என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காதலன்"
- தடுக்க வந்த காதலியின் அண்ணனையும் கத்தியால் தாக்கி உள்ளார்.
- கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பென்சில்வேனியா:
பென்சில்வேனியாவில் 49 வயதான பெஞ்சமின் என்பவர், தனது காதலியின் தலைமுடியை தனக்கு பிடிக்காத வகையில் வெட்டியதால் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். அதனை தடுக்க முயன்ற அண்ணனையும் கத்தியால் குத்தியுள்ளார்.
சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் இருந்த பெஞ்சமினை கைது செய்தனர். பின்னர் இறந்து கிடந்த காதலியையும் காயமடைந்த அண்ணனையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து அவர்களது மகள் குறித்த புகாரில், ஒருநாள் முன்னர் 50 வயதான கார்மென் மார்டினெஸ்-சில்வா முடி திருத்தம் செய்துள்ளார். அந்த புதிய ஹேர் ஸ்டைலுடன் அவர் வீடு திரும்பினார். வீட்டில் இருந்த அவரது காதலனுக்கு இந்த ஹேர் ஸ்டைல் பிடிக்கவில்லை. இதனால் காதலி பயந்து, தன் மகளின் வீட்டில் இரவைக் கழிக்க முடிவு செய்தாள்.
ஆனால் தனது காதலனால் மிகவும் பயந்துடன் இருந்த அவர், தனது மகளின் வீட்டை விட்டு தனது சகோதரனின் வீட்டிற்குச் சென்று, தங்கள் உறவு முடிந்துவிட்டதை பெஞ்சமினிடம் சொல்லுமாறு ஒரு நண்பரிடம் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த பெஞ்சமின், அவளைத் தேடி அண்ணன் வீட்டுக்குச் சென்றார். முதலில் அவள் இல்லை என்று பொய் சொல்லி அவளை அண்ணன் திருப்பி அனுப்பி வைத்தார். ஆனால் பெஞ்சமின் திரும்பி வந்து காதலியின் அண்ணனை கத்தியால் தாக்க ஆரம்பித்தார். இதனை கண்ட காதலி தடுக்க முயற்சித்தார். அப்போது அவரை சராமாறியாக தாக்கி கொலை செய்துள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டது.
- முன்னாள் காதலனை பழிவாங்க மிளகு சூப்பில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.
- உணவு ஒவ்வாமை காரணமாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் நினைத்துள்ளனர்.
நைஜீரியா நாட்டில் பிரேக் அப் செய்த காதலனை பழி வாங்க வேண்டும் என்று நினைத்த பெண், அவருக்கு மிளகு சூப்பில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். ஆனால் சூப்பை அவரது முன்னாள் காதலன் தனது நண்பர்களுடன் பகிர்ந்து குடித்ததால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
உணவு ஒவ்வாமை காரணமாக மரணம் நிகழ்ந்திருக்கலாம் என நினைத்து போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.
பின்னர் உண்மை தெரியவரவே, அப்பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- எப்போதும் தனியாக ரகசியமாக சந்திக்கவே விரும்புவார்கள்.
- தனது குடும்பம் பற்றி எந்த தகவலையும் தனது பார்ட்னரிடம் சொல்லமாட்டார்கள்.
உங்கள் காதலனோ அல்லது காதலியோ உங்களது காதல் பற்றி வெளி உலகத்திற்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் ஒரு மோசமான உறவில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதனை ஆங்கிலத்தில் பாக்கெட்டிங் உறவு என அழைக்கின்றனர்.
பாக்கெட்டிங் என்பது ஒருவர் தனது துணையை அவர்களின் குடும்பம், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் இருந்து மறைத்து தனது பாக்கெட்டில் வைப்பதை குறிக்கும் டேட்டிங் சொல்லாகும்.
பாக்கெட்டிங் உறவின் அறிகுறிகள்:
1. தனது காதல் உறவை பற்றி தங்களது குடும்பத்திற்கோ நண்பர்களுக்கோ தெரிய கூடாது என்று நினைப்பார்கள்.
2. பாக்கெட்டிங் உறவில் இருக்கும் ஒரு நபர் தனது காதல் உறவை பற்றியோ தனது துணையை குறித்து சந்தேகிக்கும் நபராக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். தனது பார்ட்னரை உறுதியாக நம்பும் ஒரு நபர் தனது காதல் உறவை பற்றி வெளி உலகிற்கு தெரியப்படுத்துவார்.
