என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலிரவு"

    • மணமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அனைவரும் வாழ்த்தி சென்றனர்.
    • வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்ற ஹர்ஷிதா கதவை அடைத்துக்கொண்டார்.

    இரு மனம் இணையும் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் ஆணும், பெண்ணும் பல கனவுகளோடும், கற்பனைகளோடும் இருப்பார்கள்.

    இந்த திருமணத்தில் அடியெடுத்து வைத்த ஒரு இளம்பெண், முதல் நாளிலேயே தனது உயிரை மாய்த்துக்கொண்ட பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாயி மாவட்டம் சோமந்தூர்பள்ளியை சேர்ந்தவர் ஹர்ஷிதா (வயது 22). இவருக்கும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நாகேந்திரா என்பவருக்கும் நேற்று முன்தினம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

    இந்த திருமணத்தில் உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். அனைவருக்கும் திருமண வீட்டார் விருந்து அளித்து அசத்தினர். மணமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அனைவரும் வாழ்த்தி சென்றனர்.

    இதனையடுத்து சோமந்தூர் பள்ளியில் உள்ள மணமகள் வீட்டில் வைத்து புதுமணத்தம்பதியின் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்திருந்தனர். இதற்கிடையே வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்ற ஹர்ஷிதா கதவை அடைத்துக்கொண்டார். நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் திறக்கப்படவில்லை. அதன்பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மின்விசிறியில் தூக்கில் தொங்கிய மணமகளை மீட்டு உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஹர்ஷிதா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். திருமண வீடு துக்க வீடானது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இளம்பெண் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    செப்டம்பர் மாதம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ள பிரிட்டன் ஜோடி, தங்களது முதலிரவை வீடியோ எடுக்க ரூ.1.80 லட்சம் சம்பளம் அளிக்க தயார் என்ற அறிவிப்புடன் ஆள் தேடி வருகின்றது.
    லண்டன்:

    திருமணம் முடிந்த முதல் இரவு என்பது திருமண ஜோடியினர் மட்டும் இருக்கக் கூடிய அந்தரங்க நேரம் ஆகும். முதலிரவு மட்டுமல்ல எல்லா இரவுகளுமே தம்பதிக்கு அந்தரங்கமான இரவுகள் தான். ஆனால், பிரிட்டனை சேர்ந்த ஜோடி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    பிளம்பர், எலக்ட்ரீசியன், போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் தேவைப்படுவோர் பயன்படுத்தும் இணையதளம் ஒன்றில் சமீபத்தில் அந்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. செப்டம்பர் மாதம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ள தங்களின் முதலிரவை வீடியோ படமெடுக்க ஆள் தேவை என்பதே அந்த விளம்பரம் ஆகும். இரவு 1 -3 மணி வரை வேலை நேரம் எனவும், இதற்காக இந்திய மதிப்பில் ரூ.1.80 லட்சம் சம்பளம் வழங்கப்படும் எனவும் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.



    காதலிக்க தொடங்கிய போதே, திருமணம் செய்த பின்னர் முதலிரவை வீடியோ எடுக்க வேண்டும் என நாங்கள் இருவரும் உறுதி அளித்துக்கொண்டோம். வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளில் முதலிரவும் ஒன்று. அதனால் தான் திருமண வீடியோ போல முதலிரவையும் வீடியோ எடுக்க வேண்டும் என முடிவு செய்தோம்.

    ஆனால், எங்களின் இந்த முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. திருமணத்தை வீடியோ பதிவு செய்யும் நபரும் முதலிரவை படம் பிடிக்க மறுத்து விட்டார். இது கொஞ்சம் அசவுகரியத்தை ஏற்படுத்தும் அறிவிப்புதான். எனினும், யாரேனும் முன்வருவர் என காத்திருக்கிறோம் என அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×