கம்பத்தில் திருமணமான 8 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கம்பம்:

சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 52). இவர் குடும்பத்துடன் நெசவு வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஷாலினி (24) க்கும் தேனி மாவட்டம் கம்பம் அருகே சுக்காங்கால்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணராஜா என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 பேரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

கணவருடன் தனித்தகுடித்தம் நடத்தி வந்தார். இந்த நிலையில் அவரது மனைவிக்கு தெரியாமல் ரூ.3 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷாலினி தனது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சிறிது நேரத்தில் வீட்டுக்குள் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்றார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து ஷாலினியை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com