என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourist"

    • இந்திய சுற்றுலாப் பயணிகள் சில நிபந்தனைகளின் கீழ் விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
    • நாட்டிற்குள் நுழைய பயணத்திற்கு முன்பு முன்பு விசா பெற வேண்டும்

    இந்திய சுற்றுலாப் பயணிகள் சில நிபந்தனைகளின் கீழ் விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் ஆசிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் ஈரான் இந்த சலுகையை வழங்கி இருந்தது. இந்நிலையில் இந்த சலுகையை ஈரான் நிறுத்தி வைத்துள்ளது.

    வரும் நவம்பர் 22 முதல், சாதாரண பாஸ்போர்ட் கொண்ட இந்திய பயணிகள் விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    நாட்டிற்குள் நுழைய பயணத்திற்கு முன்பு முன்பு விசா பெற வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை. ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு செல்ல ஈரான் முக்கிய புள்ளியாக பார்க்கப்படும் நிலையில் இந்த விசா ரத்து சிரமத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. 

    • கடந்த ஆகஸ்டில் இலங்கைக்கு 1.98 லட்சம் பேர் சுற்றுலா சென்றுள்ளனர்.
    • கடந்த ஆகஸ்டில் இலங்கைக்கு 46,473 இந்தியர்கள் சுற்றுலா சென்றுள்ளனர்.

    இலங்கையின் முக்கிய வருவாயாக சுற்றுலாத்துறை திகழ்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் இலங்கைக்கு ஆண்டுதோறும் சுற்றுலா வருகின்றனர்.

    இந்நிலையில், இலங்கைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

    கடந்த ஆகஸ்டில் இலங்கைக்கு 1.98 லட்சம் பேர் சுற்றுலா சென்றுள்ளனர். இது கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தை விட அதிகமாகும். அதில் 46,473 பேர் இந்தியர்கள் ஆவர். பிரிட்டன் (17,764) ஜெர்மனி (12,500) சுற்றுலாப் பயணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

    • ஜூலியானா மரின்ஸ் எரிமலையில் உள்ள ஒரு பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.
    • இந்த தகவல் அறிந்த இந்தோனேசிய மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    இந்தோனேசியா எரிமலையில் சிக்கி பிரேசில் சுற்றுலா பயணி பரிதாபமாக உயிரிழந்தார்.

    பிரேசில் நாட்டை சேர்ந்த 26 வயதான ஜூலியானா மரின்ஸ் என்ற பெண் ஒரு குழுவுடன் சேர்ந்து இந்தோனேசியாவின் ரிஞ்சனி எரிமலையில் ஜூன் 21 ஆம் தேதி மலையேற்றம் செய்துள்ளார். அப்போது திடீரென ஜூலியானா மரின்ஸ் அங்குள்ள ஒரு பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.

    இந்த தகவல் அறிந்த இந்தோனேசிய மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். டிரோன் மூலம் ஜூலியானா மரின்ஸ் உயிருடன் இருப்பதை கண்டறிந்த மீட்புப்படையினர் அவரை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.

    ஆனால் அவரை உயிருடன் மீட்கமுடியவில்லை. ஜூன் 24 ஆம் தேதி ஜூலியானா மரின்ஸ் சடலத்தை மீட்பு படையினர் கண்டுபிடித்தனர். 

    • கடந்த நவம்பர் முதல் ஒரு வருட விசாவில் இந்தியாவில் இருக்கிறார்.
    • குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக உள்ளார்

    ராஜஸ்தானின் பிரபல சுற்றுலாத் தலமான உதய்பூரில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவன ஊழியர் ஒருவர் பிரெஞ்சு சுற்றுலாப் பயணியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    நகரில் சிறப்பு வாய்ந்த இடங்களை சுற்றிக் காட்டுவதாகக் கூறி, அவர் அப்பெண்ணை தனது அறைக்கு அழைத்துச் சென்று இந்தக் கொடுமையைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

