என் மலர்
நீங்கள் தேடியது "இளம்பெண் தற்கொலை"
- வீட்டில் தனியாக இருந்த மனிஷா தனது குழந்தையை பக்கத்து வீட்டில் விட்டு வந்தார்.
- வீட்டில் அதிக அளவு எறும்புகள் இருப்பதை கண்டு மிரண்டு போனார்.
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் மஞ்சேரியலை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். ஐடி ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மனுஷா (வயது 25). தம்பதிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பெண் குழந்தை உள்ளது.
மனிஷாவுக்கு சிறு வயது முதலே எறும்பை கண்டு பயப்படும் மிர்மிகோ போபியா என்ற வியாதி உள்ளது. இந்த வியாதி உள்ளவர்கள் எறும்புகளை கண்டால் பயந்து அலறி நடுங்குவார்கள். மனிஷா இந்த வியாதிக்காக மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று காலை ஸ்ரீகாந்த் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த மனிஷா தனது குழந்தையை பக்கத்து வீட்டில் விட்டு வந்தார். பின்னர் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது வீட்டில் அதிக அளவு எறும்புகள் இருப்பதை கண்டு மிரண்டு போனார். எறும்புகளை கண்டு பயந்து போன மனிஷா தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது கணவருக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்தார். அதில் ஐ எம் சாரி ஸ்ரீ. என்னை மன்னித்துவிடு. குழந்தையை நன்றாக பார்த்துக் கொள். நான் உன்னை விட்டு பிரிந்து செல்கிறேன். மாமியாருக்கு சாப்பாடு போட மறந்து விடாதே என எழுதினார்.
பின்னர் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மனிஷாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எறும்புகளுக்கு பயந்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
- நிச்சயதார்த்தம் முடித்து திருமண ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.
- தர்ஷனின் வீட்டில் வைத்து இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
சென்னை:
சென்னை வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் கமிஷனர் அலுவலகம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தர்ஷன். 26 வயதான இவர், பாரிமுனையில் ஹார்டுவேர்ஸ் டீலர்ஷிப் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இவருக்கும், ராயபுரம் புதுமனைக்குப்பம் கல்மண்டபம் ரோடு பகுதியில் வசித்து வந்த ஹாசிதா என்ற 25 வயது இளம்பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 1½ ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். இதையடுத்து அண்ணாநகரில் உள்ள ஓட்டலில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ஹாசிதா மாற்றுத்திறனாளி ஆவார். சிறுவயது முதலே இடதுகால் ஊனமுற்ற நிலையில் இருந்து வந்தார். இதுபோன்ற சூழலில் தான் நிச்சயதார்த்தம் முடித்து திருமண ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்து வந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் தர்ஷனும், ஹர்சிதாவும் எப்போதும் போல பேசி பழகி வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தர்ஷன் ஹர்சிதாவுக்கு செல்போனில் பேசி உனது கேரக்டர் சரியில்லை. நீ எனக்கு வேண்டாம். உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஹர்சிதா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.
இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறிய ஹர்சிதா நான் தர்ஷனுடன் சேர்ந்து வாழ்வதற்கு விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக வேப்பேரியில் உள்ள தர்ஷனின் வீட்டில் வைத்து இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அப்போதும் தர்ஷன் மனம் மாறாமல் ஹர்சிதாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி உள்ளார்.
இதனால் மனமுடைந்த ஹர்சிதா 7-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மது பழக்கத்திற்கு அடிமையான சதீஷ், அடிக்கடி மனைவி அதுல்யாவுடன் தகராறு செய்துள்ளார்.
- சதீஷ், சந்தேகத்தின் பேரில் அதுல்யாவுக்கு பல்வேறு தொல்லைகள் கொடுத்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரளாவை சேர்ந்த பலரும் ஐக்கிய அரபு நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் கொல்லத்தை சேர்ந்த விபஞ்சிகா என்ற பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷார்ஜாவில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு கேரள இளம்பெண் ஐக்கிய அரபு எமிரேட்சில் அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார்.
குடும்ப வன்முறை காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்திருப்பதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். இது தொடர்பாக அவரது கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் கொல்லம் கோழிவிலா பகுதியை சேர்ந்தவர் அதுல்யா (வயது 30). இவருக்கும் சதீஷ் என்பவருக்கும் 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. துபாயில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக சதீஷ் பணியாற்றியதால், மனைவியுடன் ஷார்ஜாவில் வசித்து வந்தார்.
