என் மலர்
நீங்கள் தேடியது "Volcano"
- எத்தியோப்பியால் 12 ஆயிரம் வருடத்திற்குப் பிறகு எரிமலை வெடித்து சிதறியது.
- பல கி.மீ. உயரத்திற்கு சாம்பல் புகை சூழ்ந்ததால் விமான போக்குவரத்து பாதிப்பு.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு எரிமலை 12,000 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக வெடித்துள்ளது. தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து 500 மைல் தொலைவில் அமைந்துள்ள ஹைலே குப்பி எரிமலை ஞாயிற்றுக்கிழமை குமுறிக் கொண்டிருந்த நிலையில், நேற்று வெடித்துள்ளது.
இதனால் எரிமலையில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சாம்பல் நிறைந்த கரும்புகை வெளியேறி வருகிறது. எரிமலையிலிருந்து சாம்பல் மேகங்கள் இந்தியா, ஏமன், ஓமன் மற்றும் வடக்கு பாகிஸ்தான் நோக்கி நகர்ந்து வந்தது. தற்போது டெல்லி வான்பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது.
இந்த கரும்புகை டெல்லியில் இருந்து சீனாவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும், இன்று இரவு 7.30 மணிக்குள் முழுமையாக டெல்லியில் இருந்து விலகிச் செல்லும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எரிமலையின் சாம்பல் புகை செங்கடல், அரேபிய தீபகற்பம் ஆகியவற்றை தாண்டி இந்திய துணைக் கண்டத்தை அடைந்துள்ளது.
ஏற்கனவே காற்று மாசு காரணமாக டெல்லி பாதிப்படைந்து வந்த நிலையில், தற்போது இந்த மேகமும் சேர்ந்த மோசமாக்கியுள்ளது. ஆனால், கடல் மட்டத்தில் இருந்து வெகு தொலைவில் சூழ்ந்துள்ளதால், மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது.
குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா மாநிலத்திலும் இந்த புகை சூழ்ந்து காணப்பட்டது.
முன்னெச்சரிக்கை காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டன.
- கடந்த ஆண்டில் இருந்து அடிக்கடி கிளாவியா எரிமலை குழம்புகளை வெளியேற்றி வருகிறது.
- 2,400 அடி உயரத்துக்கு எரிமலை குழம்புகளை பீச்சி அடித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவின் கிளாவியா எரிமலை கடும் சீற்றத்துடன் எரிமலை குழம்புகளை வளியேற்றி வருகிறது.
கடந்த ஆண்டில் இருந்து அடிக்கடி கிளாவியா எரிமலை குழம்புகளை வெளியேற்றி வருகிறது. கிட்டத்தட்ட 2,400 அடி உயரத்துக்கு எரிமலை குழம்புகளை பீச்சி அடித்துள்ளது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
- இந்தோனேசியாவில் லக்கி லக்கி எரிமலை வெடித்துச் சிதறியது.
- அதில் இருந்து வானுயரத்துக்கு தீக்குழம்பு வெளியேறியது.
ஜகார்த்தா:
பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இருப்பதால் இந்தோனேசியாவில் பல எரிமலைகள் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது வெவோடோபி நகரில் உள்ள லிவோட்பி எரிமலை.
1,500 மீட்டர் உயரமுள்ள அந்த எரிமலை பிரபலமாக லக்கி லக்கி என அறியப்படுகிறது. இந்த மலையின் அழகைக் காண வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர்.
அந்த எரிமலை சமீப காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறுகிறது. அதன்படி லக்கி லக்கி எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் எரிமலையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் உயரத்துக்கு தீக்குழம்பு வெளியேறியது.
இதனை தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் எரிமலை வெடிக்க தொடங்கியது. எனவே அந்த இடம் முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இதனால் எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் 8 கிலோமீட்டர் தூரம் வரை ஆறாக ஓடியது.
எரிமலை அருகே உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
- பசிபிக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
- ரஷியாவின் மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதற தொடங்கி உள்ளது.
ரஷியாவின் கம்சட்கா தீபகற்ப பகுதியில் நேற்று காலை அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 8.8 ஆக பதிவானது.
