என் மலர்
நீங்கள் தேடியது "சீனா"
- உபகரணங்கள் கிடைக்காமல் பெரும் காலதாமதத்தைச் சந்தித்து வந்தன.
- தடையை தற்போது உற்பத்தித் திறனைக் கருத்தில் கொண்டு அரசு தளர்த்தியுள்ளது.
2020-ஆம் ஆண்டு எல்லையில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, சீன நிறுவனங்கள் மற்றும் தயாரிப்புகள் மீது விதிக்கப்பட்டிருந்த கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகளை மத்திய அரசு தற்போது தளத்தியுள்ளது.
சீன உபகரணங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் இந்தியாவின் மின்சாரம் மற்றும் நிலக்கரித் துறை உட்பட முக்கிய துறைகளில் உள்கட்டமைப்புத் திட்டங்கள், உபகரணங்கள் கிடைக்காமல் பெரும் காலதாமதத்தைச் சந்தித்து வந்தன.
இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.
இந்நிலையில் கட்டுபாடுகளில் தற்போது மத்திய அரசு அளித்துள்ள தளர்வுகளின்படி, சீனாவிலிருந்து மின் விநியோக மற்றும் நிலக்கரி உற்பத்தி உபகரணங்களை வாங்குவதற்கு பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 750 பில்லியன் டாலர் மதிப்புள்ள அரசு ஒப்பந்தங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காகக் கொண்டுவரப்பட்ட இந்தத் தடையை தற்போது உற்பத்தித் திறனைக் கருத்தில் கொண்டு அரசு தளர்த்தியுள்ளது.
- சீனாவில் பட்டாசு கடை ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்தில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பீஜிங்:
சீனாவில் வசந்த விழா என அழைக்கப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன.
சீன ஜோதிடத்தின்படி இது 'குதிரை ஆண்டு' தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்தக் கொண்டாட்டத்தின்போது தீய சக்திகளை விரட்டப் பட்டாசுகள் வெடிப்பது மரபாகும்.
இந்நிலையில், சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் ஜியாங்யாங் நகரில் உள்ள பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட வெடிவிபத்தால் 12 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- Hunter-style lover என்ற டேட்டிங் முறை சீனாவில் டிரெண்டாகி வருகிறது!
- Gen Z தலைமுறையினர் இவ்வாறு அழைக்கின்றனர்.
சீனாவில் Hunter-style lover என்ற டேட்டிங் முறை தற்போது ட்ரெண்டாகி வருகிறது!
அன்பை எளிய முறையில் உணர்வுபூர்வமான பரிசுகள் மற்றும் செயல்கள் மூலம் காட்டுவதை Gen Z தலைமுறையினர் இவ்வாறு அழைக்கின்றனர்.
இந்த டேட்டிங் முறையில், காதலர்கள் கொடுக்கும் பரிசை அதன் பண மதிப்பை விட அதற்காக அவர்கள் முயற்சியின் அளவை வைத்து மதிப்பிடுகிறார்கள்.
- சாலை மெல்ல விரிசல் விட்டு, பின்னர் மிகப்பெரிய பள்ளமாக மாறியது.
- ஷாங்காய் நகரின் மென்மையான வண்டல் மண் முக்கிய காரணம்.
சீனாவின் ஷாங்காய் நகரில் பரபரப்பான சாலை ஒன்று திடீரென உள்வாங்கிய சிசிடிவி வீடியோ வைரலாகி வருகிறது.
எப்போதும் வாகன நெரிசல் மிகுந்த இந்தச் சாலையில் மேற்கொண்டு கட்டுமானப் பணிகள் நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் அங்கிருந்த தொழிலாளர்கள் முன்னிலையிலேயே சாலை மெல்ல விரிசல் விட்டு, பின்னர் மிகப்பெரிய பள்ளமாக மாறியது.
அங்கிருந்த கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் அந்தப் பள்ளத்திற்குள் விழுந்தன. நல்வாய்ப்பாக, இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. அருகிலுள்ள கட்டிடங்களில் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
ஷாங்காய் நகரின் மென்மையான வண்டல் மண், நிலத்தடி நீரைத் தொடர்ந்து உரிந்து எடுப்பது மற்றும் அதிகரித்து வரும் நகரக் கட்டுமானம் போன்ற காரணங்களால் இது போன்ற சம்பவங்கள் அங்கு அடிக்கடி நிகழ்கின்றன.
முன்னதாக கடந்த ஆண்டு ஜனவரி 2024-இல் மின்ஹாங் மாவட்டத்தில் கழிவுநீர் குழாய் உடைந்ததால் 10 மீட்டர் அளவிற்குச் சாலை உள்வாங்கியது.