மது பழக்கத்திற்கு அடிமையான சதீஷ், அடிக்கடி மனைவி அதுல்யாவுடன் தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் தான் அதுல்யா, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். முன்னதாக அவர், தனது கணவரின் உடல் ரீதியான தாக்குதல்கள் குறித்து தனது சகோதரிக்கு போட்டோ மற்றும் வீடியோ அனுப்பி உள்ளார்.
இதனை வைத்து அதுல்யாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதில் திருமணமான 6 மாதத்தில் இருந்தே அதுல்யா பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்து வந்ததாக தெரிவித்துள்ளனர். சதீஷ், சந்தேகத்தின் பேரில் அதுல்யாவுக்கு பல்வேறு தொல்லைகள் கொடுத்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் கொடுத்துள்ள வீடியோ ஆதாரத்தில் சதீஷ், நாற்காலியை தூக்கி அடிப்பது போன்ற காட்சி உள்ளிட்ட பல்வேறு நிலைகள் உள்ளன. அதன் அடிப்படையில் கொல்லம் சவர தேக்கும்பாகம் போலீசார், சதீஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சதீஷ்-அதுல்யா தம்பதியரின் மகள் ஆராதிகா (10) தற்போது கொல்லத்தில் உள்ள தனது தாத்தா-பாட்டியுடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுஷா கிருஷ்ணராவ் இருவரும் தலைமறைவானார்கள்.
- பல்வேறு இடங்களில் அனுஷாவை தேடிய அவரது குடும்பத்தினர் அவர் காணாமல் போனதாக கோவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் கிருஷ்ணாராவ் (வயது 21) கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த அனுஷா (21) இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அனுஷாவுக்கு அதே மாவட்டத்தை சேர்ந்த பாபு (27) என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் அனுஷாவுக்கு துளி கூட விருப்பமில்லை.
கணவருடன் இருந்தாலும் தனது காதலனுடன் அடிக்கடி அனுஷா செல்போனில் பேசி வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுஷா கிருஷ்ணராவ் இருவரும் தலைமறைவானார்கள். பல்வேறு இடங்களில் அனுஷாவை தேடிய அவரது குடும்பத்தினர் அவர் காணாமல் போனதாக கோவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணாராவ், அனுஷா இருவரும் திருப்பதி வந்தனர். கோவிந்தராஜ சாமி கோவில் வடக்கு மாடவீதியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அவர்கள் தங்கி இருந்தனர். இருவரும் லாட்ஜில் கணவன், மனைவி போல உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த இருவரும் நேற்று லாட்ஜில் உள்ள அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பதி கிழக்கு போலீசார் லாட்ஜிக்கு சென்று 2 பேர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் கள்ளக்காதல் ஜோடி என்பது தெரிய வந்தது. இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மது ஸ்ரீ திடீரென வீட்டில் எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.
- இது குறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் அடுத்த தாரைக்கொங்புதூர் பகுதியை சேர்ந்தவர் வெங்க டாசலம். இவரது மனைவி மகேஸ்வரி.
இவர்களது மகள் மது ஸ்ரீ (வயது 19). இவர்கள் தற்போது சென்னி மலை அடுத்த ஈங்கூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரு கின்றனர். மதுஸ்ரீ பிறந்ததில் இருந்தே உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில் மது ஸ்ரீ திடீரென வீட்டில் எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடி யாக அவரை மீட்டு பெரு ந்துறை ஐ.ஆர்.டி.டி. அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ெதாடர்ந்து மேல் சிகி ச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மது ஸ்ரீ பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரசாந்தும், மேகலாபிரியாவும் செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் காதலை வளர்த்தனர்.
- மேகலா பிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் பிரசாந்த் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
கோவை:
கோவை ரத்தினபுரி அருகே விசுவாசபுரம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் மேகலா பிரியா (வயது 26).
இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் சுண்டக்காபட்டி ஆகும். கோவை பீளமேட்டில் லேப்-டெக்னீசியாக வேலை பார்த்ததால் இங்கேயே தனி வீடு எடுத்து தங்கியிருந்தார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மேகலா பிரியா வேலைக்கு செல்லவில்லை. அவருடன் பணியாற்றிய ஊழியர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு பார்த்தனர். ஆனால் மேகலாபிரியா போனை எடுக்கவில்லை.