இதையடுத்து அப்பகுதியை சுனாமி அலைகள் தாக்கியது. மேலும் ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் அலாஸ்கா, ஹவாய் ஆகியவற்றை சுனாமி தாக்கியது. பசிபிக் கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இந்த நிலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ரஷியாவின் மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதற தொடங்கி உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரத்துக்கு பிறகு கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள 15 ஆயிரம் அடி உயரம் கொண்ட க்ளூச் செவ்ஸ்காய் எரிமலை வெடித்து சிதறியது. அதில் இருந்து தீப்பிழம்புகள் வெளியேறி வருகின்றன. இந்த எரிமலை வெடிப்பை ரஷிய அறிவியல் கழகத்தின் யுனைடெட் புவி இயற்பியல் சேவை உறுதி செய்துள்ளது.
இதற்கிடையே அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட பெரிய சுனாமி அச்சுறுத்தல் முற்றிலும் கடந்துவிட்டதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் தெரிவித்தார். ஆனாலும் வடக்கு கலிபோர்னியா கடற்கரையின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை அமலில் உள்ளது.
சிலி நாடு தனது பசிபிக் கடற்கரையின் பெரும் பகுதிக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையை நீட்டித்து உள்ளது. இந்த நிலையில் பசிபிக் கடல் பகுதியில் மேலும் நில நடுக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
- சுமார் 700 முதல் 1000 மீட்டர் அகலமுள்ள பிளவு வழியாக தென்கிழக்கு நோக்கிப் பாய்ந்து வருகிறது.
- சுமார் 800 ஆண்டுகளாக செயலற்று இருந்தது.
ஐரோப்பாவில் அமைந்துள்ள ஐஸ்லாந்து நாட்டில் 100க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இந்நிலையில் தலைநகர் ரெய்காவிக்கில் இருந்து தென்மேற்கே அமைந்துள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் நேற்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணியளவில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியது.
தீவிர நில அதிர்வுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்களும் சுற்றுலா பயணிகளும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
எரிமலையில் இருந்து வெளியேறும் லாவா குழம்பு சுமார் 700 முதல் 1000 மீட்டர் அகலமுள்ள பிளவு வழியாக தென்கிழக்கு நோக்கிப் பாய்ந்து வருகிறது.
சுமார் 800 ஆண்டுகளாக செயலற்று இருந்த இந்த எரிமலைப் பகுதி கடந்த 2023 நவம்பர் முதல் மீண்டும் செய்யப்படத் தொடங்கியது குறிப்பிடத்க்கது.
- இந்த அழகிய தருணத்தின் புகைப்படங்களை மார்க் ஸ்டீவர்ட் பகிர்ந்துள்ளார்.
- இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
ஹவாயில் உள்ள கிலோவியா எரிமலை வெடித்து சிதறும்போது, மார்க் ஸ்டீவர்ட் என்ற நபர் தனது நீண்ட நாள் காதலி ஒலிவியாவிடம் தனது காதலை தெரிவித்தார். அவரும் காதலை ஏற்றுக்கொண்டார்.
இந்த அழகிய தருணத்தின் புகைப்படங்களை மார்க் ஸ்டீவர்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களில், எரிமலைக்குழம்பு காற்றில் பறக்கிறது. மார்க் ஸ்டீவர்ட் தனது காதலியின் முன்பு மண்டியிட்டு மோதிரத்தை நீட்டியபடி உள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
- ஜூலியானா மரின்ஸ் எரிமலையில் உள்ள ஒரு பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.
- இந்த தகவல் அறிந்த இந்தோனேசிய மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்தோனேசியா எரிமலையில் சிக்கி பிரேசில் சுற்றுலா பயணி பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரேசில் நாட்டை சேர்ந்த 26 வயதான ஜூலியானா மரின்ஸ் என்ற பெண் ஒரு குழுவுடன் சேர்ந்து இந்தோனேசியாவின் ரிஞ்சனி எரிமலையில் ஜூன் 21 ஆம் தேதி மலையேற்றம் செய்துள்ளார். அப்போது திடீரென ஜூலியானா மரின்ஸ் அங்குள்ள ஒரு பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.
இந்த தகவல் அறிந்த இந்தோனேசிய மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். டிரோன் மூலம் ஜூலியானா மரின்ஸ் உயிருடன் இருப்பதை கண்டறிந்த மீட்புப்படையினர் அவரை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் அவரை உயிருடன் மீட்கமுடியவில்லை. ஜூன் 24 ஆம் தேதி ஜூலியானா மரின்ஸ் சடலத்தை மீட்பு படையினர் கண்டுபிடித்தனர்.
- தீவு நாடான இந்தோனேசியாவில் அதிக அளவிலான எரிமலைகள் உள்ளன.
