என் மலர்
நீங்கள் தேடியது "அணுஆயுத சோதனை"
- 2020 இல் சீனா தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- அணுசக்தி சோதனைத் தடை ஒப்பந்தத்தை மீறி, சோதனை நடத்தி உள்ளது.
ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் பிறகு இந்தியா - சீனா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.
கடத்த ஆண்டு பிரதமர் மோடி, ஜிஜின்பிங் சந்திப்பின் பின் உறவு சற்று சீரானது. ஆனால் இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதியில், சீனா தங்கள் பக்கம் உள்ள பகுதியில் தொடர்ந்து பல்வேறு கட்டுமானங்களை மேற்கொண்டு வருகிறது. இவை ராணுவ கட்டுமானங்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் கல்வான் தாக்குதலுக்கு சரியாக ஒரு வாரம் கழித்து, ஜூன் 22-23 தேதிகளில் சீனா ரகசியமாக அணு ஆயுத சோதனை நடத்தியதாக அமெரிக்கா தற்போது குற்றம்சாட்டி உள்ளது.
வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் உள்ள லோப் நூர் சோதனைத் தளத்தில் இந்த ரகசிய அணு ஆயுதச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இதன்மூலம் அணுசக்தி சோதனைத் தடை ஒப்பந்தத்தை மீறி, தீவிரமான சோதனையில் ஈடுபட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.
சீனா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், தாங்கள் சர்வதேச விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாகத் தெரிவித்துள்ளது.
வடகொரியா அணுஆயுத சோதனைக்குப் பேர் போனது. அந்நாட்டின் 'மேன்டேப்' மலைப் பகுதியில் புங்கேரி அணு ஆயுத சோதனைக் கூடம் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கு ஒரு அணுஆயுத சோதனை நடத்தப்பட்டது.
அப்போது அப்பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர் 2-வது முறையாக 4.1 ரிக்டரில் நில அதிர்வு உருவானது. அது ஜப்பானின் நாகசாகி நகரில் வீசப்பட்ட அணுகுண்டை விட 10 மடங்கு சக்தி வாய்ந்தது என ஆய்வாளர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இடத்தில் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆய்வில் மேலும் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியானது. அதாவது, அணு ஆயுத சோதனையின் காரணமாக அங்குள்ள 'மேன்டேப்' மலை 11.5 அடி தூரம் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். மேலும் அந்த மலையானது சுமார் 1.6 அடி பூமிக்குள் புதைந்துள்ளதும் தெரிய வந்தது. #northkoreamountain #nucleartestesting