3. எப்போதும் தனியாக ரகசியமாக சந்திக்கவே விரும்புவார்கள். ஏனெனில் தங்களுக்கு தெரிந்த நபர்கள் தாங்கள் ஒன்றாக இருப்பதை பார்க்க கூடாது என்று அவர்கள் விரும்புவார்கள்.
4. உங்கள் பார்ட்னரின் நண்பர்களை நீங்கள் சந்திக்க அவர் எப்போதும் விரும்ப மாட்டார். நீங்கள் அவரது நண்பர்களை சந்திக்க விரும்பினால் அதனை மறுப்பதற்கு அவர் பல்வேறு காரணங்களை உங்களிடம் கூறுவார்.
5. சமூக ஊடகங்களில் நீங்கள் ஒன்றாக இருக்கும் தருணங்களையும் புகைப்படங்களையும் பகிர விரும்பமாட்டார்கள்.
6. தனது குடும்பம் பற்றி எந்த தகவலையும் தனது பார்ட்னரிடம் சொல்லமாட்டார்கள். சொல்லப்போனால் தனது குடும்பம் குறித்து எந்த தகவலும் தனது பார்ட்னருக்கு தெரிய கூடாது என்று நினைப்பார்கள்.
7. தனது வீட்டிற்கோ இருப்பிடத்திற்கோ தனது பார்ட்னரை அழைத்து செல்ல மாட்டார்கள். எப்போது, எங்கு, சந்திப்பது என்பதையும் அவர்கள் தான் தீர்மானிப்பார்கள்.
உங்கள் பார்ட்னரால் நீங்கள் பாக்கெட்டில் அடைக்கப்படுகிறீர்கள் என்று உணர்ந்தால், உங்கள் பார்ட்னரிடம் இதுகுறித்து உரையாடுவது அவசியம். அவர்கள் உங்களை தங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்த விரும்பவில்லை என்றால், ஏன் என்று அவர்களிடம் கேளுங்கள். உங்கள் உறவின் எதிர்காலத்தைப் பற்றி பேச அவர்கள் தயங்கினால், என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று அவர்களிடம் கேளுங்கள்.
உங்கள் பார்ட்னர் உங்களை நடத்தும் விதம் உங்களுக்கு சங்கடமாக இருந்தால், கூச்சப்படாமல் இதனை குறித்து அவர்களிடம் விளக்கம் கேளுங்கள். அவர்கள் இதனை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை என்றால் உங்கள் உறவை தொடரலாமா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
- உடலுறவுக்குப் பின்னர் பெண்ணின் பிறப்புறுப்பில் [vaginal] அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்படத் தொடங்கியுள்ளது
- பெண்ணும் அவரது காதலனும் என்ன செய்வது எனத் தெரியாமல் பயத்தில் திகைத்துள்ளனர்.
காதலனுடன் உடலுறவில் ஈடுபட்ட 23 வயது பெண் காதலனால் பிறப்புறுப்பில் ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் நவ்சரி [Navsari] மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த 23 வயது நர்சிங் பட்டதாரி மாணவி ஒருவர் தனது 26 வயது காதலனுடன் ஹோட்டல் அறையில் கடந்த செப்டம்பர் 23 அன்று பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
உடலுறவுக்குப் பின்னர் பெண்ணின் பிறப்புறுப்பில் [vaginal] அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனால் அந்த பெண்ணும் அவரது காதலனும் என்ன செய்வது எனத் தெரியாமல் பயத்தில் திகைத்துள்ளனர். பதற்றமடைந்த பெண்ணின் காதலன் ஆம்புலன்சுக்கு போன் செய்வதற்குப் பதிலாக ரத்தத்தபோக்கை நிறுத்துவது எப்படி என்று ஆன்லைனில் தேடி பெண்ணின் உறுப்பில் ரத்தம் வராமல் இருக்க துணியை அழுத்தி ரத்தத்தை தடுக்க முயன்றுள்ளார்.
ஆனால் சிறிது நேர்த்திலேயே பெண் மயக்கமடைந்த நிலையில் காதலன் தனது நண்பனுக்கு போன் செய்து அவனை வரவைத்து அவனுடன் சேர்ந்து பெண்ணை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளான். ஆனால் அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லும்படி கூறியுள்ளனர்.