    பாதிக்கப்பட்ட பிரெஞ்சு பெண், மற்ற இரண்டு பெண் தோழிகளுடன் உதய்பூருக்கு ஒரு விளம்பரப் படப்பிடிப்பிற்காக வந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்த விளம்பரப் படப்பிடிப்பை ஒரு ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. அப்பெண் கடந்த நவம்பர் முதல் ஒரு வருட விசாவில் இந்தியாவில் இருக்கிறார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, பாதிக்கப்பட்ட பிரஞ்சு பெண், அவரது நண்பர்கள் மற்றும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் சில ஊழியர்கள் உதய்பூரின் புட்கான் பகுதியில் உள்ள டைகர் ஹில்ஸில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்றனர். அனைவரும் இரவு உணவு சாப்பிட்டதாகவும், அங்கு மது அருந்தியதாகவும் தெரிகிறது.

    பின்னர், அந்த ஊழியர்களில் ஒருவரான சித்தார்த் நகரத்தை சுற்றிக்காட்டுவதாக கூப்பிட்ட அழைப்பில் பேரில் தான் அவருடன் காரில் சென்றதாகவும், அவர் தன்னை தனது ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

    சம்பவத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி யோகேஷ் கோயல் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக உள்ளார் எனவும் உணவகம் மற்றும் ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என்று அவர் மேலும் கூறினார்.

    சம்பவம் குறித்து பிரெஞ்சு தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அன்று உணவகத்தில் இருந்த மற்றவர்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    • செக் குடியரசைச் சேர்ந்த 28 வயது பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • நடந்து செல்லும்போது மர்ம நபரால் தகாத முறையில் தொட்டு துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

    உத்தரப் பிரதேசத்தில்  தாஜ்மகாலைப் பார்வையிட வந்த செக் குடியரசைச் சேர்ந்த 28 வயது பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பாதிக்கப்பட்ட செக் நாடு பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி மதியம் 1 மணியளவில் தாஜ்மகாலை பார்வையிட ஷாம்ஷான் காட் சாலையில் நடந்து செல்லும்போது மர்ம நபரால் தகாத முறையில் தொட்டு துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். சி.சி.டி.வி கேமரா பதிவை ஆராய்ந்ததில் அந்த நபர் ஆக்ராவை சேர்ந்த கரண் ரத்தோர் என்று தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவரை தேட பல குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டதாக துணை கமிஷ்னர் சையத் அரீப் அகமது தெரிவித்தார்.

    • இதை ஏற்று அந்த பெண் டெல்லிக்கு வந்து மஹிபால்பூர் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
    • வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரிட்டிஷ் உயர் கமிஷனிடம் இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளனர்.

    இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பெண் இன்ஸ்டாகிராம் நண்பனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இங்கிலாந்தைச் சேர்ந்த அந்த பெண் கைலாஷ் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். இதற்கிடையே மகாராஷ்டிரா மற்றும் கோவாவுக்கு சமீபத்தில் சுற்றுலா வந்துள்ளார்.

    தனது இன்ஸ்டா நண்பன் கைலாஷையும் தன்னுடன் அந்த பெண் அழைத்துள்ளார். ஆனால் கைலாஷ் தான் டெல்லியில் உள்ளதாகவும், அங்கு வருமாறும் பெண்ணனிடம் தெரிவித்துள்ளார்.

    இதை ஏற்று அந்த பெண் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லிக்கு வந்து மஹிபால்பூர் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். பின்னர் மாலையில் தனது அறைக்கு கைலாஷை அப்பெண் அழைத்துள்ளார்.

