சத்தியமங்கலத்தில் புதுப்பெண் தற்கொலை

கீர்த்தனா சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலத்தில் புதுப்பெண் தற்கொலை
Published on

ஈரோடு:

கோவை மாவட்டம் புளியங்குளத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 48). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது 2-வது மகள் கீர்த்தனாவை (23) கடந்த ஜூன் மாதம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தானர்.

இந்நிலையில் கீர்த்தனா மற்றும் கார்த்திக் இருவரும் தலை ஆடி கொண்டாடுவதற்காக கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அங்கு கீர்த்தனா மற்றும் கார்த்திக்கை கோபாலகிருஷ்ணன் சரிவர கவனிக்காததால் கோபமடைந்த கார்த்திக் மற்றும் கீர்த்தனா சத்தியமங்கலத்திற்கு திரும்பி வந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று கீர்த்தனா சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த கோபாலகிருஷ்ணன் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் இதகுறித்து புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com