இதனால் ஊழியர்கள் நேராக அவர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரது வீட்டின் கதவு திறக்கப்படாமல் உள்பக்கமாக பூட்டிக்கிடந்தது. பலமுறை கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ரத்தினபுரி போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு நிர்வாண நிலையில் மேகலா பிரியா தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
மேகலாபிரியாவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மேகலா பிரியா பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மேகலாபிரியா காதல் விவகாரத்தில் தற்கொலை என்னும் விபரீத முடிவை எடுத்திருப்பது தெரியவந்தது.
மேகலாபிரியாவும், தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கோபாலபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் (25) என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். பிரசாந்த் தனியார் நிறுவனத்தில் சூப்பிரவைசராக பணியாற்றி வந்தார்.
பிரசாந்தும், மேகலாபிரியாவும் செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் காதலை வளர்த்தனர். மேகலா பிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் பிரசாந்த் அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். மேலும் மேகலாபிரியாவுடன் பேசுவதையும் நிறுத்தி உள்ளார்.
சம்பவத்தன்று 2 பேரும் செல்போனில் பேசி உள்ளனர். அப்போது 2 பேருக்கும் இடையே காரசார விவாதம் நடந்துள்ளது. அதன்பிறகு தான் காதலன் தன்னை ஏமாற்றி விட்டார், எனவே உயிரோடு வாழக்கூடாது என முடிவு செய்து மேகலாபிரியா தற்கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து தற்கொலைக்கு தூண்டுதல், எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளின் கீழ் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
மேகலா பிரியா நிர்வாண நிலையில் தூக்கில் தொங்கியது பற்றி போலீசார் விசாரித்தனர். மேகலாபிரியா கொல்லிமலை வட்டாரத்தைச் சேர்ந்த ஆதிவாசி கிராமத்தில் பிறந்து வளர்ந்துள்ளார். இவரது குலத்தைச் சேர்ந்தவர்கள் இறக்கும் முன்பு ஆடைகள் இன்றி இருக்க விரும்புவார்களாம். அந்த சம்பிரதாயத்தின் படி தான் மேகலாபிரியா ஆடைகள் இன்றி தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
- வீட்டில் அவரது மூத்த மகள் ரஷ்னாராகாதுன் மட்டும் இருந்துள்ளார்.
- வீட்டிற்குள் சென்று பார்த்தபோது துப்பட்டாவால் தனது மகள் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பெருந்துறை:
மேற்கு வங்க மாநிலம் 24 பர்கானா மாவட்டம், ராமேஸ்வர்பூர் பகுதியை சேர்ந்தவர் ரபியுல்ஷாஜி. இவர் தனது மனைவி தஸ்நாமா, மகள்கள் ரஷ்னாராகாதுன் (வயது 20), ரிஹானாகாதூன், ரூமானாகாதூன் ஆகியோருடன் பெருந்து றையை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் குடியிருந்து வருகிறார்.
ரபியுல்ஷாஜி பெருந்துறை பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். மனைவி தஸ்நாமா, மூத்த மகள் ரஷ்னாராகாதுன் 2 பேரும் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் ரஷ்னாராகாதுன் 2 வருடங்களுக்கு முன்பு கொல்கத்தாவை சேர்ந்த ராகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து அவருடன் தங்கி இருந்தார். இதனையடுத்து கொஞ்சம் நாளிலேயே அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனது தந்தையுடன் குடியிருந்து வந்தார்.
இதனையடுத்து ரபியுல்ஷாஜியின் 2 மகள்கள் மற்றும் மனைவி மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்று இருந்தனர். வீட்டில் அவரது மூத்த மகள் ரஷ்னாராகாதுன் மட்டும் இருந்துள்ளார். ரபியுல்ஷாஜி கட்டிட வேலைக்கு சென்ற விட்டு மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்போட்டு இருந்தது.
தட்டி பார்த்து கதவு திறக்காததால் கம்பியை வைத்து ெநம்பி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது துப்பட்டாவால் தனது மகள் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை கீழே இறக்கி பார்த்தபோது மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தார்.