அரசு மருத்துவமனைக்கு அந்த பெண் கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பெற்றோர்களிடம் மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் காதலன் முதலிலேயே ஆம்புலன்சுக்கு போன் செய்யாமல் ஆன்லைனில் உபாயம் தேடிக்கொண்டிருந்ததாலேயே பெண் உயிரிழந்துள்ளார். எனவே உயிரிழந்த பெண்ணின் காதலன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இரவில் நுழையும்போது ராஜேஷின் பெற்றோர் அவனை பார்த்துவிட்டனர்
- குஷ்பு வை சந்திக்க சந்தான் பல இரவுகளில் இதுபோல வந்து சென்றது பின்னர் தெரியவந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள ராம்நகர் கிராமத்தில் ராஜேஷ் குமார் [26] என்பவர் தனது மனைவி குஷ்பு [22], 2 வயது மகன் மற்றும் தாய் தந்தையுடன் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் குஷ்பூவை சந்திக்க அவரது சிறுவயது காதலன் சந்தான் [24] அவர்களது வீட்டுக்குள் நடு இரவில் நுழையும்போது ராஜேஷின் பெற்றோர் அவனை பார்த்துவிட்டனர்.
குஷ்பு வை சந்திக்க சந்தான் பல இரவுகளில் இதுபோல வந்து சென்றது பின்னர் தெரியவந்துள்ளது. இதை அறிந்த ராஜேஷ் குமார் கோபப்படாமல் தனது மனைவியை அவரது பால்ய கால காதலனுக்கே, முன் நின்று திருமணம் செய்து வைத்துள்ளார்.
தற்போது குஷ்பு , சந்தான் வீட்டில் புது வாழவைத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து ஊடகத்துக்குப் பேட்டியளித்த குஷ்பு தனது காதலை புரிந்துகொண்ட முன்னாள் கணவர் ராஜேஷ் குமாருக்கு தான் நன்றிக்கடன் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரிதினும் அரிதான இந்த சம்பவம் ராம் நகர் கிராம மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
- தனது தோழியை கிண்டல் செய்ய போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியுள்ளார்.
- மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் கோரேகானில் 24 வயது இளம்பெண் ஒருவர் தனது தோழியை கிண்டல் செய்ய மனிஷ் என்ற பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியுள்ளார்.
இந்த போலியான கணக்கு மூலம் தனது தோழியிடம் பேசி விளையாடியுள்ளார். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன்னுடன் பேசிய மனிஷ் மீது அப்பெண் காதல் வயப்பட்டுள்ளார்.
காதல் ஏற்பட்ட பிறகு அப்பெண் அந்த நபரை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது அவளது தோழி 'சிவம் பாட்டீல்' என்ற மற்றொரு போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியுள்ளார்.
அந்த போலியான கணக்கில் நான் தான் மனிஷின் அப்பா என்று கூறி, அவள் காதலித்த மனிஷ் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டதாக அவளது தோழியிடம் தெரிவித்துள்ளார்.
கற்பனையான அவளது காதலன் இறந்த துக்கத்தில் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் ஜூன் 12 ஆம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உயிரிழந்த பெண்ணின் மொபைல்போனில் இந்த இன்ஸ்டாகிராம் மெசேஜ்களை பார்த்த அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, இளம்பெண்ணின் மரணத்திற்கு காரணமான அவளது தோழியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஏற்கனவே திருமணமான சப்னா அவரின் காதலை ஏற்கவில்லை.
- தன் மீதும் பெட்ரோலை ஊற்றி அவர் தீ வைத்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணை 42 வயது நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
42 வயதான சப்னா யாதவ் என்ற பெண்ணை நரேந்திர பஞ்சாபி என்பவர் காதலித்து வந்துள்ளார்.
ஏற்கனவே திருமணமான சப்னா அவரின் காதலை ஏற்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து நரேந்திர பஞ்சாபி அவரை தொந்தரவு செய்ததால் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீஸ் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இதனையடுத்து கோபமடைந்த நரேந்திர பஞ்சாபி, பூக்கடையில் வேலை செய்து வந்த அப்பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததோடு தன் மீதும் பெட்ரோலை ஊற்றி அவர் தீ வைத்துள்ளார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நரேந்திர பஞ்சாபி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அவர் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
- காதலி திருமணத்திற்காக நீதிமன்றத்தை அணுகி ஏற்பாடுகளை செய்த போதும் காதலன் வரவில்லை.
