என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை அருகேகுழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை
    X

    கோவை அருகேகுழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தற்கொலை

    • திருமணமான 5 ஆண்டுகளில் ஸ்மேரா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
    • இருவரும் மன வருத்தத்துடன் குழந்தை இல்லாதது குறித்து பேசிக்கொண்டு இருந்தனர்.

    கோவை,

    கோவை விளாங்குறிச்சி ரோட்டை சேர்ந்தவர் ஹென்றி. இவரது மனைவி ஸ்மேரா (வயது 25). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை.

    குழந்தைக்காக ஸ்மேரா கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குழந்தை உருவாக வில்லை. சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் மன வருத்தத்துடன் குழந்தை இல்லாதது குறித்து பேசிக்கொண்டு இருந்தனர். மேலும் கடந்த 2 நாட்களாக ஸ்மேரா சாப்பிடாமல் இருந்தார்.ஹென்றி வெளியே சென்று இருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி தனது சகோதரிக்கு வாழ்க்கையில் ேதாற்று போனதால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஆடியோ மூலம் மெசேஜ் அனுப்பினார். பின்னர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய ஹென்றி தனது மனைவி தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர் இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட ஸ்மராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறர்கள். திருமணமான 5 ஆண்டுகளில் ஸ்மேரா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×