என் மலர்
நீங்கள் தேடியது "young woman suicide"
- தனது வீட்டு மாடியில் இருந்த அர்ச்சனா நீண்ட நேரமாகியும் கீழே வரவில்லை.
- சந்தேகமடைந்த அர்ச்சனா குடும்பத்தினர் மேலே சென்று பார்த்த போது உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி எஸ்.எஸ்.புரம் அருகே உள்ள சடையாண்டி நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 52). இவருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். முருகன் துணி வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது 2-வது மகள் அர்ச்சனா (23). பி.காம் படித்து முடித்த இவர் வங்கியில் சில மாதங்கள் வேலை பார்த்தார். அதன் பிறகு வேலையின்றி வீட்டிலேயே இருந்து தனது தந்தை செய்யும் தொழிலுக்கு உதவியாக இருந்து வந்துள்ளார்.
இதனால் தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முருகன் முடிவு செய்தார். இது குறித்து அவரிடம் கேட்ட போது உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள் என தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பிறகு கலகலப்பாக யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்துள்ளார்.
நேற்று மாலை தனது வீட்டு மாடியில் இருந்த அர்ச்சனா நீண்ட நேரமாகியும் கீழே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் மேலே சென்று பார்த்த போது உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார்.
அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் ராமலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருமண ஏற்பாடுகள் பிடிக்காததால் அர்ச்சனா தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெற்றோர், ஊர் பெரியவர்களை அழைத்து காதலனை இனிமேல் தனது மகளை சந்திக்க கூடாது என தெரிவித்துள்ளனர்
- காதலனின் குடும்பத்தார் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த பெண் அதே பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி 1வது வார்டு அமராவதி பள்ளித் தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து இவரது மகள் காளீஸ்வரிக்கும் ராஜா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே காளீஸ்வரி அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டி என்ற வினோத் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
திருமணத்துக்கு பிறகும் இவர்களது உறவு நீடித்துள்ளது. இதனால் காளீஸ்வரியின் பெற்றோர் ஊர் பெரியவர்களை அழைத்து வினோத்தை இனிமேல் தனது மகளுடன் சந்திக்க கூடாது என தெரிவித்துள்ளனர்
இருந்த போதும், வினோத் தொடர்ந்து காளீஸ்வரியுடன் பழகி வந்துள்ளார். சம்பவத்தன்று நள்ளிரவு 12 மணிக்கு காளீஸ்வரியின் வீட்டுக்கு சென்ற வினோத் கதவை தட்டி அவரை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது வினோத்தின் தந்தை அன்னக்கொடி, தாய் அன்னலெட்சுமி, அழகர்ராஜா, அல்போன்சா, ஆண்டனி ஆகியோர் சேர்ந்து காளீஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த காளீஸ்வரி அதே பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காளீஸ்வரியின் தாய் பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- மனவேதனை அடைந்த கலைச்செல்வி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போரூர்:
மதுரவாயல் கங்கை அம்மன் நகர் 11-வது தெருவை சேர்ந்தவர் ராஜூ. தனியார் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி கலைச்செல்வி (வயது28). இவர்களுக்கு 1-வயதில் மகன் உள்ளான்.
கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த கலைச்செல்வி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரசாந்தும், மேகலாபிரியாவும் செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் காதலை வளர்த்தனர்.
- மேகலா பிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் பிரசாந்த் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
கோவை:
கோவை ரத்தினபுரி அருகே விசுவாசபுரம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் மேகலா பிரியா (வயது 26).
இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் சுண்டக்காபட்டி ஆகும். கோவை பீளமேட்டில் லேப்-டெக்னீசியாக வேலை பார்த்ததால் இங்கேயே தனி வீடு எடுத்து தங்கியிருந்தார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மேகலா பிரியா வேலைக்கு செல்லவில்லை. அவருடன் பணியாற்றிய ஊழியர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு பார்த்தனர். ஆனால் மேகலாபிரியா போனை எடுக்கவில்லை.
இதனால் ஊழியர்கள் நேராக அவர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரது வீட்டின் கதவு திறக்கப்படாமல் உள்பக்கமாக பூட்டிக்கிடந்தது. பலமுறை கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ரத்தினபுரி போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு நிர்வாண நிலையில் மேகலா பிரியா தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
மேகலாபிரியாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மேகலா பிரியா பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மேகலாபிரியா காதல் விவகாரத்தில் தற்கொலை என்னும் விபரீத முடிவை எடுத்திருப்பது தெரியவந்தது.
