பெண் அலுவலரிடம் செயின் பறித்த வாலிபர்கள்

காந்தி மியூசியம் அருகே பெண் அலுவலரிடம் செயினை வாலிபர்கள் பறித்தனர். அமுதாவிடம் செயின் பறித்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.
பெண் அலுவலரிடம்  செயின் பறித்த வாலிபர்கள்
Published on

மதுரை

மதுரை அருகே மாத்தூர் குருத்தூரை சேர்ந்தவர் அமுதா (வயது52). இவர் சமூக நலத்துறையில் கிராம பெண்கள் நல அலுவலராக பணியாற்றி வருகிறார்.

சித்திரை திருவிழாவை யொட்டி நடக்கும் பொருட்காட்சியில் சமூக நலத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் இருந்து இரவு வீட்டுக்கு திரும்பினார்.

அவர் காந்தி மியூசியம் ரோட்டில் சென்றபோது பைக்கில் அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச்செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அமுதா தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதாவிடம் செயின் பறித்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com