இந்தியா மீது தாக்குதல் நடத்திய ஒரு வாரத்தில் ரகசிய அணு ஆயுத சோதனை மேற்கொண்ட சீனா - அமெரிக்கா குற்றச்சாட்டு

2020 இல் சீனா தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.அணுசக்தி சோதனைத் தடை ஒப்பந்தத்தை மீறி, சோதனை நடத்தி உள்ளது.
இந்தியா மீது தாக்குதல்  நடத்திய ஒரு வாரத்தில் ரகசிய அணு ஆயுத சோதனை மேற்கொண்ட சீனா - அமெரிக்கா குற்றச்சாட்டு
Published on

ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் பிறகு இந்தியா - சீனா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.

கடத்த ஆண்டு பிரதமர் மோடி, ஜிஜின்பிங் சந்திப்பின் பின் உறவு சற்று சீரானது. ஆனால் இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதியில், சீனா தங்கள் பக்கம் உள்ள பகுதியில் தொடர்ந்து பல்வேறு கட்டுமானங்களை மேற்கொண்டு வருகிறது. இவை ராணுவ கட்டுமானங்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் கல்வான் தாக்குதலுக்கு சரியாக ஒரு வாரம் கழித்து, ஜூன் 22-23 தேதிகளில் சீனா ரகசியமாக அணு ஆயுத சோதனை நடத்தியதாக அமெரிக்கா தற்போது குற்றம்சாட்டி உள்ளது.

வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் உள்ள லோப் நூர் சோதனைத் தளத்தில் இந்த ரகசிய அணு ஆயுதச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இதன்மூலம் அணுசக்தி சோதனைத் தடை ஒப்பந்தத்தை மீறி, தீவிரமான சோதனையில் ஈடுபட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.

சீனா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், தாங்கள் சர்வதேச விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாகத் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com