- புகை மண்டலம் காரணமாக இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்பட இருந்த 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தாகின.
ஜகர்த்தா:
இந்தோனேசியாவில் லகி-லகி எரிமலை வெடித்து சிதறியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். சர்வதேச விமானங்கள் ரத்தாகின.
பசிபிக் நெருப்பு வளையம் என்பது உலகின் மிகப்பெரிய பெருங்கடலான பசிபிக் பெருங்கடலை சுற்றி கடலுக்கு அடியிலும், நிலத்திலும் இருக்கும் நிலத்தட்டுகளில் அமைந்திருக்கும் எரிமலைகளில் வளைவான தொடராகும்.
இந்த பகுதியில் அமைந்திருக்கும் எரிமலைகள் அவ்வப்போது வெடிப்பதால் சுனாமி மற்றும் பூகம்பம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. இந்த பிராந்தியத்தில் அமைந்துள்ள தீவு நாடான இந்தோனேசியாவிலும் அதிக அளவிலான எரிமலைகள் உள்ளன.
ஆங்காங்கே சிதறி கிடக்கும் தீவு நாடான இந்தோனேசியாவின் புளோரஸ் தீவுக்கூட்டத்தில் பாலி தீவு அமைந்துள்ளது. கண்ணை கொள்ளையடிக்கும் கடற்கரைகள், பசுமையான மலைகள், வாயை பிளக்க வைக்கும் பள்ளத்தாக்குகள் என இயற்கை எழில் கொஞ்சும் இந்த தீவில் 1,500 மீட்டர் உயர லிவோட்பி என்ற எரிமலை உள்ளது.
உள்ளூர் மக்களால் லகி-லகி என்று அழைக்கப்படும் இந்த அதிபயங்கர எரிமலை அவ்வப்போது வெடித்து சிதறி வருகிறது. இது அங்குள்ள உள்ளூர்வாசிகளை மட்டுமின்றி சுற்றுலாவுக்காக வரும் வெளிநாட்டு பயணிகளை கலங்க செய்து வருகிறது.
இந்தநிலையில் நேற்றும் இந்த லகி-லகி எரிமலை வெடித்து சிதறியது. அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய எரிமலை காரணமாக வானில் சுமார் 5 ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு கரும்புகை வெளியேறியது. மேலும் சுமார் 10 ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு புகை மண்டலமாக மேலழுப்பி வானில் கலந்தது. இது அங்கிருந்தவர்களுக்கு சிவப்பு நிற குடை காளான்போல காட்சியளித்தது.
இந்த புகை மண்டலம் காரணமாக இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்பட இருந்த 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தாகின. மேலும் பாலி தீவுக்கு விமான சேவை தடைப்பட்டது. இதனால் விமான பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எரிமலையை சுற்றி வசித்து வந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
- எரிமலையிலிருந்து ஆபத்தான வாயுக்கள் வெளியேறி வருகிறது.
- இத்தாலியின் புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்தாலியின் சிசிலி தீவின் கிழக்கு கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற மவுண்ட் எட்னா எரிமலை இன்று (திங்கட்கிழமை) திடீரென வெடித்தது. எரிமலை வெடித்ததால் அருகிலுள்ள பகுதிகளில் இருந்த சுற்றுலாப் பயணிகள் பீதியில் ஓடினர்.
தகவலறிந்து மீட்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்தனர். சுற்றுலாப் பயணிகள் மற்றும் அருகில் உள்ள கிராம மக்களை அங்கிருந்து வெளியேற்றினர். எரிமலையிலிருந்து ஆபத்தான வாயுக்கள் வெளியேறி வருகிறது.
சில மணிநேரங்களாக எரிமலையிலிருந்து சாம்பல் வெளியேறி வருவதாகவும், இந்த நிலை தொடர்ந்தால், மேலும் வெடிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மவுண்ட் எட்னா கடந்த ஐந்து ஆண்டுகளாக எரிமலை தொடர்ந்து பலமுறை வெடித்து வருவதாக இத்தாலியின் புவி இயற்பியல் மற்றும் எரிமலையியல் தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
- அமெரிக்காவில் ஹவாய் தீவில் மவுனா லோவா என்கிற எரிமலை உள்ளது.
- தீவில் வசிக்கும் சுமார் 2 லட்சம் மக்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளது.