- ஹாங்காங்கைச் சேர்ந்த முன்னாள் பத்திரிகை அதிபர் ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
- அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
பீஜிங்:
பிரிட்டன் காலனியாதிக்கத்தில் இருந்து வந்த ஹாங்காங், கடந்த 1997-ஆம் ஆண்டில் சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அப்போது, 'ஒரே நாடு, இரண்டு ஆட்சி முறை' என்ற கொள்கையின்கீழ் ஹாங்காங்கை ஆட்சி செய்ய சீனா ஒப்புக் கொண்டது.
அதன்படி, சீனாவில் வசிக்கும் மக்களுக்கு இல்லாத உரிமைகள் ஹாங்காங்வாசிகளுக்குக் கிடைக்கும் என கூறப்பட்டது. எனினும், ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி அந்தப் பிராந்தியத்தில் நடைபெற்ற போராட்டத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு நசுக்கியது.
சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீன நாடாளுமன்றம் கடந்த 2020-ஆம் ஆண்டு நிறைவேற்றியது. அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஏராளமான ஜனநாயக ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதன் ஒரு பகுதியாக, ஜனநாயகத்துக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு வந்த ஹாங்காங்கின் 'ஆப்பிள் டெய்லி' நாளிதழ் நிறுவனரான ஜிம் லாய் மீது பிராந்திய அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைத்தது. அரசின் நெருக்கடி காரணமாக அந்த நாளிதழ் நிறுத்தப்பட்டது.
ஜிம்மி லாய் வெளிநாட்டு சக்திகளுடன் சதிசெய்து தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினார். சீன அரசை வீழ்த்த அமெரிக்காவுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்தார் என தெரிவிக்கப்பட்டு, அவர் கடந்தாண்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
2020 ஆகஸ்ட் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது
ஜிம்மி லாய்க்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகள் கண்டனங்களைத் தெரிவித்தன.
இந்நிலையில், ஹாங்காங்கின் இறையாண்மை மற்றும் சட்ட விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடக் கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 'ஆப்பிள் டெய்லி' பத்திரிகை, ஹாங்காங் மற்றும் சீன அரசாங்கங்களின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வந்தது.
- ஜிம்மி லாயுடன் பணியாற்றிய மற்ற 6 பத்திரிகையாளர்களுக்கும் 6 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் காலனியாதிக்கத்தில் இருந்த ஹாங்காங் 1997-ஆம் ஆண்டு சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
அன்று முதல் ஹாங்காங் சீனாவின் தன்னாட்சி பெற்ற பிராந்தியமாக உள்ளது. இருப்பினும் அங்கு ஜனநாயகத்துக்கு எதிரான குரல்களை சீனா தொடர்ந்து ஒடுக்கி வருகிறது.
இந்நிலையில் ஹாங்காங்கின் பிரபல ஊடக தொழிலதிபர் ஜிம்மி லாய்க்கு தற்போது 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஜிம்மி லாய் தொடங்கிய 'ஆப்பிள் டெய்லி' பத்திரிகை, ஹாங்காங் மற்றும் சீன அரசாங்கங்களின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வந்தது.
2021-ல் அரசின் அழுத்தங்கள், சொத்துக்கள் முடக்கம் மற்றும் ரெய்டுகள் காரணமாக இந்தப் பத்திரிகை மூடப்பட்டது.
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து சதி செய்தல் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக மக்களை தூண்டிவிடும் வகையில் கட்டுரைகளை வெளியிட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் நீடித்தன.
இந்நிலையில் ஏற்கனவே மோசடி வழக்கில் ஜிம்மி லாய் 5 ஆண்டு 9 மாத தண்டனையை அனுபவித்து வரும் நிலையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மேலும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜிம்மி லாயுடன் பணியாற்றிய மற்ற 6 பத்திரிகையாளர்களுக்கும் 6 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீன நாடாளுமன்றம் கடந்த 2020-ஆம் ஆண்டு நிறைவேற்றியது.
அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஏராளமான ஜனநாயக ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
2020 ஆகஸ்ட் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜிம்மி லாய்க்கு தற்போது 78 வயது ஆவதால் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள 20 ஆண்டு தண்டனை ஆயுள் தண்டனைக்கு சமமாகும்.
தாம் சீனாவின் துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஓர் அரசியல் கைதி என்று லாய் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பெரும்பாலும் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ள ஜிம்மி லாய் உடல்நிலை மோசமாக உள்ளது என அவரது குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர்.
- அந்தத் தளத்தில் நேரலையாகவும் ஒளிபரப்பப்பட்டிருப்பது அவருக்கு மேலும் அதிர்ச்சியை அளித்தது.
