என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண்"
- எதிர் வீட்டில் இருந்த பெண் துடைப்பக்கட்டையுடன் ஓடிவந்தார்.
- குத்துச்சண்டை வீரர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்.
அரியானா மாநிலத்தின் பிவானி மாவட்டத்தில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவின் படி, தெருவொன்றில் நின்று கொண்டிருந்த நபரை நோக்கி இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த இருவர் சரமாரியாக சுடும் பகீர் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
தான் துப்பாக்கியால் சுடப்படுவதை உணர்ந்ததும், தெருவில் நின்று கொண்டிருந்த நபர் அருகில் இருந்த வீட்டிற்குள் ஓடிச் செல்கிறார். துப்பாக்கியால் சுடும் சத்தத்தை கேட்டதும் எதிர் வீட்டில் இருந்த பெண் கையில் துடைப்பக்கட்டையுடன் வேகமாக ஓடிவந்தார்.

துப்பாக்கி வைத்திருந்தவர்களிடம் ஓடிவந்த பெண், அவர்களை நோக்கி துடைப்பக்கட்டையை வீசினார். இதை கண்ட மர்ம நபர்கள் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர். இந்த சம்பவத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட நபரின் பெயர் ஹரிகிருஷ்ணன் என்றும் இவர் குத்துச்சண்டை வீரர் ரவி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.
இவருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் என்ற ரவுடிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஹரிகிருஷ்ணன் ஜாமின் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார். மர்ம நபர்கள் சுட்டதில் ஹரிகிருஷ்ணன் உடலில் நான்கு தோட்டாக்கள் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் துப்பாக்கி சூடு நடத்திய இருவர் மற்றும் அவர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற இருவரையும் போலீசார் சி.சி.டி.வி. வீடியோ காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர்.
- பெண்ணின் இடுப்பில் துப்பட்டாவால் அந்த சிறுமி கட்டப்பட்டுள்ளது
- பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள தெக்கூர் கிராமம் கல்லணை கால்வாயில் இன்று காலை 30 வயது மதிக்கதக்க பெண் மற்றும் சிறுமியின் சடலங்கள் மிதந்து வந்தன.
இதனை பார்த்த பொதுமக்கள் இரு உடல்களையும் மீட்டனர்.
உடனடியாக தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பெண்ணின் இடுப்பில் துப்பட்டாவால் அந்த சிறுமி கட்டப்பட்டுள்ளது. இவர்கள் யார்? இருவரும் தாய், மகளா ? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எப்படி இறந்தனர் போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.
இதையடுத்து அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த பெண், இடுப்பில் சிறுமியை கட்டிக்கொண்டு தற்கொலை செய்தாரா ? அல்லது யாரேனும் கொலை செய்து வீசினரா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் வீழிவரதராஜப்பெருமாள் கோவில் தெருவைச்சேர்ந்தவர் செய்யது இப்ராஹிம் மனைவி வஹிதா ரகுமான்(வயது58). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, செய்யது இப்றாஹிம் என்பவர் தனியாக வசித்து வருகிறார். இதனால், வஹிதா ரகுமானுடன், தங்கை ரஹமத் நிஷா(49) மற்றும் தாய், தந்தை சகோதரனுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபகாலமாக, தங்கை ரஹமத் நிஷாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, வயிற்றுப்போக்கு, வாந்தி மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைக்கு ஆளாகியுள்ளார். தொடர்ந்து, வஹிதா ரகுமான் நேற்று முன்தினம் மாலை, தங்கை ரஹமத் நிஷாவை, காரைக்கால் அரசு ஆஸ்பத்திருக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ரஹமத் நிஷா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து, திரு.பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- இவரது மனைவி சத்யா (வயது 35). பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
- சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து செயின் பறிப்பு ஆசாமியை தேடி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் ஜெய்நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சத்யா (வயது 35). பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமி ஒருவர் சத்யா கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை திடீரென்று பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சத்யா திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். அதற்குள் அந்த ஆசாமி அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து செயின் பறிப்பு ஆசாமியை தேடி வருகின்றனர்.
- மேச்சேரி-ேமட்டூர் சாலையில் குள்ளமுடையானூர் பெட்ரோல் பங்க் அருகில் 50 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக பொட்டனேரி கிராம நிர்வாக அதிகாரி அமுதாவிற்கு தகவல் கிடைத்தது.
- அவர் யார், எந்த ஊைர சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மாவட்டம் மேச்சேரி-ேமட்டூர் சாலையில் குள்ளமுடையானூர் பெட்ரோல் பங்க் அருகில் 50 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக பொட்டனேரி கிராம நிர்வாக அதிகாரி அமுதாவிற்கு தகவல் கிடைத்தது.
உடனே அங்கு விரைந்து சென்ற அவர் மேச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பெண்ணின் உடலில் காயம் இருந்ததால் அவர் வாகனம் மோதி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது உடலை மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார், எந்த ஊைர சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- செல்போன் வாட்ஸ்-அப்பிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ கால் வந்துள்ளது.
- கடந்த சில மாதங்களாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு:
முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலம் (45). தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவராகவும், தெலங்கானா மாநில தேர்தல் பொறுப்பாளராகவும் உள்ளார். மேலும் பல்வேறு தொழில்களும் செய்து வருகிறார்.