வாஷிங்டன் :
அமெரிக்காவின் மேற்கே பசிபிக் பெருங்கடலையொட்டி அமைந்துள்ள ஹவாய் தீவில் மவுனா லோவா என்கிற எரிமலை உள்ளது. இது உலகின் மிகப்பெரிய எரிமலை ஆகும்.
38 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த எரிமைலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. பெரிய அளவிலான நிலநடுக்கங்களை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு எரிமலை வெடிப்பு தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடிப்பை தொடர்ந்து எரிமலையில் இருந்து நெருப்பு குழம்பு வெளியேறி வருகிறது. எனினும் அது தற்போது எரிமலை வாயின் விளிம்புகளுக்கு உள்ளாக முடிந்திருக்கின்றன என்றும், எனவே அது குறித்து அச்சுறுத்தல் தற்போதைக்கு இல்லை என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே சமயம் எரிமலை வெடிப்பு மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும் என்றும் நெருப்பு குழம்பின் ஓட்டம் விரைவாக மாறக்கூடும் என்றும் எச்சரித்து ஆய்வு மையம், எரிமலைக் குழம்பு குடியிருப்பு பகுதிகளை நோக்கிச் செல்லத் தொடங்கினால் அங்கிருந்து வெளியேற தயாராக இருக்குமாறு தீவில் வசிக்கும் சுமார் 2 லட்சம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 1843ம் ஆண்டில் இருந்து இப்போது வரை 33 முறை சீற்றம் கண்ட மவுனா லோவா கடைசியாக கடந்த 1984-ம் ஆண்டில் வெடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
- கட்டானியாவிற்கு சேவை செய்யும் விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.
- விமானங்கள் பாதுகாப்பு நிலைமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.
இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கிழக்கு சிசிலியன் நகரத்தில் உள்ள மவுண்ட் எட்னாவில் எரிமலை வெடித்து சிதறி தீப்பிழம்பை கக்கி வருகிறது.
தீப்பிழப்பு வழிந்து சாம்பல் அருகிலுள்ள விமான நிலையத்தின் விமான ஓடுபாதை வரை பரவியது. இதனால், கட்டானியாவிற்கு சேவை செய்யும் விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.
3,330 மீட்டர் (10,925 அடி) உயரம் கொண்ட இந்த எரிமலை வருடத்திற்கு பல முறை வெடித்து, சாம்பலை மத்திய தரைக்கடல் தீவில் கரைகிறது. கடைசியாக பெரிய அளவில் எரிமலை வெடிப்பு கடந்த 1992ம் ஆண்டில் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலால், பிரபல சுற்றுலாத் தலமான கேடானியாவுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்கள் பாதுகாப்பு நிலைமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வரை ரத்து செய்யப்படும் என்று விமான நிலைய நிர்வாகம் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது.
- எரிமலை வெடித்து தீக்குழம்பு வெளிவருவதுபோன்று....
- இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்
மெக்சிகோ நாட்டிற்கு தெற்கே உள்ள மத்திய அமெரிக்க நாடு கவுதமாலா. இது எரிமலைகள், மழைக்காடுகள் மற்றும் பண்டைய மாயன் கலாச்சாரத்தின் தாயகமாக கருதப்படுகிறது.
இந்நாட்டில் உள்ள ஒரு எரிமலைக்கு அருகே தோன்றிய பெரிய மின்னலை காட்டும் அற்புதமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஜூலை 10-ம் தேதி ஆன்டிகுவா நாட்டிலிருந்து படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.
அகுவா எரிமலையின் மேல் தோன்றும் இந்த மின்னல், பார்ப்பதற்கு எரிமலை வெடித்து தீக்குழம்பு வெளி வருவது போல் தெரிகிறது. இக்காட்சிகள் 3.23 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு 4,000 லைக்குகளைக் குவித்துள்ளது.
எரிமலை வெடித்து வெளிப்படும்போது சிதறும் பாறை மற்றும் கல் துண்டுகள் டெஃப்ரா எனப்படும். இந்த எரிமலை கடின தீக்குழம்பு மற்றும் டெஃப்ரா ஆகியவற்றின் பல அடுக்குகளால் உருவாகிறது. இதனால் இது எரிமலை வகைகளில் ஸ்ட்ராட்டோ அல்லது கலவை எரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த எரிமலையின் உயரம் 12,340 அடியாகும். வீடியோவில் இந்த மின்னல் தாக்குதல், அதன் மேலே உள்ள முழு வானத்தையே ஒளிரச் செய்வது போல் தோன்றுகிறது.






