புதுப்பெண் தற்கொலையில் கணவர் ஜெயிலில் அடைப்பு

காதல் திருமணம் செய்து கொண்டனர் கோட்டாட்சியர் பிரேமலதா விசாரனை நடத்தினார்
புதுப்பெண் தற்கொலையில் கணவர் ஜெயிலில் அடைப்பு
Published on

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த விண்ண மங்கலம் பகுதியை சேர்ந்தவர் அனுப்பிரியா (வயது 26). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

மேலும் வங்கி தேர்வு எழுதுவ தற்காக ஆம்பூரில் உள்ள தனி யார் பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டிருந்தார். பயிற்சி வகுப்புக்கு சென்ற போது மின்னூர் பகுதியை சேர்ந்த திருமுருகன் (26) என் பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் சில மாதங்க ளாக இருவரும் காதலித்து வந்தனர்.

கடந்த 25 நாட்க ளுக்கு முன்பு திருமுருகனும், அனுப்பிரியாவும் ஆம்பூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு மின்னூரில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அனுப் பிரியா வீட்டில் உள்ள மின்வி சிறியில் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் தாலுகா போலீசார் அனுப்பிரியா வின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக ஆம்பூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அனுப்பிரியா தற்கொலை செய்து கொண்டது குறித்து தகவலறிந்து வந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். மேலும் அனுப்பிரியாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சம்பவத்தால் போலீஸ் நிலையம் முன்பாக கூடுதலாக போலீசார் குவிக்கப்பட் டனர். திருமணமாகி 25 நாட் களே ஆவதால் அனுப்பிரியா சாவுக்கான காரணம் குறித்து வாணியம்பாடி கோட்டாட் சியர் பிரேமலதா விசாரனை நடத்தினார்.

இந்த நிலையில் திருமுரு கனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com