என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cook girl"

    • வெங்கடேசன் (வயது 67) வீட்டுக்கு வரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்
    • இது தொடர்பாக,விடுதி காப்பாளரிடம் 6 சிறுமிகள் புகார் செய்தனர்

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு விடுதியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லையளித்த வெங்கடேசன் (67) என்ற முதியவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோட்டீஸ்வரி (65). 2018 ஆம் ஆண்டு அங்குள்ள அரசு ஆதிதிராவிடர் சிறுவர் காப்பகத்தில் அவர் சமையல் வேலை செய்து வந்தார். இந்த காப்பகத்தில் அதிகளவில் மலைவாழ் மக்களின் குழந்தைகள் தங்கி அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், காப்பகத்தில் உள்ள சிறுமிகளை கோட்டீஸ்வரி தனது வீட்டு வேலைக்கு உபயோகப்படுத்தி வந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கோட்டீஸ்வரியின் கணவர் வெங்கடேசன் (வயது 67) வீட்டுக்கு வரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இது தொடர்பாக,விடுதி காப்பாளரிடம் 6 சிறுமிகள் புகார் செய்தனர். உடனடியாக அவர், சிறுமிகளை அழைத்து சென்று வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, கோட்டீஸ்வரி மற்றும் அவரது கணவர் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர்.

    2018ம் ஆண்டில் பதிவான இந்த வழக்கில் வெங்கடேசனுக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    இந்த வழக்கின் விசாரணையின்போதே கோட்டீஸ்வரி உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது

    அணைக்கட்டு அருகே வேப்பங்குப்பம் ஆதிதிராவிடர் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் மற்றும் சமையல்காரி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோட்டீஸ்வரி (60). அங்குள்ள அரசு ஆதிதிராவிடர் சிறுவர் காப்பகத்தில் சமையல் வேலை செய்து வருகிறார்.

    இவரது கணவர் வெங்கடேஸ்வரன் (வயது62). இந்த காப்பகத்தில் அதிகளவில் மலைவாழ் மக்களின் குழந்தைகள் தங்கி அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், காப்பகத்தில் உள்ள சிறுமிகளை கோட்டீஸ்வரி தனது வீட்டு வேலைக்கு உபயோகப்படுத்தி வந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி முதியவர் வெங்கடேஸ்வரன், வீட்டுக்கு வரும் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இது தொடர்பாக, வாரம் ஒரு முறை காப்பகத்துக்கு வரும் வாலாஜாவை சேர்ந்த வார்டன் மலர்விழியிடம் 3 சிறுமிகளும் புகார் செய்துள்ளனர். உடனடியாக அவர், சிறுமிகளை அழைத்து சென்று வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து, சிறுமிகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய கோட்டீஸ்வரியை கைது செய்தனர். இதையறிந்த முதியவர் வெங்கடேஸ்வரன் தலைமறைவானார்.

    இந்நிலையில், போலீசார் தீவிரமாக தேடி வருவதை அறிந்த வெங்கடேசன் வேலூர் ஜே.எம் 3-வது கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். இதையடுத்து முதியவர் வெங்டேஸ்வரன் மற்றும் கோட்டீஸ்வரி இருவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி வெற்றிமணி உத்தரவிட்டார்.

    இதையடுத்து இருவரும் ஜெயிலில் அடைக்கபட்டனர்.

    ×