மேகலாபிரியாவும், தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கோபாலபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் (25) என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். பிரசாந்த் தனியார் நிறுவனத்தில் சூப்பிரவைசராக பணியாற்றி வந்தார்.
பிரசாந்தும், மேகலாபிரியாவும் செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் காதலை வளர்த்தனர். மேகலா பிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் பிரசாந்த் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். மேலும் மேகலாபிரியாவுடன் பேசுவதையும் நிறுத்தி உள்ளார்.
சம்பவத்தன்று 2 பேரும் செல்போனில் பேசி உள்ளனர். அப்போது 2 பேருக்கும் இடையே காரசார விவாதம் நடந்துள்ளது. அதன்பிறகு தான் காதலன் தன்னை ஏமாற்றி விட்டார், எனவே உயிரோடு வாழக்கூடாது என முடிவு செய்து மேகலாபிரியா தற்கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து தற்கொலைக்கு தூண்டுதல், எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளின் கீழ் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
மேகலா பிரியா நிர்வாண நிலையில் தூக்கில் தொங்கியது பற்றி போலீசார் விசாரித்தனர். மேகலாபிரியா கொல்லிமலை வட்டாரத்தைச் சேர்ந்த ஆதிவாசி கிராமத்தில் பிறந்து வளர்ந்துள்ளார். இவரது குலத்தைச் சேர்ந்தவர்கள் இறக்கும் முன்பு ஆடைகள் இன்றி இருக்க விரும்புவார்களாம். அந்த சம்பிரதாயத்தின் படி தான் மேகலாபிரியா ஆடைகள் இன்றி தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுஷா கிருஷ்ணராவ் இருவரும் தலைமறைவானார்கள்.
- பல்வேறு இடங்களில் அனுஷாவை தேடிய அவரது குடும்பத்தினர் அவர் காணாமல் போனதாக கோவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் கிருஷ்ணாராவ் (வயது 21) கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த அனுஷா (21) இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அனுஷாவுக்கு அதே மாவட்டத்தை சேர்ந்த பாபு (27) என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் அனுஷாவுக்கு துளி கூட விருப்பமில்லை.
கணவருடன் இருந்தாலும் தனது காதலனுடன் அடிக்கடி அனுஷா செல்போனில் பேசி வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுஷா கிருஷ்ணராவ் இருவரும் தலைமறைவானார்கள். பல்வேறு இடங்களில் அனுஷாவை தேடிய அவரது குடும்பத்தினர் அவர் காணாமல் போனதாக கோவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணாராவ், அனுஷா இருவரும் திருப்பதி வந்தனர். கோவிந்தராஜ சாமி கோவில் வடக்கு மாடவீதியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அவர்கள் தங்கி இருந்தனர். இருவரும் லாட்ஜில் கணவன், மனைவி போல உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த இருவரும் நேற்று லாட்ஜில் உள்ள அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பதி கிழக்கு போலீசார் லாட்ஜிக்கு சென்று 2 பேர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் கள்ளக்காதல் ஜோடி என்பது தெரிய வந்தது. இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விவேக் தினசரி மது குடித்து விட்டு வந்து சரண்யாவின் குடும்பத்தினரை பற்றி தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
- தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு புறப்பட்ட சரண்யாவை விவேக் தடுத்து கண்டித்தார்.
போரூர்:
சென்னை வடபழனி அழகர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விவேக், தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சரண்யா (வயது27).