- ஆயிரக்கணக்கான தம்பதிகள் மற்றும் தனிநபர்கள் தங்களுக்குத் தெரியாமலேயே இந்தக் குற்றச் செயலில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் நபர் ஒருவர் இணையத்தில் ஆபாச வீடியோ தேடும்போது அவர் தனது காதலியுடன் அந்தரங்கமாக இருந்த வீடியோ அந்த தளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அந்த வீடியோ, அந்தத் தளத்தில் நேரலையாகவும் ஒளிபரப்பப்பட்டிருப்பது அவருக்கு மேலும் அதிர்ச்சியை அளித்தது.
முன்பு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தபோது அந்த காட்சிகள் அவர்களுக்கு தெரியாமல் ஸ்விச் போர்டில் மறைத்து வைக்கப்பட்ட 'ஸ்பை கேமரா' மூலம் படமாக்கப்பட்டது பின்னர் தெரியவந்தது.
இது குறித்து அவர் காவல் துறையில் புகார் அளித்தார். விசாரணையில், சீனா முழுவதும் பல ஹோட்டல் அறைகளில் இது போன்ற ரகசிய கேமராக்களைப் பொருத்தி, அதன் மூலம் தம்பதிகள் மற்றும் காதலர்களின் அந்தரங்க வீடியோக்கள் படமாக்கப்பட்டு கள்ளச்சந்தையில் ஆபாச இணையதளங்களுக்கு விற்கும் மிகப்பெரிய கும்பல் செயல்படுவது கண்டுபிடிக்கபட்டது.
மேலும், இந்தக் கேமராக்கள் மூலம் படம் பிடிக்கப்படும் காட்சிகள், கட்டணம் செலுத்திப் பார்க்கும் சந்தாதாரர்களுக்குச் சிறப்புச் செயலிகள் மற்றும் இணையதளங்கள் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன.
ஆயிரக்கணக்கான தம்பதிகள் மற்றும் தனிநபர்கள் தங்களுக்குத் தெரியாமலேயே இந்தக் குற்றச் செயலில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு சீன காவல்துறை விசாரணையில் இறங்கி உள்ளது.
- 2020 இல் சீனா தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- அணுசக்தி சோதனைத் தடை ஒப்பந்தத்தை மீறி, சோதனை நடத்தி உள்ளது.
ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் பிறகு இந்தியா - சீனா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.
கடத்த ஆண்டு பிரதமர் மோடி, ஜிஜின்பிங் சந்திப்பின் பின் உறவு சற்று சீரானது. ஆனால் இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதியில், சீனா தங்கள் பக்கம் உள்ள பகுதியில் தொடர்ந்து பல்வேறு கட்டுமானங்களை மேற்கொண்டு வருகிறது. இவை ராணுவ கட்டுமானங்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் கல்வான் தாக்குதலுக்கு சரியாக ஒரு வாரம் கழித்து, ஜூன் 22-23 தேதிகளில் சீனா ரகசியமாக அணு ஆயுத சோதனை நடத்தியதாக அமெரிக்கா தற்போது குற்றம்சாட்டி உள்ளது.
வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் உள்ள லோப் நூர் சோதனைத் தளத்தில் இந்த ரகசிய அணு ஆயுதச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இதன்மூலம் அணுசக்தி சோதனைத் தடை ஒப்பந்தத்தை மீறி, தீவிரமான சோதனையில் ஈடுபட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.
சீனா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், தாங்கள் சர்வதேச விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாகத் தெரிவித்துள்ளது.
- தங்கம் விலை தொடர்ந்து விலை ஏறி வருகிறது.
- ஒரு சிம் கார்டில் 0.001 கிராம் அளவுக்கு தான் தங்கம் இருக்கும்
தங்கம் விலை தொடர்ந்து எகிறி வந்து, கடந்த 29-ந்தேதி ஒரு கிராம் ரூ.16 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. இது வரலாறு காணாத உச்சமாக பதிவானது.
அதன் தொடர்ச்சியாக மேலும் விலை அதிகரிக்கக் கூடும் என சொல்லப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை கணிசமாக சரிந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2560 உயர்ந்து ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.14,270-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், சீனாவில் பழைய சிம் கார்டுகளில் இருந்து தங்கத்தை பிரித்தெடுப்பது எப்படி என்று ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சீனாவில் பழைய பொருட்களில் இருந்து உலோகங்களை பிரித்தெடுக்கும் கியாவோ என்ற நபர், தூக்கி வீசப்பட்ட பழைய சிம் கார்டுகள் உட்பட பல மின்னணு கழிவுகளில் இருந்து ரூ.26 லட்சம் மதிப்பிலான 191 கிராம் தங்கத்தை பிரித்தெடுத்துள்ளதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உலகையே மிரள செய்திருக்கிறது. ஒரு சிம் கார்டில் 0.001 கிராம் அளவுக்கு தான் தங்கம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- Meditations: The Reflections of His Holiness the Dalai Lama" என்ற ஆல்பத்திற்காக, "சிறந்த ஆடியோ புத்தகம், விவரிப்பு மற்றும் கதைசொல்லல் பதிவு" பிரிவில் விருது
- மதத்தின் போர்வையில் சீனாவுக்கு எதிராகப் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு அரசியல் அகதி
திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது வழங்கப்பட்டதற்கு சீனா ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 68-வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழாவில், தலாய் லாமா தனது முதல் கிராமி விருதை வென்றார். அவரது "Meditations: The Reflections of His Holiness the Dalai Lama" என்ற ஆல்பத்திற்காக, "சிறந்த ஆடியோ புத்தகம், விவரிப்பு மற்றும் கதைசொல்லல் பதிவு" பிரிவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த விருதை சீனாவுக்கு எதிரான அரசியல் சூழ்ச்சிக்கான கருவியாக சில தரப்பினர் பயன்படுத்துவதாகச் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் குற்றம் சாட்டியுள்ளார். தலாய் லாமா ஒரு மதத் தலைவர் மட்டுமல்ல, அவர் மதத்தின் போர்வையில் சீனாவுக்கு எதிராகப் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு அரசியல் அகதி என்று பெய்ஜிங் தெரிவித்துள்ளது. மேலும் கலைத்துறை சார்ந்த விருதுகளை அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துவதை சீனா வன்மையாக எதிர்ப்பதாகவும் கூறியுள்ளது.
- உலகின் 2 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக சீனா உள்ளது.
- சீனா குறைக்க சர்வதேச வர்த்தகத்தில் யுவானின் பயன்பாட்டை அதிகப்படுத்தி வருகிறது.
சர்வதேச அரங்கில் அமெரிக்க டாலரின் மதிப்பு மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இதன் விளைவாக உலக நாடுகள் தங்கத்தை வாங்கி குவித்து வருவதால் தனகத்தில் விலை புதிய உச்சத்தை தொட்டு விலையேறி வருகிறது.
இந்நிலையில், சர்வதேச அரங்கில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில், சீனாவின் 'யுவான்'-ஐ (Yuan) உலகளவில் ஒரு வலுவான சக்தியாக மாற்றப் போவதாக அதிபர் ஜி ஜின்பிங் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் 2 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ள சீனா அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்க சர்வதேச வர்த்தகத்தில் யுவானின் பயன்பாட்டை அதிகப்படுத்தி வருகிறது.
சீனா கடந்த ஆண்டு, அதன் 6.2 டிரில்லியன் டாலர் வெளிநாட்டு வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை உள்ளூர் நாணயத்தில் மேற்கொண்டது.
சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தத்துவார்த்த இதழான கியுஷியில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், "சீனாவின் நிதித் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்துவதன் மூலம், 'யுவான்' நாணயத்தை சர்வதேச வர்த்தகம், முதலீடுகளில் ஒரு முக்கிய நாணயமாக நிலைநிறுத்த வேண்டும்" என்று ஜி ஜின்பிங் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இங்கிலாந்துக்கு 250 மில்லியன் பவுண்ட் மிச்சமாகும்.
- சீனாவுடனான வர்த்தகம் இங்கிலாந்துக்கு ஆபத்தானது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 4 நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்று தற்போது நாடு திரும்பியுள்ளார்
தனது பயணத்தின்போது, தலைநகர் பிஜீங் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து பிரதமர் ஒருவர் சீனாவுக்கு செல்வது இது முதல் முறை ஆகும்.
நேற்று முன் தினம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பு 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நடந்தது. இதில் வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் பிரிட்டனின் முக்கிய ஏற்றுமதிப் பொருளான விஸ்கி மீதான இறக்குமதி வரியைச் சீனா பாதியாகக் குறைத்துள்ளது.
அதாவது 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்துள்ளது. இதன்மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் இங்கிலாந்துக்கு 250 மில்லியன் பவுண்ட் மிச்சமாகும். இதில் இங்கிலாந்து பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க உயர்வை ஏற்படுத்தும்.

மேலும் இந்தப் பயணத்தின் மூலம் பல பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் பிரதமர் ஸ்டார்மர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு மிரட்டல்களுக்கு மத்தியில், பிரிட்டன், கனடா ஆகிய நாட்டு தலைவர்கள் சீன பயணம் மேற்கொண்டு அந்நாட்டுடன் உறவை வளர்த்து வருகின்றனர்.
இதற்கிடையே சீனாவுடனான வர்த்தகம் இங்கிலாந்துக்கு ஆபத்தானது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.






