search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "female"

    • சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி வெள்ளகரடு பகுதியை சேர்ந்தவர் முத்து. இவர் கம்ப்ரசர் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார்.
    • ஆத்திர மடைந்த சுந்தரம் கடையில் பழம் வெட்டுவதற்காக வைத்திருந்த சூரி கத்தியால் கண்ணம்மாளை கை, மார்பு, வயிறு பகுதியில் சரமாரியாக குத்தினார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி வெள்ளகரடு பகுதியை சேர்ந்தவர் முத்து. இவர் கம்ப்ரசர் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கண்ணம்மாள் (37). இவர் தாரமங்கலம் அருகே பவளத்தானூரில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    கண்ணம்மாளின் கடைக்கு அருகே சின்னப்பம் பட்டியை சேர்ந்த சுந்தரம் என்பவரும் பழக்கடை வைத்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது.

    இந்த நிலையில் கண்ணம்மாளிடம் இருந்து முத்துவின் கம்ப்ரசர் வாகனத்தின் ஆர்.சி. புக்கை வாங்கிய சுந்தரம் அதை அடமானம் வைத்து பணம் வாங்கியுள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் ஆர்.சி. புக்கை திரும்ப தராததால் கண்ணம்மாள் புக்கை திரும்ப வாங்கி தரும்படி சுந்தரத்திடம் வற்புறுத்தி வந்துள்ளார்.

    பலமுறை கேட்டும் புக்கை திருப்பு தராததால் கோபமடைந்த கண்ணம்மாள் நேற்று நங்வள்ளி பகுதிக்கு வந்த சுந்தரத்திடம் ஆர்.சி. புக்கை திரும்ப தரவில்லை என்றால் இதுகுறித்து தாரமங்கலம் போலீசில் புகார் அளிக்க போவதாக மிரட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    அப்போது ஆத்திர மடைந்த சுந்தரம் கடையில் பழம் வெட்டுவதற்காக வைத்திருந்த சூரி கத்தியால் கண்ணம்மாளை கை, மார்பு, வயிறு பகுதியில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த கண்ணம்மாள் அலறியபடி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் சுந்தரம் அங்கி ருந்து தப்பியோடிவிட்டார்.

    பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கண்ணம்மாளை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நங்கவள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சுந்தரத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • கடந்த 26-ந் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர்.
    • மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தூங்கிக் கொண்டிருந்த நவீனாவை காணவில்லை.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆயிபா ளையம் தேவேந்திரன் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜா, இவரது மனைவி லட்சுமி. இவர்களது மூத்த மகள் கவிதா (30), இளைய மகள் நவீனா (26) இவர் பொறியியல் கல்லூரி பட்டதாரி.

    மூத்த மகள் கவிதாவை வேலகவுண்டன்பட்டி அருகே உள்ள முசிறி காட்டுக்காடு தேவேந்திரன் தெருவை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

    இந்நிலையில் கவிதா வின் தங்கை நவீனா கடந்த 2 வாரமாக தனது

    அக்கா கவிதா வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலை யில் கடந்த 26-ந் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தூங்கிக் கொண்டிருந்த நவீனாவை காணவில்லை.

    இது குறித்து கவிதா தனது தாய் லட்சுமிக்கு தகவல் தெரிவித்துள்ளார். லட்சுமி உறவினர்கள் வீடுகளிலும், நண்பர்கள் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தேடிப்பார்த்துள்ளார். ஆனால் நவீனாவை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து லட்சுமி வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் வழக்கு பதிவு செய்து நவீனா இரவில் எங்காவது தானாகவே சென்று விட்டாரா? அல்லது இரவு நேரத்தில் வெளியில் வந்த போது எவராவது கடத்திச் சென்று விட்டனரா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேரளம் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • சூர்யா வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாா்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த பேரளம் அருகே உள்ள வடுகக்குடி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன்.

    இவருடைய மகள் சூர்யா (வயது20). இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாா்.

    இதனால் மனமுடைந்த சூர்யா வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து மயங்கி விழுந்தார்.

    அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக இறந்தாள்.

    இது குறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவித்ரா வீட்டின் மேல் உள்ள இரும்பு கம்பியில் சேலையில் தூக்குமாட்டி தொங்கியுள்ளார்.
    • திருமணமாகி 5 வருடங்களே ஆகியுள்ளதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம சர்க்கரை கவுண்டர் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பவித்ரா (24). இவர்களுக்கு திருமண மாகி 5 வருடங்கள் ஆகிய நிலையில் 2½ வயதில் நவின் என்ற மகன் உள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் பவித்ரா வீட்டில் அவரது கணவர் உள்ளிட்ட உறவினர்களிடம் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

    சிறிது நேரம் கழித்து உறவினர்கள் சென்று விட்டனர். வேலை முடிந்து மணிகண்டன் வீட்டிற்கு வந்து பவித்ராவை கூப்பி ட்டு உள்ளார். எந்த பதிலும் வராததால் வீட்டின் கதவை தட்டி பார்த்துள்ளார்.

    இதனையடுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பவித்ரா வீட்டின் மேல் உள்ள இரும்பு கம்பியில் சேலையில் தூக்குமாட்டி தொங்கியுள்ளார்.

    உடனே உறவினர்கள் உதவியுடன் பவித்ராவை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே பவித்ரா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தற்கொலை செய்து கொண்ட பவித்ராவிற்கு திருமணமாகி 5 வருடங்களே ஆகியுள்ளதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.

    • காந்தி மியூசியம் அருகே பெண் அலுவலரிடம் செயினை வாலிபர்கள் பறித்தனர்.
    • அமுதாவிடம் செயின் பறித்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அருகே மாத்தூர் குருத்தூரை சேர்ந்தவர் அமுதா (வயது52). இவர் சமூக நலத்துறையில் கிராம பெண்கள் நல அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    சித்திரை திருவிழாவை யொட்டி நடக்கும் பொருட்காட்சியில் சமூக நலத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் இருந்து இரவு வீட்டுக்கு திரும்பினார்.

    அவர் காந்தி மியூசியம் ரோட்டில் சென்றபோது பைக்கில் அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச்செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து அமுதா தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதாவிடம் செயின் பறித்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • பிறந்த பெண் குழந்தை ஒரே நாளில் இறந்தது.
    • பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அல்லிகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராம் (வயது34). இவரது மனைவி ராதிகா (32). இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராதிகா மீண்டும் கர்ப்பமடைந்தார்.

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவ மனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்று (8-ந் தேதி) அவருக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது. அதற்கு பின்பு டாக்டர்கள் பரிசோதனைக்கு பின்பு தாயும், சேயும் நலமுடன் இருந்தனர்.

    இந்த நிலையில் அந்த குழந்தை இன்று காலை இறந்தது. பிறந்து நலமுடன் இருந்த பெண் குழந்தை ஒரே நாளில் இறந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மருத்துவமனைக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மெரினா கடற்கரையில் தங்கி, அங்கு வருபவர்களிடம் யாசகம் பெற்று குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்து வந்ததாக தெரிவித்தார்.
    • போலீசார் 2 நாட்களாக விசாரித்தும் எந்த தகவலையும் அவர் தெரிவிக்காததால் போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகே நேற்று முன்தினம் இரவு நடைபாதையில் இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது அருகே 2 வயது பெண் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. 6 மாத ஆண் குழந்தை அழுதபடி காணப்பட்டது.

    அப்போது கடற்கரைக்கு வந்த சிலர் அந்த பெண்ணை எழுப்பியபோது அவர் எழுந்திருக்கவில்லை. இது குறித்து அவர்கள் மெரினா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மயங்கி கிடந்த பெண்ணை பார்த்தனர். அப்போது அவர் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது. அருகில் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை பசி மயக்கத்தில் காணப்பட்டது. 6 மாத ஆண் குழந்தையும் பசியால் அழுது கொண்டு இருந்தது.

    இதையடுத்து அந்த பெண்ணையும் 2 குழந்தைகளையும் போலீசார் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பசி மயக்கத்தில் இருந்த 2 வயது குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு போலீசார் உணவு வாங்கி கொடுத்தனர். 6 மாத ஆண் குழந்தையும் பால் கொடுத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே போதை தெளிந்த நிலையில் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பெண் ஆதரவற்ற நிலையில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக மெரினா கடற்கரையில் தங்கி, அங்கு வருபவர்களிடம் யாசகம் பெற்று குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்து வந்ததாக தெரிவித்தார்.

    அந்த பெண்ணிடம் போலீசார் பெயர், கணவர் பெயர், சொந்த ஊர் பற்றிய விவரங்களை கேட்டனர். இந்தியில் பேசிய அவர் போலீசார் கேட்ட எந்த விவரங்களையும் சொல்ல மறுத்துவிட்டார். அந்த பெண் சொந்த மாநிலத்தின் பெயரை சொன்னால் அந்த மாநிலத்தை சேர்ந்தவரை வரவழைத்து அந்த பெண்ணிடம் பேச வைத்து அவரைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று போலீசார் திட்டமிட்டனர். ஆனால் அந்த பெண் சொந்த மாநிலத்தின் பெயரையும் சொல்ல மறுத்துவிட்டார்.