    தனது நண்பன் வாசிம் உடன் வந்த கைலாஷ் ஹோட்டல் அறையில் வைத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

    அவர்களிடம் இருந்து தப்பிக்க ஹோட்டல் லிப்டில் சென்றபோது அங்கு வேலைபார்த்த ஊழியர் ஒருவரும் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து வெளியேறி அந்த பெண் வசந்த் குஞ்ச் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

    இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரிட்டிஷ் உயர் கமிஷனிடம் இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளனர். கைலாஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தாக தெரிகிறது. அவனையும் தொடர்புடையவர்களையும்  கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

    தன்னைச் சந்திக்க இந்தியாவுக்கு வருமாறு பெண்ணை அடிக்கடி கைலாஷ் வற்புறுத்தியது தெரியவந்தது. பெண்ணுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • வேளாங்கண்ணி பேராலயம், சிக்கல் சிங்காரவேலர், நாகூர் தர்கா உள்பட பல்வேறு வழிபாட்டு தலங்கள் உள்ளது.
    • கோடியக்கரை சரணாலயம் உள்பட பல்வேறு சுற்றுலா தலம் நிறைந்த மாவட்டமாக நாகை விளங்குகிறது.

    வேதாரண்யம்:

    தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் ஆகிய இடங்களில் விமான நிலையம் உள்ளது. தமிழகத்தின் கிழக்கு எல்லையான நாகையில் புவியியல் அடிப்படையில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என நாகை மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது :-

    நாகை மாவட்டம், ஆன்மீக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், சிக்கல் சிங்காரவேலர், நாகூர் தர்கா உள்பட பல்வேறு முக்கிய வழிபாட்டு தலங்களும், கோடியக்கரை சரணாலயம், உள்பட பல்வேறு சுற்றுலா தலமும் நிறைந்த மாவட்டமாக நாகை மாவட்டம் விளங்குகிறது.

    இதுதவிர நாகையில் அரசு மருத்துவக்கல்லூரி உள்பட ஏராளமான கல்லூரிகள், பள்ளிகள் உள்ளன. மேலும் மீனவர்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. மீன் ஏற்றுமதி, உப்பு ஏற்றுமதியில் சிறந்து விளங்குகிறது.

    கடற்கரை நகரங்களின் மத்திய பகுதியில் நாகப்–பட்டினம் அமைந்துள்ளது. எனவே எல்லை பாது–காப்பை கணக்கில் கொண்டு விமான நிலையம் அமைத்தால் அது நாட்டிற்கே அரணாக விளங்கும் விமானப்படைக்கு ஏதுவாக இருக்கும்.

    நாகை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இயற்கை பேரிடர் ஏற்படும் பகுதி என்பதால் மீட்பு பணிகளுக்கு ராணுவம் மற்றும் மீட்பு படையினர் விரைந்துவர வழி வகுக்கும்.

    கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகள், அறந்தாங்கி வரை உள்ள மக்கள் திருச்சி விமான நிலையம் செல்வதைவிட நாகையில் விமான நிலையம் அமைந்தால் வந்து செல்வது எளிது.

    எனவே "நாகையில் விமான நிலையம் அமைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

    • ராஜபாளையம், மதுரை வழியாக காசிக்கு சுற்றுலா ெரயில் விடப்படுகிறது.
    • மே மாதம் 4-ந் தேதி கொச்சுவேலியில் இருந்து புறப்படும்.

    மதுரை

    இந்திய ெரயில்வே உணவு சுற்றுலா கழகம் சார்பில் திருவனந்தபுரம் கொச்சுவேலியில் இருந்து காசிக்கு 'பாரத் கவுரவ்' சுற்றுலா ெரயில் இயக்கப்பட உள்ளது.

    இந்த ெரயில் மே மாதம் 4-ந் தேதி கொச்சுவேலியில் இருந்து புறப்படும். இதனை தொடர்ந்து கொல்லம், செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை வழியாக மே மாதம் 6-ந் தேதி ஒடிசா மாநிலம் பூரி செல்லும்.

    அங்கு ஜெகநாதர் கோவில், கொனார்க் சூரிய கோவில் ஆகிய தலங்களில் தரிசனம் செய்யலாம். மே 8-ந் தேதி கொல்கத்தாவில் காளி கோவில் தரிசனம். 9-ந் தேதி பால்குனி நதியில் நீராடி முன்னோர் பித்ரு பூஜை. அதன் பிறகு மகா போதி கோவில் தரிசனம். மே 10-ந் தேதி கங்கையில் நீராடி காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி கோவில்கள் தரிசனம். 11-ந் தேதி அயோத்தியா சரயு நதியில் நீராடி ராம ஜென்ம பூமி, அனுமன் கோவில்கள் தரிசனம். 12-ந் தேதி பிரக்யாராஜ் திரிவேணி சங்கமத்தில் நீராடி அனுமன் கோவில் தரிசனம். 14-ந் தேதி சுற்றுலா ெரயில் மீண்டும் கொச்சுவேலி வந்து சேரும். இந்த சுற்றுலா ெரயி லுக்கான பயண சீட்டுகள் பதிவு நடந்து வருகிறது.

    • வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க மலைப்பகுதிகளுக்கு பொதுமக்கள் வருகின்றனர்.
    • சுற்றுலாபயணிகள் தங்கிச் செல்ல 150-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன.

    பொள்ளாச்சி,

    தமிழகத்தின் சமவெளிப்பகுதியில் தற்போது வெயில் கொளுத்துகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க மலைப்பகுதிகளுக்கு பொதுமக்கள் குடும்பத்துடன் படையெடுக்க தொடங்கி உள்ளனர். மேலும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் சுற்றுலா தலங்களில் சுற்றுலாபயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    தமிழ்புத்தாண்டை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வந்ததால் கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கூழாங்கல் ஆறு, வெள்ளமலை சுரங்கம், நீராறு அணை, சோலையாறு அணை, நல்லமுடி காட்சிமுனை மற்றும் பாலாஜி கோவில் என அனைத்து பகுதியிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனர்.

    ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலாபயணிகள் குவிந்த தால் வால்பாறை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே வால் பாறையில் உள்ள தங்கும் விடுதிகள் மே மாத இறுதிக்குள் அனுமதி பெற வேண்டும் என சுற்றுலாத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வால்பாறையில் சுற்றுலாபயணிகள் தங்கிச் செல்ல வசதியாக 150-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. வால்பாறை நகர், ரொட்டிக் கடை, சோலையாறு அணை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. தனியார் தேயிலை தோட்டப்பகுதிகளில் தனியார் ரிசார்டுகளும் உள்ளன.

    இதில் பல தங்கும் விடுதிகள் அனுமதியின்றி செயல்படுவது சுற்றுலாத்துறையின் கணக்கெடுப்பில் தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி சீனிவாசன் கூறியதாவது:-

    வால்பாறையில் தங்கும் விடுதிகள் நடத்துபவர்கள் சுற்றுலாத்துறையில் முறையாக பதிவு செய்து கொள்ள வேண்டும். நகராட்சியில் மட்டும் அனுமதி வாங்கினால் போதாது. சுற்றுலாத்துறையிலும் பதிவு செய்து கொள்ள வேண்டும். மே மாதம் இறுதிக்குள் தங்கும் விடுதி மற்றும் ரிசார்ட் நடத்தி வருபவர்கள் தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • தொடர் விடுமுறையால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
    • ஓட்டல்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    ஊட்டி,

    தமிழகத்தில் சமவெளி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    சமவெளியில் வெயில் நிலவி வரும் அதே வேளை யில், நீலகிரி மாவட்டத்தில் குளுமையான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.இதையடுத்து நீலகிரியில் நிலவி வரும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.கடந்த 2 நாட்களில் மட்டும் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஊட்டியில் 500-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவருமே அறை எடுத்து இங்கு தங்குவது வழக்கம்.

    இதற்காக அவர்கள் சுற்றுலாவுக்கு ஊரில் இருந்து புறப்படும் முன்பே இணையதளத்தில் சென்று விடுதியை புக் செய்வது வழக்கம்.

    தற்போது கோடை சீசன் தொடங்கி நடந்து வருகிறது. சமவெளி பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிப்பதால் பலர் தங்களது குடும்பத்தி னருடன் ஊட்டிக்கு சுற்றுலா வருகின்றனர்.

