநாமம் உண்டாயிற்று. வாய்ப்பு இருப்பவர்கள் படைவீடு அனைத்திற்கும் ஒரு முறைசென்று வந்தால் பயமின்றி வாழலாம். பணவரவும் கூடும். முதலில் திருப்பரங்குன்றம். இது தேவர்களின் துயரம் நீக்கிய முருகப்பெருமானுக்கு, நன்றி சொல்லும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வானையைத் திருமணம் செய்து வைத்த இடம்.

    அடுத்ததாக சூரபத்மனை சம்ஹாரம் செய்து முருகப்பெருமான் வெற்றிகண்ட இடமான, திருச்செந்தூர். மாமரமாக நின்ற சூரனை, முருகப்பெருமான் வேலாயுதத்தால் இரு கூறாகப் பிளந்தார். ஒரு பகுதி மயிலாகவும், மறு பாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக் கொண்ட முருகப்பெருமான், சேவலை தனது கொடியாக்கிக் கொண்டார்.

    மூன்றாவது படைவீடாக உள்ளது பழநி. ஞானப் பழத்திற்காக மயிலேறிப் பறந்து சென்று உலகைச் சுற்றினார். ஆனால் முன்னதாகவே 'அன்னையும், பிதாவும் தான் அகிலம்' என்று சொல்லி, சிவனையும், பார்வதியையும் சுற்றி வந்து பழத்தை வாங்கிக் கொண்டார், ஆனைமுகன். எனவே கோபத்தோடு முருகப்பெருமான் மலையேறி நின்ற இடம்தான் பழநி. பழத்தை வேண்டி பறந்துவந்த இடம் 'பழநி'யாயிற்று என்பர்.

    நான்காம் படைவீடுசுவாமி மலை. தந்தைக்கு பிரணவ மந்திரத்தின் பொருள் சொன்ன இடம். பொதுவாக உபதேசிப்பவர்கள் உயர்ந்த இடத்திலும், உபதேசம் பெறுபவர்கள், அதற்கு கீழும் தான் இருக்கவேண்டும். முருகப்பெருமான் சிவபெருமானின் மடியை ஆசனமாக்கிக் கொண்டு அதில் அமர்ந்து சிவன் காதில் பிரணவத்தின் பொருளை உபதேசிப்பது போல் இந்த ஆலயத்தில் சிற்பங்கள் உள்ளன. இதனால் முருகனுக்கு 'சுவாமிநாதன்' என்ற பெயர் உண்டாயிற்று.

    ஐந்தாம் படைவீடு திருத்தணி. சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமானுக்கு கோபம் தணிந்த இடம் இது. 'சினம் இருந்தால் பணம் வராது' என்பார்கள். சிரித்த முகத்தோடு இருந்தால் தான் பணப்புழக்கம் அதிகரிக்கும். எனவே கோபம், படபடப்பு இருப்பவர்கள் அது நீங்க இத்திருத்தலம் சென்று வழிபாடு செய்து வந்தால் சிறப்பான பலன் கிடைக்கும்.

    ஆறாவது படைவீடு பழமுதிர் சோலை. அவ்வைப் பாட்டிக்கு அறிவுரை கூறிய இடம். 'சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா' என்று தமிழ்ப் புலமை பெற்ற அவ்வையிடம் முருகப்பெருமான் வாதிட்ட இடம்தான் இது. இங்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டுவந்தால் அறிவாற்றல் பெருகும். ஆராய்ச்சி பட்டம் பெற விரும்புவர்கள் இங்கு சென்றுவந்தால் வெற்றியை வேகமாகப் பெறமுடியும்.

    • ஒரே ஒரு சன்னிதியை கொண்ட கோவில் கருவறையில் முருகப்பெருமான் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
    • இயற்கை எழில் சூழ்ந்த மலை மீது அமைந்திருக்கும் இந்த திருக்கோவிலுக்கு வந்தாலே மன அமைதி கிடைக்கும்.

    தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு பல புகழ்பெற்ற மலைக்கோவில்கள் உள்ளன. அந்த வகையில் மிகவும் பழமையும், வரலாற்று சிறப்பும் வாய்ந்த கோவில்தான் பதிமலை முருகன் கோவில். பசுமை நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாக திகழும் பதிமலை, கோவை மாவட்டம் குமிட்டிபதி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.