    மேலும் அந்த பெண்ணிடம் குழந்தைகளுடன் ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்து விடுகிறோம் என்று போலீசார் கூறினார்கள். அதற்கு மறுத்த அவர் சிகிச்சைக்கும் ஒத்துழைக்காமல் ஆஸ்பத்திரியில் இருந்து திடீரென்று ஓட்டம் பிடித்தார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை பிடித்து வந்து சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

    போலீசார் 2 நாட்களாக விசாரித்தும் எந்த தகவலையும் அவர் தெரிவிக்காததால் போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். அந்த பெண் காப்பகத்துக்கு செல்லமாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளார். என்னை மீண்டும் மெரினா கடற்கரைக்கே அனுப்புங்கள். ஏதாவது வேலை செய்து என் 2 குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்வேன் என்று போலீசாரிடம் கூறி வருகிறார்.

    அந்த பெண்ணுக்கும் 2 குழந்தைகளுக்கும் எப்படி ஆதரவு கொடுப்பது என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்கள்.

    • மனைவி ரேவதி (33). செவிலியர்.
    • அக்கம் பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் ரேவதி கிடைக்கவில்லை.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் கோபி பா.நஞ்சகவுண்டன்பாளையம் வேங்கையம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரகுபதி( 42). பெயிண்டர்.

    இவரது மனைவி ரேவதி (33). செவிலியர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் ரேவதி கடந்த 6-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் அவர் மீ்ண்டும் வீடு திரும்பவில்லை.

    அக்கம் பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் ரேவதி கிடைக்கவில்லை.

    இது குறித்து ரகுபதி கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ரேவதியை தேடி வருகின்றனா்.

    • பெண் பயணி தவறவிட்ட பணத்தை ஆட்டோ டிரைவர் போலீசில் ஒப்படைத்தார்.
    • தவறவிட்ட பணப்பையை நேர்மையாக ஒப்ப டைத்த ஆட்டோ டிரை வர் பாண்டியை போலீசார் பாராட்டி சால்வை அணி வித்தனர்.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ரெங்கநாதன் என்பவரின் மனைவி லதா. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் துக்கம் விசாரிக்க மதுரைக்கு வந்துள்ளார். அவர் தனது உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றுவிட்டு திரும்பிய போது அவர் வைத்திருந்த பணப்பையை ஆட்ேடாவில் விட்டு விட்டுச் சென்று விட்டார்.

    பின்னர் அவர் வீட்டுக்கு சென்றதும் ஆட்டோவில் பணப்பையை தவறவிட்டது நினைவுக்கு வந்தது. ஆனால் அவர் பயணம் செய்த ஆட்டோவின் பதிவு எண் பற்றி எதுவும் அவருக்கு தெரியவில்லை. அதனால் எப்படி ஆட்டோவை கண்டு பிடிப்பது? என குழப்பம் அடைந்தார்.

    இந்த நிலையில் பயணி யின் பணப்பையை கண்டெ டுத்த ஆட்டோ டிரைவர் பாண்டி என்பவர் அதனை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் ஒப்படைத்தார். அதனை போலீசார் சோதனை செய்து பார்த்த போது அதில் ஒரு ஏ.டி.எம். கார்டு மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது. போலீசார் ஏ.டி.எம். கார்டு மூலம் ஆய்வு செய்து ஆட்டோவில் பயணம் செய்த பெண் பயணியின் முகவரியை கண்டுபிடித்தனர். பின்னர் பணத்தை தவற விட்ட பயணிக்கு தகவல் தெரி வித்தனர்.

    அதன்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு வந்த அந்த அந்த பயணியின் கணவர் ரெங்கநாதனிடம் போலீசார் முன்னிலையில் ஆட்டோ டிரைவர் பணப்பையை ஒப்படைத்தார். பெண் பயணி தவறவிட்ட பணப்பையை நேர்மையாக ஒப்ப டைத்த ஆட்டோ டிரை வர் பாண்டியை போலீசார் பாராட்டி சால்வை அணிவித்தனர்.

    • பெண் பயணி தவறவிட்ட பணத்தை ஆட்டோ டிரைவர் போலீசில் ஒப்படைத்தார்.
    • தவறவிட்ட பணப்பையை நேர்மையாக ஒப்ப டைத்த ஆட்டோ டிரை வர் பாண்டியை போலீசார் பாராட்டி சால்வை அணி வித்தனர்.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ரெங்கநாதன் என்பவரின் மனைவி லதா. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் துக்கம் விசாரிக்க மதுரைக்கு வந்துள்ளார். அவர் தனது உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றுவிட்டு திரும்பிய போது அவர் வைத்திருந்த பணப்பையை ஆட்ேடாவில் விட்டு விட்டுச் சென்று விட்டார்.