இவர் நேற்று முன்தினம் இரவு திடீரென வீட்டின் படுக்கையறையில் தூக்குப்போட்டு தொங்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விவேக் மனைவி சரண்யாவை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சரண்யா நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சரண்யாவுக்கு அவரது உறவினரான விவேக்குடன் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. மேலும் விவேக் தினசரி மது குடித்து விட்டு வந்து சரண்யாவின் குடும்பத்தினரை பற்றி தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு புறப்பட்ட சரண்யாவை விவேக் தடுத்து கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த சரண்யா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
திருமணம் முடிந்து ஒரு ஆண்டே ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- மகளை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு டேனியல் ராஜா மாதவரம் பால் பண்ணை போலீசில் புகார் கொடுத்தார்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொளத்தூர்:
சென்னை மாதவரம் அடுத்த சின்னமாத்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் டேனியல் ராஜா (45). இவரது மகள் ஏஞ்சல் (23). கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த ஏஞ்சல், படிப்பை தொடராமல் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவர் தனது வீட்டு அருகே வசித்து வரும் வேன் டிரைவர் ஒருவரை கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இரு வீட்டாரும் பேசி திருமணம் செய்ய இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக தனுஷ் ஏஞ்சலிடம் பேசுவதை தவிர்த்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ஏஞ்சல் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென நிலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் மாதவரம் பால் பண்ணை போலீசார் விரைந்து வந்து ஏஞ்சல் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகளை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு டேனியல் ராஜா மாதவரம் பால் பண்ணை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவிலம்பாக்கத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- தற்கொலை குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேளச்சேரி:
கோவிலம்பாக்கம், ராஜேஸ்வரி நகர், 11-வது தெருவை சேர்ந்தவர் கமல். இவரது மனைவி அனிதா (வயது29). கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் மனவேதனை அடைந்த அனிதா வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலைசெய்து கொண்டார்.
இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருமணமான முதல் நாளில் இருந்தே காதல் திருமணம் செய்ததாக கூறி மாப்பிள்ளை வீட்டார் பிரச்சினையை கிளப்பினார்கள்.
- தினம் தோறும் அக்ஷாவை ஏதாவது குறை சொல்லி அவரை சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அக்ஷா (வயது25).
அதே பகுதியைச் சேர்ந்தவர் தஸ்தகீர். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். பின்னர் இருதரப்பு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்தின்போது 50 பவுன் நகை, ரூ.1 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள், ரூ.2 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
திருமணமான முதல் நாளில் இருந்தே காதல் திருமணம் செய்ததாக கூறி மாப்பிள்ளை வீட்டார் பிரச்சினையை கிளப்பினார்கள். தினம் தோறும் அக்ஷாவை ஏதாவது குறை சொல்லி அவரை சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே 50 பவுன் நகைகளையும் கணவர் வீட்டார் வாங்கி வைத்துக் கொண்டனர். மேலும் அக்ஷாவின் 5 பவுன் தஙக வளையல்களை கணவரின் சகோதரி எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
அக்ஷாவுக்கு தெரியாமலேயேயே இந்த வளையல்களை எடுத்துக் கொண்டனர். அந்த வளையல்களை கணவரின் சகோதரி திருடிக் கொண்டதாக அக்ஷா குற்றம் சாட்டினார்.
இதனால் அக்ஷாவுக்கும், கணவர் குடும்பத்தாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் அக்ஷாவின் தலையில் கணவன் குடும்பத்தினர் அடித்தனர். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.
அதன் பிறகு அக்ஷாவை கணவர் குடும்பத்தினர் அதிக அளவில் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அக்ஷா 5 முறை தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அத்தனை முறையும் அவர் உயிர் பிழைத்தார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அக்ஷாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அவருக்கு சோதனை அதிகரித்தது. அக்ஷாவின் பெண் குழந்தையை கணவரும், அவரது குடும்பத்தினரும் வெறுத்தனர். எங்களுக்கு பெண் குழந்தை வேண்டாம். அதை கொன்று விடு என்று அக்ஷாவை கணவர் குடும்பத்தினர் மிரட்டியதாக தெரிகிறது.
இதற்கு மேலும் கணவர் வீட்டில் இருந்தால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பயந்த அக்ஷா குழந்தையை எடுத்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
தான் உயிருடன் இருந்தால் பெண் குழந்தையை கொல்ல சொல்லி மீண்டும் தன்னை சித்ரவதை செய்வார்கள் என்று பயந்த அக்ஷா தனது மகளை காப்பாற்றுவதற்காக தனது உயிரை மாய்க்க முடிவு செய்தார்.