    கோவில் அமைப்பு

    கோவில், சிறிய மலைக் குன்றின் மீது சிறிய அளவில் அமைந்துள்ளது. குன்றின்மீது ஏறும் முன் சிறிய அலங்கார நுழைவுவாசல் ஒன்று அனைவரையும் வரவேற்கிறது. சுமார் 350 படிகள் கொண்ட இந்த சிறிய குன்றின் மீது முருகப்பெருமான் பாலதண்டாயுதபாணியாக அருள்பாலிக்கிறார். மலைக் கற்களைக் கொண்டு கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

    ஒரே ஒரு சன்னிதியை கொண்ட கோவில் கருவறையில் முருகப்பெருமான் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அவர் வலது கையில் வேல் ஏந்தி, பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் வகையில் அருள்பாலிக்கிறார். அவருக்கு எதிரே பலி பீடமும், மயில் வாகனமும் காட்சி தருகின்றன. கருவறை வாசலின் இடதுப்பக்கம் விநாயகப்பெருமான் வீற்றிருந்து அருள் வழங்குகின்றார்.

    இக்கோவிலின் இடது பக்கத்தில் அன்னை சக்தி தேவி தனிச் சன்னிதியில் இருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு எதிரே சிம்ம வாகனமும், நடப்பட்ட சூலங்களும், கொடி மரமும் காட்சி தருகின்றன. இக்குன்றின் மேற்பகுதியில் வற்றாத கிணறு ஒன்று அமையப்பெற்றுள்ளது. இந்தக் கிணற்றில் உள்ள நீரில் தான் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

    குகை ஓவியம்

    கோவில் இருக்கும் மலைக்குன்றின் மேல் இருந்து சற்று கீழே வந்தால் மிகவும் பழமைவாய்ந்த மலைக் குகைகள் காணப்படுகின்றன. இங்கு ஆதிகால மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல சான்றுகள் உள்ளன. இங்குள்ள குகை ஓவியங்கள் சுமார் 4000 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த கோவிலும் மிகமிகப் பழமையானது என்றே கூறப்படுகிறது.

    பழங்காலத்தில் இப்பகுதியில் யானை வளர்ப்பு மற்றும் பயிற்சிகள் அளிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல் யானைச் சந்தையும் நடைபெற்றதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சேர- சோழ போர்களின் போது இம்மலை போர்வீரர்களுக்கு கண்காணிப்பு கோபுரம் போல் பயன்பட்டதாகவும், ஆதித் தமிழர்கள் வழிபட்ட முருகன் கோவில் இது என்றும் கூறப்படுகிறது.

    வழிபாடு

    இயற்கை எழில் சூழ்ந்த மலை மீது அமைந்திருக்கும் இந்த திருக்கோவிலுக்கு வந்தாலே மன அமைதி கிடைக்கும் என்கிறார்கள். திருமணத் தடை விலகவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். இந்த முருகப்பெருமானை வழிபட்டால் பிடித்தமான வேலை, சொந்த வீடு யோகம் போன்றவை கிட்டும் என்று பலன் பெற்ற பக்தர்கள் கூறுகிறார்கள்.

    கோவிலில் முருகனுக்கு உரிய கார்த்திகை, சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி பூஜைகளும், அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.

    இக்கோவிலுக்குச் செல்ல இரண்டு படி வழிகள் உள்ளன. ஒன்று அந்தக் காலத்தில் இக்கோவிலுக்குச் செல்ல பயன்படுத்தப்பட்ட படிகள் போன்று மலையிலேயே செதுக்கப்பட்ட கரடு முரடான பாதை. மற்றொன்று தற்போது பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட எளிதாக ஏறிச் செல்லக்கூடிய படிப் பாதையாகும்.

    கோவில், காலை 9.30 மணி முதல் மதியம் 2 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    கோயம்புத்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் வழியில் 20 கிலோமீட்டர் தொலைவில் இந்த குமிட்டிபதி மலைக்கோவில் அமைந்துள்ளது.

    • திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை அகற்ற கோரி இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தின.
    • கந்தர் மலை அல்ல, அது சிக்கந்தர் மலை அல்ல என்று எச். ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நடித்துள்ள படம் கந்தன் மலை.

    அண்மையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை அகற்ற வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது திருப்பரங்குன்றம் என்பது கந்தர் மலை, அது சிக்கந்தர் மலை அல்ல என்று எச். ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    திருப்பரங்குன்றம் விவகாரத்தை மையமாக வைத்து தான் கந்தன் மலை திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் எச் ராஜா முறுக்கு மீசையுடன் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும் படத்தின் போஸ்டரில் அவருக்கு 'தர்மபோராளி' என்ற பட்டப்பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கந்தன் மலை திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை எச்.ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் எச் ராஜா முறுக்கு மீசையுடன் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் இருக்கிறார்.
    • படத்தின் போஸ்டரில் அவருக்கு ’தர்மபோராளி’ என்ற பட்டப்பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

    பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நடித்துள்ள "கந்தன் மலை" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

    ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் எச் ராஜா முறுக்கு மீசையுடன் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் இருக்கிறார். மேலும் படத்தின் போஸ்டரில் அவருக்கு 'தர்மபோராளி' என்ற பட்டப்பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

    அண்மையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை அகற்ற வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது திருப்பரங்குன்றம் என்பது கந்தர் மலை, அது சிக்கந்தர் மலை அல்ல என்று எச். ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஆகவே திருப்பரங்குன்றம் விவகாரத்தை மையமாக வைத்து தான் கந்தன் மலை என்று உருவாகியுள்ளதா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    • ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன.
    • அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதன்படி,

    * தை மாதம் வரும் தை கிருத்திகை,

    * கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை

    * ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை

    இந்த மூன்றும் தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களாகும்.

    ஆடி மாதக்கிருத்திகை ஏன் விசேஷம் என்றால் மழைக்காலத் தொடக்கமான தட்சணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், உத்தராயனம் திருமணம், உபநயனம், கிரஹப் பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றதாகவும் சொல்லப்படுகிறது.

    ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.

    தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

    ஆடிக்கிருத்திகை தினமான நாளை பெண்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

    ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள்.

    ஆடிக்கிருத்திகை அன்று பழனியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

    இந்நாளில் பக்தர்கள் காவடி எடுத்து தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    கயிலை நாதனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதிர்ந்த ஆறு பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக மாற அந்தக் குழந்தைகளை கார்த்திகை பெண்கள் எடுத்து சீராட்டி பாராட்டி வளர்த்தார்கள்.

    உலக மக்களின் நன்மைக்காக உதித்த அந்த சரவணனை வளர்த்த கார்த்திகைப் பெண்களையும் சேர்த்து நினைவுகூரும் வகையில் ஆடிக் கிருத்திகை தினத்தன்று முருகனைப் போற்றி பிராத்தனைகள் நிறைவேற்றுவது வழக்கம்.

    குறிப்பாக திருத்தணியில் தெப்ப உற்சவம் ஆடிக்கிருத்திகையன்று ஆரம்பிக்கிறது. அரக்கர்களின் செருக்கழித்து முருகன் ஓய்வெடுத்த திருத்தலம் திருத்தணி ஆகும்.

    அந்த தினத்தில் இங்கு அரக்கர்கள் வீழ்ச்சிக்கும் மக்கள் மகிழ்ச்சிக்கும் வழிவகுத்துக் கொடுத்த இறைவனை நினைத்து பல்வேறு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    • முருகன் கோவிலில் 7 நிலை கொண்ட 125 அடி ராஜ கோபுரத்தில் உள்ள கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.
    • கோவிலில் இன்று காலை 7.30 மணி முதல் பொது தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி

    https://www.youtube.com/live/5dgMci4ZViE?si=IgcQJDyqLXdY1tqYஅரோகரா அரோகரா என்ற பக்தர்களின் முழக்கத்திற்கு மத்தியில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முருகன் கோவிலில் 7 நிலை கொண்ட 125 அடி ராஜ கோபுரத்தில் உள்ள கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று காலை 7.30 மணி முதல் பொது தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி என அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்துள்ளார்.

    மேலும், வழக்கமாக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அனுமதிக்கப்படும் சிறப்பு கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

    • தமிழிசை சௌந்தரராஜன் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற நிலையில், செல்வப்பெருந்தகை அனுமதிக்கப்படவில்லை
    • ‘ வழிபாட்டுத் தீண்டாமை’யை ஒழிக்க உறுதியான நடவடிக்கை தேவை

    வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கில் செல்வப்பெருந்தகையை அனுமதிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழிசை சௌந்தரராஜன் குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற நிலையில், செல்வப்பெருந்தகை அனுமதிக்கப்படவில்லை.

    இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வப்பெருந்தகை, "2000 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பிரச்சனையை ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது. அதிகாரிகள் மெத்தனப்போக்கை கடைபிடித்துள்ளனர். முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக் கூடாது என்பதால் மக்களோடு மக்களாக தரிசித்தேன்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகைக்கு ஆதரவாக விசிக எம்.பி. ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களை சாதி அடிப்படையில் தடுத்து நிறுத்தினார்களா? அதற்குக் காரணமான அதிகாரிகள் யார் ? என்பதை அறிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அறநிலையத்துறை அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அவர்கள்மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் . தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக் கோயில்களில் தொடரும் ' வழிபாட்டுத் தீண்டாமை'யை ஒழிக்க உறுதியான நடவடிக்கை தேவை" என்று தெரிவித்துள்ளார்.

    ×