    பின்னர் அவர் வீட்டுக்கு சென்றதும் ஆட்டோவில் பணப்பையை தவறவிட்டது நினைவுக்கு வந்தது. ஆனால் அவர் பயணம் செய்த ஆட்டோவின் பதிவு எண் பற்றி எதுவும் அவருக்கு தெரியவில்லை. அதனால் எப்படி ஆட்டோவை கண்டு பிடிப்பது? என குழப்பம் அடைந்தார்.

    இந்த நிலையில் பயணி யின் பணப்பையை கண்டெ டுத்த ஆட்டோ டிரைவர் பாண்டி என்பவர் அதனை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் ஒப்படைத்தார். அதனை போலீசார் சோதனை செய்து பார்த்த போது அதில் ஒரு ஏ.டி.எம். கார்டு மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது. போலீசார் ஏ.டி.எம். கார்டு மூலம் ஆய்வு செய்து ஆட்டோவில் பயணம் செய்த பெண் பயணியின் முகவரியை கண்டுபிடித்தனர். பின்னர் பணத்தை தவற விட்ட பயணிக்கு தகவல் தெரி வித்தனர்.

    அதன்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு வந்த அந்த அந்த பயணியின் கணவர் ரெங்கநாதனிடம் போலீசார் முன்னிலையில் ஆட்டோ டிரைவர் பணப்பையை ஒப்படைத்தார். பெண் பயணி தவறவிட்ட பணப்பையை நேர்மையாக ஒப்ப டைத்த ஆட்டோ டிரை வர் பாண்டியை போலீசார் பாராட்டி சால்வை அணிவித்தனர்.

    • இவருக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
    • இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் வீட்டில் இருந்த லட்சுமி திடீரென மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை வித்யா நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30). தொழிலாளி . இவருக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

    லட்சுமியின் தாயார் இறந்ததை அடுத்து அவரது தந்தை 2-வது திருமணம் செய்து கொண்டு 2-வது மனைவியுடன் வசித்து வருகிறார். இதனால் லட்சுமியின் தங்கை தனியாக வசித்து வந்தார்.

    இதையடுத்து லட்சுமி தனது தங்கை மகேஸ்வரியை (22) தனது கணவர் வீட்டுக்கு அழைத்து வந்தார். அங்கு தங்கியிருந்தார். சதீஷ்குமார் லட்சுமியின் தங்கை மகேஸ்வரியை விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளார். தங்கையை பிரிய மனம் இல்லாத லட்சுமிக்கும், கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் வீட்டில் இருந்த லட்சுமி திடீரென மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்

    கொண்டார். தீயின் தாக்கத்தால் அலறி துடித்த லட்சுமியை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் லட்சுமி சிகிச்சை சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கீழக்கரை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • முதல்வர் காப்பீடு திட்டத்தில் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் அருகே கிருஷ்ண புரத்தைச் சேர்ந்தவர் சிவனா பிள்ளை. இவர் கீழக்கரையில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காளீஸ்வரி (வயது39).

    இவர் 8 மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு இணைப்பு பகுதியில் முறிவு ஏற்பட்டு சிரமம் அடைந்து வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பார்த்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.

    இதையடுத்து காளீஸ்வரி கீழக்கரை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக வந்தார். தலைமை டாக்டர் ஜவாஹிர் ஹூசைன், எலும்பு சிகிச்சை டாக்டர் பிரகாஷ் ஆகியோர் இவரை பரிசோதனை செய்ததில் இடுப்பு எலும்பு இணைப்பு பகுதியில் முறிவு ஏற்பட்டு பலத்த சேதமடைந்து இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காளீஸ்வரிக்கு செயற்கை எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. டாக்டர் பிரகாஷ் தலைமையில் கமுதி அரசு மருத்துவமனை டாக்டர் பிரபாகரன், மயக்கவியல் மருத்துவர் உமா சங்கரி, செவிலியர் ஆனந்தி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் சுமார் 4 மணி நேரத்தில் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

    அறுவை சிகிச்சை செய்து கொண்ட காளீஸ்வரி கூறுகையில், தனியார் மருத்துவ மனைக்கு இணையாக அரசுமருத்துவமனையிலும் அறுவை சிகிச்சை நடத்த முடியும் என்பதை கீழக்கரையில் டாக்டர்கள் நிரூபித்து விட்டனர்.

    இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வீட்டுக்கு செல்ல உள்ளேன். ஒரு ரூபாய் கூட எனக்கு செலவில்லாமல் முதல்வர் காப்பீடு திட்டத்தில் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் அறுவை சிகிச்சை நடந்த நிலையில் கீழக்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் செயற்கை மாற்று எலும்பு அறுவை சிகிச்சை நடத்தி சாதனை படைத்த டாக்டர்களை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

    ×