search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband jail"

    அணைக்கட்டு அருகே வேப்பங்குப்பம் ஆதிதிராவிடர் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் மற்றும் சமையல்காரி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோட்டீஸ்வரி (60). அங்குள்ள அரசு ஆதிதிராவிடர் சிறுவர் காப்பகத்தில் சமையல் வேலை செய்து வருகிறார்.

    இவரது கணவர் வெங்கடேஸ்வரன் (வயது62). இந்த காப்பகத்தில் அதிகளவில் மலைவாழ் மக்களின் குழந்தைகள் தங்கி அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், காப்பகத்தில் உள்ள சிறுமிகளை கோட்டீஸ்வரி தனது வீட்டு வேலைக்கு உபயோகப்படுத்தி வந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி முதியவர் வெங்கடேஸ்வரன், வீட்டுக்கு வரும் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இது தொடர்பாக, வாரம் ஒரு முறை காப்பகத்துக்கு வரும் வாலாஜாவை சேர்ந்த வார்டன் மலர்விழியிடம் 3 சிறுமிகளும் புகார் செய்துள்ளனர். உடனடியாக அவர், சிறுமிகளை அழைத்து சென்று வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து, சிறுமிகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய கோட்டீஸ்வரியை கைது செய்தனர். இதையறிந்த முதியவர் வெங்கடேஸ்வரன் தலைமறைவானார்.

    இந்நிலையில், போலீசார் தீவிரமாக தேடி வருவதை அறிந்த வெங்கடேசன் வேலூர் ஜே.எம் 3-வது கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். இதையடுத்து முதியவர் வெங்டேஸ்வரன் மற்றும் கோட்டீஸ்வரி இருவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி வெற்றிமணி உத்தரவிட்டார்.

    இதையடுத்து இருவரும் ஜெயிலில் அடைக்கபட்டனர்.

    வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் முனுசாமி(வயது 29). இவர், கடந்த 2013-ம் ஆண்டு தனது மனைவி பிரியாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் மனம் உடைந்த பிரியா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனுசாமியை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள மகளிர் கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் மாநகர குற்றவியல் அரசு வக்கீல் கவுரி அசோகன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, குற்றம்சாட்டப்பட்ட முனுசாமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    விருத்தாசலம் அருகே குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த கூனங்குறிச்சியைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன்(38). இவரது மனைவி ரேக்கா(30). இவர்களுக்கு திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் சவுந்தரராஜனுக்கும் ரேக்காவிற்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 11.6.2012 அன்று ரேக்கா தன் கணவரிடம் கோபித்துக்கொண்டு விருத்தாசலம் சித்தலூரில் உள்ள தன் பாட்டி வீட்டிற்கு சென்று தங்கியிருந்தார். அங்கு சென்ற சவுந்தரராஜன் கத்தியால் ரேக்காவின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த ரேக்கா விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப்பெற்றார்.

    இந்த வழக்கு விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு விருத்தாசலம் 1-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று விசாரணைக்கு வந்த வழக்கினை மாஜிஸ்திரேட் கோபிநாத் விசாரித்தார். விசாரணையின் முடிவில் கோபிநாத்திற்கு 3 வருட சிறைத்தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
    ×