என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பெண் பயணி தவறவிட்ட பணத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்
- பெண் பயணி தவறவிட்ட பணத்தை ஆட்டோ டிரைவர் போலீசில் ஒப்படைத்தார்.
- தவறவிட்ட பணப்பையை நேர்மையாக ஒப்ப டைத்த ஆட்டோ டிரை வர் பாண்டியை போலீசார் பாராட்டி சால்வை அணி வித்தனர்.
மதுரை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ரெங்கநாதன் என்பவரின் மனைவி லதா. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் துக்கம் விசாரிக்க மதுரைக்கு வந்துள்ளார். அவர் தனது உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றுவிட்டு திரும்பிய போது அவர் வைத்திருந்த பணப்பையை ஆட்ேடாவில் விட்டு விட்டுச் சென்று விட்டார்.
பின்னர் அவர் வீட்டுக்கு சென்றதும் ஆட்டோவில் பணப்பையை தவறவிட்டது நினைவுக்கு வந்தது. ஆனால் அவர் பயணம் செய்த ஆட்டோவின் பதிவு எண் பற்றி எதுவும் அவருக்கு தெரியவில்லை. அதனால் எப்படி ஆட்டோவை கண்டு பிடிப்பது? என குழப்பம் அடைந்தார்.
இந்த நிலையில் பயணி யின் பணப்பையை கண்டெ டுத்த ஆட்டோ டிரைவர் பாண்டி என்பவர் அதனை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் ஒப்படைத்தார். அதனை போலீசார் சோதனை செய்து பார்த்த போது அதில் ஒரு ஏ.டி.எம். கார்டு மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது. போலீசார் ஏ.டி.எம். கார்டு மூலம் ஆய்வு செய்து ஆட்டோவில் பயணம் செய்த பெண் பயணியின் முகவரியை கண்டுபிடித்தனர். பின்னர் பணத்தை தவற விட்ட பயணிக்கு தகவல் தெரி வித்தனர்.
அதன்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு வந்த அந்த அந்த பயணியின் கணவர் ரெங்கநாதனிடம் போலீசார் முன்னிலையில் ஆட்டோ டிரைவர் பணப்பையை ஒப்படைத்தார். பெண் பயணி தவறவிட்ட பணப்பையை நேர்மையாக ஒப்ப டைத்த ஆட்டோ டிரை வர் பாண்டியை போலீசார் பாராட்டி சால்வை அணிவித்தனர்.