- கைதானவர், ஹாஜிபூரைச் சேர்ந்த 25 வயதான பயிற்சி மருத்துவர் ஆவார்.
பாட்னா:
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தனது காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அப்பெண்ணின் மீது கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
காதலன் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காதலன் மதுரா தொகுதியில் உள்ள வார்டு எண். 12ன் கவுன்சிலர் ஆவார்.
கடந்த 5 ஆண்டுகளாக அந்த நபருடன் தனக்கு தொடர்பு இருப்பதாகவும் ஆனால் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டவர் கூறினார்.
இதனால் நீதிமன்றத்தில் பதிவுத் திருமணத்திற்கு காதலன் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி, காதலி திருமணத்திற்காக நீதிமன்றத்தை அணுகி ஏற்பாடுகளை செய்த போதும் காதலன் வரவில்லை.
அதன் பிறகு, காதலனை தனது வீட்டிற்கு வரவழைத்த காதலி, அங்கு வைத்து அவரது அந்தரங்க உறுப்பை வெட்டியதாக தெரிகிறது.
இதனால் வலியால் துடித்த காதலனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் படுக்கையில் கிடப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கைதானவர், ஹாஜிபூரைச் சேர்ந்த 25 வயதான பயிற்சி மருத்துவர் ஆவார்.
- பிரபு மாஸ்டர் - ஏ.ஆர்.ஆர் காம்பினேஷன் அமையாதா என்ற ஏக்கத்தைப் போக்கும் வகையில் இந்த படம் உருவாகி வருகிறது
- Behindwoods தயாரிப்பில் அந்நிறுவனத்தின் CEO மனோஜ் NS இந்த படத்தை இயக்குகிறார்
டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என இந்திய சினிமாவில் பன்முகத் தன்மையுடன் இயங்கி வரும் பிரபுதேவா, ஏ.எல்.விஜய் இயக்கிய தேவி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். இந்நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன் சங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் படத்தில் ஏஆர் ரகுமானின் துள்ளலான இசைக்கு காலேஜ் ஸ்டூடென்ட்டாக நடித்த பிரபுதேவாவின் ஸ்டைலான நடன அசைவுகள் பாடல்களை பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடிக்கச் செய்தது.
இந்த படத்துக்கு பிறகு பிரபு மாஸ்டர் - ஏஆர்ஆர் காம்பினேஷன் அமையாதா என்ற ஏக்கத்தைப் போக்கும் வகையில் Behindwoods தயாரிப்பில் அந்நிறுவனத்தின் CEO மனோஜ் NS இயக்கும் படத்தில் பிரபுதேவாவும், ரகுமானும் இணைந்துள்ளனர். ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் இப்படத்தில், பிரபு தேவா, யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா மற்றும் சுஷ்மிதா ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடிக்கிறார்கள்.
இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. படத்தின் பெயர் குறித்த அபேடேட்டுக்கு ரசிகர்கள் தவம் கிடந்த நிலையில் படத்துக்கு 'மூன் வாக்' என்று பெயரிட்டுள்ளதாக Behindwoods நிறுவனம் டைட்டில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அந்த போஸ்டரில் சிரியுங்கள், பாடுங்கள், உடன் சேர்ந்து நடனமாடுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை அடுத்த ஆண்டு 2025-ல் பான்-இந்திய படமாகத் திரைக்குக் கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆர்த்தியின் தலையில் ரோஹித் ஸ்பேனரால் தொடர்ந்து 15 முறை ஓங்கி அடித்தார்.
- தடுக்க வந்தவரை தள்ளிவிட்டு உன்னையும் ஸ்பேனரால் அடிப்பதாக மிரட்டுகிறார்.
மகாராஷ்ர மாநிலம் மும்பை அருகே வசாயின் கிழக்கு பகுதியில் பரபரப்பான சாலையில் 28 வயது உள்ள ரோஹித் தனது முன்னாள் காதலி ஆர்த்தி ஸ்பேனரால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ரோஹித் யாதவ், தனது முன்னாள் ஆர்த்தி யாதவ் வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்டதையடுத்து, ஸ்பேனருடன் அவரைத் துரத்தி கொண்டு சென்றுள்ளார். இந்த தாக்குதல் சாலையின் நடுவில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிசிடிவி காட்சிகளின்படி, ரோஹித் ஆர்த்தியை ஸ்பேனரால் துரத்துவதும், அவரது தலை மற்றும் மார்பில் பலமுறை அடிப்பதும் போல் உள்ளது. அந்த வீடியோவில் ஆர்த்தி சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார் அப்போது ஆர்த்தியின் தலையில் ரோஹித் ஸ்பேனரால் தொடர்ந்து 15 முறை ஓங்கி அடித்தார்.
தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ரோஹித்தை தடுக்க முயன்றார். இருப்பினும், தடுக்க வந்தவரைதள்ளிவிட்டு உன்னையும் ஸ்பேனரால் அடிப்பதாக மிரட்டுகிறார். இதை அடுத்து அந்த நபர் பின்வாங்கி செல்கிறார். அதைத் தொடர்ந்து யாரும் தாக்குதலை நிறுத்த முயற்சிக்கவில்லை.
இந்த கொடிய சம்பவத்தை சிலர் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் பரவியிருக்கிறது. அதில் ரோஹித் கீழே விழுந்து கிடந்த பெண்ணின் உடலில் ஏறி நின்று கொண்டு, ஸ்பேனரை கையில் பிடித்துக்கொண்டு குனிந்து அப்பெண்ணின் முகத்தை பிடித்துக்கொண்டு `எனக்கு ஏன் அப்படி செய்தாய்... ஏன் அப்படி செய்தாய்?' என்று பிணத்துடன் பேசினான். பின்னர் மீண்டும் ஒரு முறை ஓங்கி ஸ்பேனரால் அடித்து விட்டு, ரத்தம் படிந்த ஸ்பேனரை தூக்கிப்போட்டுவிட்டு கூட்டத்தில் நடந்து சென்றான்.
இது குறித்து சிலர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து ஆர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆறு வருட நீண்ட உறவைத் தொடர்ந்து அவர்கள் பிரிந்ததே இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் என்று ஊகிக்கப்படுகிறது.
வசாயின் கிழக்கு சின்ச்பாடா பகுதியில் அதிகாலையில் ஆர்த்தி யாதவ் வேலைக்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து ரோஹித் கைது செய்யப்பட்டுள்ளார்.
- தந்தை மகள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது
- டாக்சி டிரைவர்தான் தனது மகளைக் கொன்றதாக போலீசிடம் நாடகமாடியுள்ளார்.
தந்தையர் தின கொண்டாட்டங்களுக்கு மத்தியில் டெல்லியில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த தனது மகளை தந்தை கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் கஞ்வாலா பகுதியில் ரத்தத்தில் தோய்ந்த இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் நடந்திய விசாரணையில் அப்பெண்ணின் தந்தையே கொலையை அரங்கேற்றியுள்ளது தெரியவந்தது.
அந்த பெண் தனது காதலனைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிய நிலையில் அவரது தந்தை தான் பார்த்த மாப்பிளையை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார். இதனால் தந்தை மகள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கஞ்வாலா பகுதிக்கு தனது மகளை டாக்சியில் அழைத்து வந்த தந்தை கண்ணாடி அறுக்கும் உபகரணத்தை வைத்து மகளை அறுத்துக் கொன்றுள்ளார்.
மேலும், டாக்சி டிரைவர்தான் தனது மகளைக் கொன்றதாக போலீசிடம் நாடகமாடியுள்ளார். இறுதியில் உண்மை தெரியவந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை கண்ணாடி அறுக்கும் தொழில் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
- கிஷோரின் குடிப்பழக்கம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
- கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள ராஜா கி மண்டி ரெயில் நிலையத்தில் ராணி என அடையாளம் காணப்பட்ட 38 வயது பெண் ரெயிலில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த பதற வைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் ராணியும் அவரது லிவ் இன் பார்ட்னர் கிஷோரும் 2வது நடைமேடை நாற்காளியில் அமர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கிஷோரின் குடிப்பழக்கம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அப்போது இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றிவிட, தான் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி ராணி தண்டவாளத்தில் குதித்து கிஷோரை மிரட்டினார்.
அப்போது, கேரளா எக்ஸ்பிரஸ் நெருங்கி வருவதை அறியாத ராணி நடைமேடை அருகே சென்று ஏறி தப்பிக்க முயன்றார். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில் மோதி, ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே ராணி சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த காட்சி சிசிடிவியில் பதிவான நிலையில், இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ஜிஆர்பி கன்டோன்மென்ட்டின் பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் சமர் பகதூர் கூறுகையில், "ராணியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போதைக்கு, முறையான புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. புகார் வந்தவுடன் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்