என் மலர்
நீங்கள் தேடியது "புதுப்பெண் தற்கொலை"
- மணமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அனைவரும் வாழ்த்தி சென்றனர்.
- வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்ற ஹர்ஷிதா கதவை அடைத்துக்கொண்டார்.
இரு மனம் இணையும் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் ஆணும், பெண்ணும் பல கனவுகளோடும், கற்பனைகளோடும் இருப்பார்கள்.
இந்த திருமணத்தில் அடியெடுத்து வைத்த ஒரு இளம்பெண், முதல் நாளிலேயே தனது உயிரை மாய்த்துக்கொண்ட பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாயி மாவட்டம் சோமந்தூர்பள்ளியை சேர்ந்தவர் ஹர்ஷிதா (வயது 22). இவருக்கும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நாகேந்திரா என்பவருக்கும் நேற்று முன்தினம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
இந்த திருமணத்தில் உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். அனைவருக்கும் திருமண வீட்டார் விருந்து அளித்து அசத்தினர். மணமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அனைவரும் வாழ்த்தி சென்றனர்.
இதனையடுத்து சோமந்தூர் பள்ளியில் உள்ள மணமகள் வீட்டில் வைத்து புதுமணத்தம்பதியின் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்திருந்தனர். இதற்கிடையே வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்ற ஹர்ஷிதா கதவை அடைத்துக்கொண்டார். நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் திறக்கப்படவில்லை. அதன்பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மின்விசிறியில் தூக்கில் தொங்கிய மணமகளை மீட்டு உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஹர்ஷிதா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். திருமண வீடு துக்க வீடானது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இளம்பெண் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
- கணவருடன் மறுவீட்டிற்காக தாய் வீட்டிற்கு வந்த லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை
- கணவரின் குடும்பம் கூடுதல் நகை கேட்டு தொல்லை கொடுத்ததாக லோகேஸ்வரி குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருமணமான 4 நாட்களில் லோகேஸ்வரி (24) என்ற புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முஸ்லீம் நகரைச் சேர்ந்த இளம்பெண் லோகேஸ்வரி கடந்த 27-ந்தேதி பன்னீர் (37) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கணவருடன் மறுவீட்டிற்காக தனது தாய் வீட்டிற்கு நேற்று வந்த லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து லோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 3 நாட்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.
இருசக்கர வாகனம், ஏசி, கூடுதல் நகை கேட்டு தொல்லை கொடுத்ததாக லோகேஸ்வரி குடும்பத்தினர் பன்னீர், அவரது தாய், தந்தை மீது குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், கணவர் பன்னீர் (37), மாமியார் பூங்கோதை (60) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மாமனார் மற்றும் நாத்தனாரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணம் ஆன 78 நாட்களில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து பொன்னேரியில் லோகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கணவருடன் மறுவீட்டிற்காக தனது தாய் வீட்டிற்கு நேற்று வந்த லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
- லோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே திருமணமான 4-வது நாளிலே லோகேஸ்வரி (24) என்ற புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முஸ்லீம் நகரைச் சேர்ந்த இளம்பெண் லோகேஸ்வரி கடந்த 27-ந்தேதி பன்னீர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கணவருடன் மறுவீட்டிற்காக தனது தாய் வீட்டிற்கு நேற்று வந்த லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து லோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 3 நாட்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.
இருசக்கர வாகனம், ஏசி, கூடுதல் நகை கேட்டு தொல்லை கொடுத்ததாக லோகேஸ்வரி குடும்பத்தினர் பன்னீர், அவரது தாய், தந்தை மீது குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் திருமணம் ஆன 78 நாட்களில் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து பொன்னேரியில் லோகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ரிதன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- ரிதன்யாவுக்கு திருமணமாகி 3 மாதங்கள் மட்டுமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.
அவிநாசி:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை, பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரிதன்யா (வயது 27). இவருக்கும் கைகாட்டிப்புதூர் ஜெயம்கார்டன் பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணமானது.
சம்பவத்தன்று வீட்டில் இருந்து காரை எடுத்துச்சென்ற ரிதன்யா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் மொண்டிபாளையம் அருகே செட்டிபுதூரில் காருக்குள் தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரைகளை தின்ற நிலையில், ரிதன்யா பிணமாக கிடந்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் சேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ரிதன்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்ப பிரச்சனையில் ரிதன்யா விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்வதற்கு முன்பு ரிதன்யா அவரது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் சில ஆடியோக்களை அனுப்பி உள்ளார். அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அந்த ஆடியோவில், தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகிய 3 பேரும் சேர்ந்து கடுமையாக சித்ரவதை செய்வதாகவும், இந்த வாழ்க்கையை இனி தன்னால் வாழ முடியாது, மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தனக்கு உடன்பாடு இல்லை என கூறியிருந்தார்.