    இந்த நிலையில் தங்கும் விடுதிகளில் வாடகை கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்து உள்ளது. கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை களில் விடுதி கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மிக அதிகமாகும். இதனால் ஊட்டிக்கு வரக்கூடிய நடுத்தர மற்றும் ஏழை சுற்றுலா பயணிகள் மி கவும் பாதிப்படைந்து ள்ளனர். விடுதி கட்டணம் மட்டு மின்றி, லாட்ஜ் அறைகள், உணவு பொருட்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். காசு அதிகம் கொடுத்து உணவு வாங்கி சாப்பிட்டாலும், அந்த உணவு தரமாக இருக்க வேண்டும் என அனை வரும் எதிர்பார்ப்பது தான். ஆனால் அங்குள்ள பல ஓட்டல்களில் காசை அதிகமாக வாங்கி கொண்டு தரமற்ற உணவுகளை விற்பதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    சமீபத்தில் கூட ஊட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் கெட்டுபோன உணவு பரிமாறப்பட்டதாக பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணி வீடியோவை பகிர்ந்திருந்தது நினைவுகூரத்தக்கது.

    2 நாள்கள் ஊட்டிக்கு வந்து சுற்றுலா தலங்களை பார்வையிட்டு, நிம்மதியாக தங்கி செல்லலாம் என வரும் சுற்றுலா பயணிகளுக்கு விடுதி கட்டணம் உயர்வு, தரமற்ற உணவு போன்றவை அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன.

    எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

    • ரோஜா கண்காட்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
    • தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம்.

    கோடை விழாவையொட்டி ஊட்டியில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மலர் கண்காட்சி நடந்த 5 நாட்களில் மட்டும் 1½ லட்சம் பேரும், ஏப்ரல், மே என கோடை சீசனில் மொத்தம் 8½ லட்சம் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகை தந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 31-ந் தேதியுடன் கோடை சீசன் நிறைவு பெற்றது. தமிழகத்தில் வருகிற 7-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சீசன் முடிந்த பின்னரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர்.

    தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்கு மலர் மாடம் மற்றும் கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ள பல வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். பின்னல் பெரிய புல்வெளி மைதானத்தை குழந்தைகளுடன் விளையாடி பொழுதை கழித்தனர். ஒரே நாளில் 20 ஆயிரம் பேர் வருகை தந்தனர்.

    ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகுகள், மோட்டார் படகுகள், துடுப்பு படகுகளில் சுற்றுலா பயணிகள் தங்களது குழந்தைகளுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். காட்சி மாடத்தில் நின்ற படி ஊட்டி ஏரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

    இதேபோல் ஊட்டி ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது.

    ஊட்டியில் சூட்டிங்மட்டம், பைன்பாரஸ்ட், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பயணிகள் குவிந்தனர். அவர்கள் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு சுற்றுலா தலங்களுக்கு சென்றதால், அந்த வழியாக வந்த வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்தது.

    இதையடுத்து போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். கோடை சீசன் முடிந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஊட்டிக்கு வருகை தந்தனர். இதனால் லோயர் பஜார், சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ் நிலையம் பகுதியில் பல கிலோமீட்டர் தூரத்துக்கு சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் அவதியடைந்தனர்.

    • எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
    • அவனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மெக்சிகோவில் உள்ள மாண்டேரி பகுதியில் சுற்றுலா பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உள்ளது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஜிப்லைனில் சாகச பயணம் செய்து மகிழ்வார்கள். இந்நிலையில் கடந்த 25-ந்தேதி அங்கு சுற்றுலா சென்றவர்களில் 6 வயது சிறுவன் ஒருவன் ஜிப்லைனில் சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

    அதிர்ஷ்டவசமாக பூங்காவில் இருந்த செயற்கை குளத்தில் விழுந்துள்ளான். உடனே அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் நீச்சல் குளத்துக்குள் குதித்து சிறுவனை காப்பாற்றி உள்ளார். இதில் சிறுவன் லேசான காயங்களுடன் உயிர் தப்பி உள்ளான். எனினும் அவனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அந்த சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பூங்கா ஊழியர்களை விமர்சனம் செய்து கருத்துக்களை பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து பூங்காவில் சாகச சவாரி நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×