உடனே அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ரஷ்னாராகாதுன் இறந்து விட்டதாக கூறினார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- திருமணமான 5 ஆண்டுகளில் ஸ்மேரா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
- இருவரும் மன வருத்தத்துடன் குழந்தை இல்லாதது குறித்து பேசிக்கொண்டு இருந்தனர்.
கோவை,
கோவை விளாங்குறிச்சி ரோட்டை சேர்ந்தவர் ஹென்றி. இவரது மனைவி ஸ்மேரா (வயது 25). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை.
குழந்தைக்காக ஸ்மேரா கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குழந்தை உருவாக வில்லை. சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் மன வருத்தத்துடன் குழந்தை இல்லாதது குறித்து பேசிக்கொண்டு இருந்தனர். மேலும் கடந்த 2 நாட்களாக ஸ்மேரா சாப்பிடாமல் இருந்தார்.ஹென்றி வெளியே சென்று இருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி தனது சகோதரிக்கு வாழ்க்கையில் ேதாற்று போனதால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஆடியோ மூலம் மெசேஜ் அனுப்பினார். பின்னர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய ஹென்றி தனது மனைவி தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர் இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட ஸ்மராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறர்கள். திருமணமான 5 ஆண்டுகளில் ஸ்மேரா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
- கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- திருமணமாகி 4 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது.
கோவை,
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் இமானுவேல் (வயது 27). இவரும் தர்மபுரியை சேர்ந்த பவித்ரா (24) என்பவரும் கடந்த 2018-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் கோவை வந்தனர். இங்கு பீளமேடு காந்திமாநகர் பகுதியில் வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். இமானுவேல் கார் டிரைவராக வேலைக்கு சென்று வருகிறார்.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பின்னர் அவர்களே சமாதானம் அடைந்து கொள்வார்கள். சம்பவத்தன்று இமானுவேல் வேலைக்கு சென்று வீடு திரும்பினார்.
அப்போது பவித்ரா வாந்தி எடுத்து கொண்டு இருந்தார். இதனை பார்த்த இமானுவேல் அவரிடம் சென்று கேட்டார். அதற்கு அவர் தான் விஷத்தை குடித்து விட்டதாக தெரிவித்து உள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே பவித்ராவை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ் பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக் கப்பட்டு மேல் சிகிச்சை க்காக பவித்ராவை , இமானுவேல் கிருஷ்ண கிரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 4 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடந்து வருகிறது.
- தனலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை கணபதி அருகே உள்ள பாலாஜி லே-அவுட்டை சேர்ந்தவர் சுரேந்திரன். இவரது மனைவி தனலட்சுமி (வயது 36). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சம்பவத்தன்று சுரேந்திரன் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டு சென்றார். தனலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது திடீரென அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து உடனடியாக சுரேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக வீட்டிற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய தனது மனைவியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தனலட்சுமி இறந்து விட்டதாக தெரிவத்தனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை.
- மனமுடைந்த மம்தா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கிருஷ்ணகிரி,
கர்நாடக மாநிலம் கபயன்தொட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி மம்தா (வயது 20). இவர்கள் தேன்கனிக்கோட்டை பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மம்தாவுக்கு சமீப காலமாக உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. இதில் மனமுடைந்த மம்தா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து அவரது தந்தை சிவப்பா தந்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமாகி 7 ஆண்டுக்குள் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து டி.எஸ்.பி.முரளி விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல காவேரிபட்டணம் அய்யப்பன்கொட்டாய் பகுதியைசேர்ந்த முருகன் என்பவரது மகள் பூவரசி (15) என்ற 10-ம் வகுப்பு மாணவியும் தீராத வயிற்றுவலியால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காவேரிபட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு அபிநயாவுக்கு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
கோவை,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கருதம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. பெயிண்டர். இவரது மகள் அபிநயா (வயது 21). தனியார் நிறுவன ஊழியர். இவர் பீளமேடு அருகே உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அபிநயாவுக்கு அவரது ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு அபிநயாவுக்கு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இதனையடுத்து அவர் கோவைக்கு வந்தார்.
இதன்காரணமாக காதலர்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்டது. மேலும் அடிக்கடி 2 பேருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த வாலிபர் அபிநயாவுடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக அபிநயா மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.சம்பவத்தன்று விடுதியில் உள்ள அறையில் இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக அபிநயாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அபிநயா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