எலி மருந்தை தின்று அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
அக்ஷா தற்கொலை செய்வதற்கு முன்பு கணவர் வீட்டில் தனக்கு நேர்ந்த கொடுமைகளையும், தான் எதற்காக தற்கொலை செய்கிறேன் என்பதையும் வீடியோவில் வாக்குமூலமாக பதிவு செய்தார். அதன் பிறகு உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதி வைத்தார். பின்னர் எலி மருந்தை தின்று உயிருக்கு போராடினார். அவரை பெற்றோர்கள் திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அக்ஷா பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அக்ஷாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது வீடியோ பதிவு மற்றும் உருக்கமான கடிதத்தையும் கைப்பற்றினர். அந்த கடிதத்திலும், வீடியோவிலும் அக்ஷா கூறி இருப்பதாவது:-
நான் எனது கணவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பாவத்துக்கு தண்டனையாக தற்கொலை செய்து கொள்கிறேன். இந்த உலகம் எவ்வளவு மாறி விட்டது. ஆனாலும் ஏன் பெண் குழந்தையை வெறுக்கிறார்கள். பெண் குழந்தையை பெற்றெடுத்தது எனது தவறா? எனது குழந்தையை கொலை செய்ய கணவர் வீட்டார் நிர்ப்பந்தம் கொடுத்தனர். எனவே எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனது குழந்தையை காப்பாற்ற நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.
திருமணத்தின் போது எனக்கு போடப்பட்ட நகை, சீர்வரிசை பொருட்கள், திருமணத்துக்கு முன்பு எனது கணவர் வீட்டுக்கு நான் செலவு செய்த ரூ.5 லட்சம் பணம் ஆகியவற்றை திருப்பி வாங்கி அவர்களிடம் இருந்து நஷ்ட ஈட்டையும் பெற்றுக் கொள்ளுங்கள். அது எனது பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு உதவும். இது குழந்தையை பெற்ற இந்த தாயின் போராட்டம்.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
இந்த வீடியோ மற்றும் கடிதத்தின் அடிப்படையில் போலீசார் அக்ஷாவின் கணவர், மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தன் உள்பட 7 பேர் மீது வரதட்சணை கொடுமை, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ஆர்.டி.ஒ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
5 முறை தற்கொலைக்கு முயன்று 6-வது முறையாக அக்ஷா தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உளளது.
- கள்ளக்காதல் கசந்ததால் சவுடேஸ்வரி தனது வீட்டிற்கும் செல்ல முடியாமல், வாழ பிடிக்காமல் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
- இதனால் சவுடேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 35). ஜே.சி.பி. டிரைவர்.
இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் முத்துப்பாண்டிக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமான சவுடேஸ்வரி (வயது 30) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் சவுடேஸ்வரியின் வீட்டுக்கு தெரிய வரவே அங்கு தகராறு ஏற்பட்டது. இது குறித்து சவுடேஸ்வரி முத்துப்பாண்டியிடம் தெரிவித்தார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி நெகமத்துக்கு வந்தனர்.
பின்னர் 2 பேரும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். முத்துப்பாண்டி காக்கடவில் உள்ள கயிறு மில்லில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இதற்காக 2 பேரும் மில்லில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்தனர்.
சம்பவத்தன்று மில் உரிமையாளர் முத்துப்பாண்டிக்கு தொடர்பு கொண்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து அவர் குடியிருப்புக்கு சென்று பார்த்த போது சவுடேஸ்வரி தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சவுடேஸ்வரி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது குழந்தைகள் மற்றும் கணவரை தவிக்க விட்டு ஓடி வந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த படி முத்துப்பாண்டி வாழ்க்கையை கொடுக்கவில்லை. இதனால் அவரது கள்ளக்காதல் 10 மாத்தில் கசந்தது. இதன் காரணமாக சவுடேஸ்வரி தனது வீட்டிற்கும் செல்ல முடியாமல், இங்கும் வாழ பிடிக்காமல் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். இதனால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் கட்டி விளையாடுவதை பவானி பழக்கமாக்கி கொண்டார்.
- பவானி ரம்மி விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதை பார்த்து அவரது கணவர் பாக்யராஜ் மற்றும் பெற்றோர் கண்டித்தனர். ஆனால் அவர்களது பேச்சை பவானி கேட்கவில்லை.
திருவொற்றியூர்:
சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்தவர் பாக்யராஜ் (32). இவரது மனைவி பவானி (29).
இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் மெக்காட்டிக் பேரஸ், ஒரு வயதில் நோயல் கிறிஸ் ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளன.
பாக்யராஜ் கந்தன்சாவடியில் உள்ள ஹெல்த்கேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
திருமணத்துக்குப் பிறகு மண வாழ்க்கை பவானிக்கு இனிமையானதாகவே இருந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பவானிக்கு ஆர்வம் ஏற்பட்டது. எப்போதும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகமாக ஈடுபட்டார்.
பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் கட்டி விளையாடுவதை பவானி பழக்கமாக்கி கொண்டார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக வரும் விளம்பரங்கள் அவருக்கு அதில் மேலும் ஆர்வத்தை தூண்டியது. இதனால் பல்வேறு வழிகளிலும் பணத்தை தயார் செய்து பவானி ரம்மி விளையாட்டில் மூழ்கினார். இதில் அவருக்கு பண இழப்பு ஏற்பட்டது.
ஆனால் பவானி ரம்மி விளையாட்டுக்கு முழுமையாக அடிமையானதால் அதில் இருந்து அவரால் மீள முடியவில்லை.
பவானி ரம்மி விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதை பார்த்து அவரது கணவர் பாக்யராஜ் மற்றும் பெற்றோர் கண்டித்தனர். ஆனால் அவர்களது பேச்சை பவானி கேட்கவில்லை. பவானிக்கு 2 தங்ககைகள் உள்ளனர். முதல் தங்கை பாரதி எண்ணுரிலும், 2-வது தங்கை கவிதா பெரியபாளையத்திலும் வசித்து வருகிறார்கள்.
இருவரிடமும் தலா ரூ.1½ லட்சம் பணத்தை பவானி வாங்கியுள்ளார். இந்த ரூ.3 லட்சம் பணத்தையும் தனது வங்கி கணக்கில் செலுத்தி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அவர் ஈடுபட்டார். தங்கை பாரதியிடம் கடந்த 6 மாதத்துக்கு முன்பும், தங்கை கவிதாவிடம் 4 மாதத்துக்கு முன்பும் பவானி பணத்தை வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு மொத்தமாக பணத்தை இழந்துள்ளார்.
வீட்டில் இருந்த தனது 20 பவுன் நகைகளை விற்று வங்கி கணக்கில் செலுத்தியும் பவானி ரம்மி விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த நகைகளை விற்ற பணம் லட்சக்கணக்கில் இருந்துள்ளது. இவை அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக ரம்மி விளையாட்டில் செலுத்தி பணத்தை இழந்துள்ளார். இப்படி ஆன்லைன் ரம்மி விளையாட்டு மூலமாக ரூ.20 லட்சத்துக்கும் மேல் பவானி பணத்தை பறி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த 4 நாட்களுக்கு முன்பு தங்கை பாரதியிடம் முறையிட்ட பவானி மிகவும் வருத்தப்பட்டுள்ளார்.
அப்போது அவர் பவானிக்கு ஆறுதல் கூறியதுடன் இதற்கு மேல் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடாதே என்று அறிவுரை கூறி இருக்கிறார்.
இருப்பினும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த பவானி மிகுந்த மன உளைச்சலிலேயே இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு பவானி கணவர் மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இரவு 8.30 மணி அளவில் குளித்து விட்டு வருவதாக கூறி விட்டு சென்ற பவானி, நீண்ட நேரமாக அறையை விட்டு வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கணவர் பாக்யராஜ் அறைக்குள் சென்று பார்த்தார். அங்கு பவானி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த பாக்யராஜ், பவானியை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் பவானி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனை கேட்டு பவானியின் கணவர் பாக்யராஜ் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் தொடர்பாக மணலி புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பிறகு பவானியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த பலரும் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் குடும்ப தலைவியாக இருந்த 2 குழந்தைகளின் தாய் இளம் வயதிலேயே லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை செய்திருப்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை செய்து கொண்ட பவானி பி.எஸ்.சி. கணிதம் பட்ட படிப்பை முடித்துள்ளார். ஆன்லைனில் ரம்மி போன்று மேலும் பல விளையாட்டுகளும் அணிவகுத்துக் கொண்டிருக்கின்றன.
இது போன்ற விளையாட்டுகளில் படித்த இளைஞர்கள் பலரே பணம் கட்டி விளையாடி வருகிறார்கள். தொடக்கத்தில் விளையாட்டாகவே தெரியும். இந்த ஆன்லைன் விளையாட்டு போகப்போக அடிமையாக்கி அதில் மூழ்க செய்து விடும் ஆபத்தானதாகும்.
இதனை கருத்தில் கொண்டுதான் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து முன் வைக்கப்பட்டுவருகிறது.
இந்த நிலையில்தான் 2 குழந்தைகளின் தாய் ஆன்லைன் விளையாட்டுக்கு பலியாகி இருக்கிறார். இதனால் பொதுமக்களின் உயிரோடு விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளது.