என் மலர்
நீங்கள் தேடியது "Galwan attack"
- சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- இரு நாட்டு உறவுகளிலும் விரிசல், அண்மையில் நடந்த ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடியின் சீன பயணத்தின் மூலம் சரியானது.
ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் பின் இரு நாட்டு உறவுகளிலும் விரிசல், அண்மையில் ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடியின் சீன பயணத்தின் மூலம் சரியானது.
இந்நிலையில் 5 வருடங்களுக்கு முன் நடந்த தாக்குதலில் இந்திய வீரர்களை உயிருடன் உருகச் செய்யும் மிகவும் ஆபத்தான மின்காந்த ஆயுதத்தை சீனா பயன்படுத்தியதாக அமெரிக்காவின் ஆளும் குடியரசுக் கட்சி செனட்டர் பில் ஹாகெர்டி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
டென்னசி மாகாண செனட்டர் பில் ஹாகெர்டி பேசுகையில், "சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நீண்ட காலமாக மனக்கசப்புகளும் அவநம்பிக்கையும் உள்ளன.
சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சீனாவும் இந்தியாவும் ஒரு சர்ச்சைக்குரிய எல்லையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தன, அப்போது சீனா இந்திய வீரர்களை உருக்க ஒரு மின்காந்த ஆயுதத்தைப் பயன்படுத்தியது" என்று தெரிவித்தார்.
பெயரை குறிப்பிடவில்லை எனினும், இது 2020 இல் நடந்த கால்வான் பள்ளத்தாக்கு மோதல்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அவர் மறைமுகமாகக் கூறினார்.
- அருணாச்சல பிரதேச எல்லைக்குள் ஊடுருவி சீனா தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகினர்.
- 'மறுத்தல், திசைதிருப்புதல், பொய் கூறுதல், நியாயப்படுத்துதல்' என்ற கொள்கையை மோடி அரசு பின்பற்றி வருகிறது.
"எல்லையில் 2,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துவிட்டது. அருணாச்சல பிரதேச எல்லைக்குள் ஊடுருவி சீனா தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகி விட்டனர்" என்று 2022 பாரத் ஜோடோ நடைப்பயணத்தின் போது ராகுல் காந்தி பேசியிருந்தார்.
இதுதொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், "ஒரு உண்மையான இந்தியர் எல்லை விவகாரம் பற்றி இவ்வாறு ராணுவத்தை அவதூறு ஏற்படுத்தும் வகையில் தகவல்களை வெளியிட மாட்டார்" என்று தெரிவித்தது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், ஜூன் 15, 2020இல் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களின் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தது தொடர்பாக மோடி அரசு உண்மையை மறைத்து வருவதாக குற்றம்சாட்டி உள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஒவ்வொரு தேசபக்த இந்தியரும் பல கேள்விகளை எழுப்பியுள்ள போதிலும், 'மறுத்தல், திசைதிருப்புதல், பொய் கூறுதல், நியாயப்படுத்துதல்' என்ற கொள்கையை மோடி அரசு பின்பற்றி வருகிறது.
2020 ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நமது வீரர்கள் நாட்டிற்காக வீரதீரமாகப் போராடி தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். ஆனால் பின்னர் பேசிய பிரதமர், சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை என்று கூறினார்.
பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க மோடி அரசு எந்த சூழ்நிலையையும் உருவாக்கும். ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு சீனா வெளிப்படையாக ஆதரவு அளித்த போதிலும் மோடியிடமிருந்து எந்த பதிலும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
- 19-வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வி என காங்கிரஸ் விமர்சனம்
- சீனா இந்திய எல்லையை தாண்டவில்லை என்றால், பேச்சுவார்த்தை ஏன்?
இந்தியா- சீனா இடையில் எல்லைக் கட்டுப்பாடு கோடு (LAC) தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது இந்திய ராணுவ வீரர்கள் 30-க்கும் மேற்பட்டோர் வீரமரணம் அடைந்தனர். இதனால் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. பின்னர், பேச்சுவார்த்தைக்குப்பின் பதற்றம் தணிந்தது.
இந்த சம்பவத்தின்போது சீன ராணுவம் இந்தியாவில் பல மைல் தூரம் நுழைந்து ஆக்கிரமித்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், இந்தியாவின் நிலத்தை யாரும் ஆக்கிரமிக்க முடியாது என மோடி அரசு தெரிவித்தது.
எல்லைக் கட்டுப்பாடு கோடு தொடர்பாக இந்தியா- சீனா இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. என்றாலும், இந்தியப் பகுதியில் இருந்து சீனா வெளியேறவில்லை.
இந்த நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களாக இந்தியா- சீனா ராணுவ கமாண்டர்கள் அளவிலான 19-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இந்திய எல்லை கட்டுப்பாடு கோட்டை தவிர்த்து மற்ற பிரச்சினைகளை தீர்க்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. ஆனால், சீனா ஆக்கிரமிப்பு செய்த பகுதியில் இருந்து வெளியேறுவது குறித்து எந்த முன்னேற்றமும் இல்லை. இருதரப்பு பேச்சுவார்தை நேர்மறையாக, ஆக்கப்பூர்வமாக, ஆழமானதாக அமைந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 19-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி. பாரத மாதாவை பாதுகாக்க சொல்லாட்சியை தாண்டி எப்போது முன்னோக்கி பயணிப்பீர்கள் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சுர்ஜிவாலா கூறுகையில் ''கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில இருந்து தற்போது மூன்று வருடங்கள், மூன்று மாதங்கள் ஆகியும் முந்தைய நிலை திரும்பவில்லை. டெப்சாங் பகுதியில் இந்தியப் படைகள் 65 பாதுகாப்பு பாயிண்ட்களில் 26-ல் பாதுகாப்பை தொடர் முடியாது.
சீனா, இந்தியாவில் உள்ள ஒய் ஜங்சன் என அழைக்கப்படும் பாட்டல்நெக்கில் இந்திய ராணுவத்தை தடுக்கிறது. சீன ராணுவம் வெட்கமின்றி ஆக்கிரமித்த நமது பகுதியில் இருந்து, எப்போது வெளியேற்றப்படுவார்கள்?
2020 ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய நிலை எப்போது உருவாகும். அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது, இந்திய எல்லைக்குள் யாரும் நுழையவில்லை என்று மோடி கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 20-ந்தேதி தெரிவித்தாரே, அதே நிலையில் இருக்கிறாரா? அல்லது நாட்டை தவறாக வழி நடத்தினாரா?
சீனா இந்திய எல்லையை ஆக்கிரமிக்கவில்லை என்றால், ஏன் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள். பாரத மாதாவை பாதுகாக்க சொல்லாட்சியை தாண்டி எப்போது முன்னோக்கி பயணிப்பீர்கள். எல்லையில் எப்போது முந்தைய நிலை திரும்பும்.
இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.