மோகன் குமாரமங்கலம் தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூரு பழைய விமான நிலையம் கோடிஹள்ளி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது செல்போன் வாட்ஸ்-அப்பிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ கால் வந்துள்ளது. அப்போது அவருக்கு தெரியாமலேயே அந்த அழைப்பு ஏற்கப்பட்டது.
அப்போது சத்தம் கேட்டு அவர் தனது செல்போனை எடுத்து பார்த்தார். அப்போது அதில் ஒரு இளம்பெண் நிர்வாணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அந்த வீடியோ காலை உடனடியாக துண்டித்து விட்டார். மேலும் மோசடி கும்பல் மோகன் குமாரமங்கலத்தின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து அவர் சாட்டிங் செய்தது போலவும், நிர்வாணமாக தோன்றிய பெண்ணின் வீடியோவை அவர் பார்ப்பது போன்றும் போலியாக தயாரித்து அவரை மிரட்டி பணம் கேட்டு உள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ரூ.6ஆயிரம் அந்த கும்பலுக்கு செலுத்தி உள்ளார். ஆனாலும் தொடர்ந்து அவர்கள் பணம் கேட்டு அவரை மிரட்டினர்.
இதையடுத்து மோகன் குமாரமங்கலம் கடந்த 11-ந் தேதி பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மோகன் குமாரமங்கலத்தை மிரட்டி பணம் பறித்த கும்பல் ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக பெங்களூரு பகுதியில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- கீழ்வேளூர் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்
நாகப்பட்டினம்:
கீழ்வேளூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்
வேளூர் அருகே ஆழியூர் பிரிவு சாலையில் சிக்கவலம் தோப்பு தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது 42), சிக்கல் அய்யனார்
கோவில் தெருவில் நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த நல்லபிள்ளை மனைவி போதுமணி (55)
ஆகிய 2 பேரும் சாராயம் விற்றது தெரியவந்தது.
இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமண ஆசை காட்டி கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்ணிடம் 33 பவுன் மோசடி செய்யப்பட்டுள்ளது.
- இந்த சம்பவம் குறித்து அந்த பெண் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டியை சேர்ந்தவர் மாலதி (வயது 32). இவர் முதல் கணவரை பிரிந்து 7 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இவருக் கும், ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரை சேர்ந்த ராம் குமார் என்ற வாலிபருக்கும் தொடர்பு ஏற்பட்டது. அவரை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து அவரிடம் இருந்து 33 பவுன் நகைகளை ராம்குமார் வாங்கி உள்ளார். அந்த நகைகளை தனியார் வங்கி யில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். 6 மாதங்கள் கடந்த பின்னரும் ராம்குமார் நகைகளை திரும்ப கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாலதி, ராம்குமாரிடம் இதுகுறித்து கேட்டார். அப்போது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாலதி மதுரை ஐகோர்ட்டில் மாலதி மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது ராம்குமார் கோர்ட் டில் ஆஜராகி முன்பணம் கொடுத்து விடுவதாகவும், 6 மாதம் கழித்து நகைகளை திரும்ப கொடுப்பதாகவும் கூறி உள்ளார். ஆனால் அவர் கூறியதுபோல் பணம், நகைகளை தரவில்லை. மேலும் வழக்கு வாய்தா வுக்கும் ஆஜராகவில்லை. இதையடுத்து தளவாய் புரம் போலீஸ் நிலையத்தில் மாலதி புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீயில் கருகி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பூதப்பாண்டி, நவ.2-
குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கீழ விளாங்காடு பகுதியை சேர்ந்தவர் உமா. இவரது மனைவி அவ்வையார் (வயது 49). அங்கன்வாடி பணியாளராக வேலை பார்த்து வந்த இவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.
அதன்பிறகு அவ்வையார் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இன்று காலை உமா வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்தார்.வீட்டில் அவ்வையார் மட்டும் தனியாக இருந்தார். அப்போது அவர் மண் எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய அவ்வையார் சம்பவ இடத்திலேயே கருகி பரிதாபமாக இறந்தார். வெளியே சென்று வீடு திரும்பிய உமா, மனைவி தீயில் கருகி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவ்வையார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மன வேதனை அடைந்த அருக்காணி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருக்காணியை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே தெற்குப்பாளையம் முத்துநகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி அருக்காணி (வயது 60). இவர் அங்குள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்டுவதற்கு கடன் வாங்கினார். அதனை கடந்த 4 வருடமாக மாதந்தோறும் தவணையாக பணம் செலுத்தி வந்தார்.
இ்ந்த நிலையில் இவருடைய கணவர் செல்வராஜ் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதால் அவருடைய ஒரு கால் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 4 மாதங்களாக தவணை தொகை செலுத்தவில்லை.
இந்த நிலையில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அருக்காணி வீட்டிற்கு வந்தனர். அப்போது அங்கு இருந்த அருக்காணியிடம் கடந்த 4 மாதமாக தவணை தொகை செலுத்தாததால் வீட்டை பூட்டப்போவதாக தெரிவித்தனர்.
இதனால் மன வேதனை அடைந்த அருக்காணி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தி பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருக்காணியை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.