எனவே கணவர், மாமனார், மாமியார் சித்ரவதை காரணமாக ரிதன்யா தற்கொலை செய்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரிதன்யாவுக்கு திருமணமாகி 3 மாதங்கள் மட்டுமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது. தந்தைக்கு ஆடியோ அனுப்பி விட்டு இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- திருமணமாகி 3 நாட்களில் விபரீதம்
- ேபாலீசார் விசாரணை
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தாலுகா காக்கணபாளையம் கிராமத்தில் வசிப்பவர் மகேந்திரன் மகன் துருவன் (வயது 27) கட்டிட மேஸ்திரி.
செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் பானுப்பிரியா (வயது 25), இவரும் கட்டிடப் பணியில் கூலி வேலை செய்து வந்தனர்.
இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 3 காதல் திருமணம் செய்து கொண்டு காக்கணம் பாளையத்தில் உள்ள துருவன் வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் திடீரென குடும்ப சண்டை காரணமாக அருகில் உள்ள கிணற்றில் பானுப்பிரியா குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து குரிசிலா பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பானுப்பிரியா ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை பெற்று விவாகரத்து பெற்றுள்ளதை மறைத்ததாகவும் கணவர் திட்டியதால் அவர் கிணற்றில் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து வன்கொடுமை சட்டத்தில் துருவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காதல் திருமணம் ஆகி 3 நாட்களில் காதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இளம்பெண் உடலில் தீ வைத்து கொண்டதால் படுகாயமடைந்தார்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி அருகே சின்னமனூர் ஓடைப்பட்டி பி.கே.எஸ்.நகரை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ் மனைவி மீனா(20). இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி திருமணம் நடந்தது. கணவன்-மனைவி தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் வேலைநிமித்தமாக சென்னைக்கு சென்றார். இதனால் மீனா தனது தாய்வீட்டில் தங்கியிருந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று திடீரென தனது உடலில் தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த தாய் செல்வி, மீனாவை மீட்டு முதலுதவி செய்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிகிச்சையில் இருந்தபோது தனக்கு வாழ பிடிக்கவில்லை என தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- புதுப்பெண்ணிற்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்துள்ளது. திடீரென அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகில் உள்ள கருவேலநாயக்கன்பட்டி வாசுகி காலனியை சேர்ந்த வர் கண்ணன்பிரபு(44). ஆட்டோ டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவரது மகள் அபிநயா(18). இவருக்கும் கேரளாவை சேர்ந்த கோபிகண்ணன் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி திருமணம் நடந்தது.
அதன்பிறகு அபிநயா விற்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்துள்ளது. இத னால் புதுமண தம்பதிகளை தங்களது வீட்டிற்கு வர வழைத்தனர். அபிநயாவிற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அபிநயா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேனி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமாகி 40 நாட்களே ஆவதால் ஆர்.டி.ஓ மேல் விசாரணை நடத்த உள்ளார்.
- மதியம் வீட்டின் மேல் மாடியில் உள்ள ஒரு அறைக்கு சென்ற ரம்யா நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.
- போலீசார் வழக்குப்பதிந்து, ரம்யா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் மாவட்டம் சின்னகிணத்துப்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகள் ரம்யா (வயது 24). இவருக்கும், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் ஜெகதீஷ் என்கிற சித்திரை செல்வன் என்பவருக்கும் பெற்றோர் முன்னிலையில் கடந்த 28-ந்தேதி தாந்தோணிமலையில் ஒரு கோவிலில் வைத்து திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் மறுவீட்டு அழைப்பிற்காக நேற்று முன்தினம் காலை வெள்ளக்கோவிலில் இருந்து ரம்யா தனது கணவர் சித்திரை செல்வனுடன் புறப்பட்டு தனது தந்தை வீடான சின்னகிணத்துப்பட்டிக்கு வந்துள்ளார். பின்னர் மதியம் வீட்டின் மேல் மாடியில் உள்ள ஒரு அறைக்கு சென்ற ரம்யா நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ரம்யா மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டுக்கொண்ட நிலையில் தொங்கினார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரம்யாவின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ரம்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்து ரம்யாவின் தந்தை அழகர்சாமி மாயனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, ரம்யா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான மறுநாளே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி விசாரணை நடத்தி வருகிறார்.
- காதல் திருமணம் செய்து கொண்டனர்
- கோட்டாட்சியர் பிரேமலதா விசாரனை நடத்தினார்
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த விண்ண மங்கலம் பகுதியை சேர்ந்தவர் அனுப்பிரியா (வயது 26). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
மேலும் வங்கி தேர்வு எழுதுவ தற்காக ஆம்பூரில் உள்ள தனி யார் பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டிருந்தார். பயிற்சி வகுப்புக்கு சென்ற போது மின்னூர் பகுதியை சேர்ந்த திருமுருகன் (26) என் பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் சில மாதங்க ளாக இருவரும் காதலித்து வந்தனர்.
கடந்த 25 நாட்க ளுக்கு முன்பு திருமுருகனும், அனுப்பிரியாவும் ஆம்பூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு மின்னூரில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அனுப் பிரியா வீட்டில் உள்ள மின்வி சிறியில் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் தாலுகா போலீசார் அனுப்பிரியா வின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக ஆம்பூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அனுப்பிரியா தற்கொலை செய்து கொண்டது குறித்து தகவலறிந்து வந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். மேலும் அனுப்பிரியாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவத்தால் போலீஸ் நிலையம் முன்பாக கூடுதலாக போலீசார் குவிக்கப்பட் டனர். திருமணமாகி 25 நாட் களே ஆவதால் அனுப்பிரியா சாவுக்கான காரணம் குறித்து வாணியம்பாடி கோட்டாட் சியர் பிரேமலதா விசாரனை நடத்தினார்.
இந்த நிலையில் திருமுரு கனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- திருமணம் நடைபெற்று 3-வது நாளிலேயே மணப்பெண் தற்கொலை செய்து கொண்டிருப்பதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.
- புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இருவீட்டாரின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி:
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 31). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், திருச்சி தாளக்குடி மகாலட்சுமி நகர் டேவிட் என்பவரின் மகள் ரெஸ்பாகா (25) என்பவருக்கும் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து மறுவீடு அழைப்பிற்காக பெண்ணின் வீட்டிற்கு புதுமண தம்பதியினர் அழைத்து செல்லப்பட்டனர். பெற்றோர் வீட்டுக்கு செல்லும் ஆர்வத்தில் இருந்தார்.
அங்கு தடபுடல் விருந்து நடைபெற்றது. விருந்திற்கு பின்னர் பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்து கொண்டு மாப்பிள்ளை வீட்டார் காரில் புறப்பட்டு உள்ளனர். ஆசையுடன் வளர்த்த மகளை ஆனந்த கண்ணீருடன் பெண் வீட்டார் வழி அனுப்பி வைத்துள்ளனர்.
புது மாப்பிள்ளை, புது வாழ்வு, புது கனவுகளுடன் தனது கணவரின் அருகில் அமர்ந்து சந்தோஷமாக பயணித்துள்ளார். ஆனால் இந்த சந்தோஷ பயணம் வெகு நேரம் நீடிக்கவில்லை.
ஸ்ரீரங்கம் பகுதியில் பைபாஸ் ரோட்டில் கார் சென்று கொண்டிருந்த போது புது மணப்பெண் ரெஸ்பாகா திடீரென்று மயங்கி, ஸ்டீபன் மீது சாய்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு காரை கொண்டு சென்று உள்ளனர்.
திருவானைக்காவல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு ரெஸ்பாகாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்த புதுமாப்பிள்ளையும், அவரது வீட்டாரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். பின்னர் ஸ்டீபன் இது குறித்து மணப்பெண் வீட்டிற்கு தகவல் அளித்தார். அங்கு வந்த மணப்பெண் வீட்டார் கதறி துடித்தனர்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அங்கு வந்த கொள்ளிடம் போலீசார் புதுப்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மறுவீடு அழைப்பு விருந்திற்கு முன்னதாகவே ரெஸ்பாகா விஷம் அருந்தி இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
விரும்பாத திருமணமா அல்லது ஏதேனும் காதல் தோல்வியா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் நடைபெற்று 3-வது நாளிலேயே மணப்பெண் தற்கொலை செய்து கொண்டிருப்பதால், இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.
புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இருவீட்டாரின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கீர்த்தனா சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
கோவை மாவட்டம் புளியங்குளத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 48). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது 2-வது மகள் கீர்த்தனாவை (23) கடந்த ஜூன் மாதம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தானர்.
இந்நிலையில் கீர்த்தனா மற்றும் கார்த்திக் இருவரும் தலை ஆடி கொண்டாடுவதற்காக கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அங்கு கீர்த்தனா மற்றும் கார்த்திக்கை கோபாலகிருஷ்ணன் சரிவர கவனிக்காததால் கோபமடைந்த கார்த்திக் மற்றும் கீர்த்தனா சத்தியமங்கலத்திற்கு திரும்பி வந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று கீர்த்தனா சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த கோபாலகிருஷ்ணன் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் இதகுறித்து புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கம்பம்:
சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 52). இவர் குடும்பத்துடன் நெசவு வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஷாலினி (24) க்கும் தேனி மாவட்டம் கம்பம் அருகே சுக்காங்கால்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணராஜா என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 பேரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
கணவருடன் தனித்தகுடித்தம் நடத்தி வந்தார். இந்த நிலையில் அவரது மனைவிக்கு தெரியாமல் ரூ.3 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷாலினி தனது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சிறிது நேரத்தில் வீட்டுக்குள் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்றார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து ஷாலினியை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






