என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டேட்டிங்"
- அவருக்கு மெலோனியும் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
- பல்வேறு காதல் உறவுகள் கொண்டவராக அறியப்படும் எலான் மஸ்க் மெலோனியுடன் டேட்டிங் செய்கிறாரா என்ற கேள்வி எழுந்தது
உலக பணக்காரருக்கும் தொழிலதிபருமான 53 வயதாகும் எலான் மஸ்க்கும் 47 வயதாகும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனியும் டேட்டிங் செய்வதாக சமூக வலைதளங்களில் அவர்கள் இருவரின் புகைப்படங்கள் பரவி வருகிறது. நியூயார்க்கில் சம்பீத்தில் அட்லாண்டிக் கவுன்சில் குளோபல் சிட்டிசன் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் பிரதமர் மெலோனிக்கு எலான் மஸ்க் விருது வழங்கி பாராட்டி பேசியுள்ளார்.
வெளிப்புறத்தை விட உள்ளுக்குக்குள் அதிக அழகாக இருக்கும் ஒருவருக்கு, இத்தாலி பிரதமராக தனது பணியை சிறப்பாக செய்து வரும் நான் பார்த்து வியக்கும் மெலோனிக்கு இந்த விருதை வழங்குவதில் மகிழ்ச்சி. மெலோனி உண்மையான நேர்மையான ஒருவர் என்று மஸ்க் அந்த விழாவில் மெலோனியை புகழ்ந்து தள்ளியுள்ளார். அவருக்கு மெலோனியும் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
Grazie Elon pic.twitter.com/NgHchWLUtB
— Giorgia Meloni (@GiorgiaMeloni) September 24, 2024
பல்வேறு காதல் உறவுகள் கொண்டவராக அறியப்படும் எலான் மஸ்க் மெலோனியுடன் டேட்டிங் செய்கிறாரா என்று அவர் மெலோனியை புகழும் வீடியோவையும் இருவரும் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து பலர் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் எலான் மஸ்க் அதை முற்றிலுமாக மறுத்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் என் தாயாருடன் பங்கேற்றேன். அதிபர் மெலோனியுடன் எந்த காதல் உறவும் இல்லை என்று மஸ்க் விளக்கம் அளித்துள்ளார்.
- ஊழியர்களுக்கு இந்த சலுகை இந்தாண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை 6 மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இந்த டிண்டர் விடுப்பைப் பயன்படுத்தி ஊழியர்கள் டேட்டிங் செய்யலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தைச் சேர்ந்த ஒயிட்லைன் குரூப் என்ற மார்கெட்டிங் நிறுவனம் ஒன்று தங்களின் ஊழியர்கள் டேட்டிங் செல்வதற்காக ஊதியத்துடன் கூடிய விடுப்பு (Tinder Leave) வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தாண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை 6 மாதங்களுக்கு இந்த டிண்டர் விடுப்பைப் பயன்படுத்தி ஊழியர்கள் டேட்டிங் செய்யலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனது காதலனுடன் வெளியே செல்ல நேரமில்லை என அந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண் கூறியதை அடுத்து அந்நிறுவனம் இந்த முடிவை அறிவித்துள்ளது.
காதல் செய்வதால் மகிழ்ச்சி அதிகரிக்கும், இது உற்பத்தியை அதிகரிக்க உதவும் என அந்நிறுவனம் நம்புகிறது.
- அதை ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் அவர்களுக்கு உணவு அளிக்காமல் அடித்து துன்புறுத்துகிறது இந்த கும்பல்.
- லாவோஸ் நாட்டில் போலி வேலைவாய்ப்புகளை நம்பி இந்தியர்கள் ஏமாற வேண்டாம்
தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து அருகே உள்ள லாவோஸ் நாட்டில் சைபர் குற்றங்களுக்காக அடிமைகளாக பயன்படுத்தப்பட்டு வந்த 47 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதிக சம்பளத்தில் ஐ.டி வேலை இருப்பதாக கூறி லாவோஸ் நாட்டுக்கு அழைத்துச்செல்லப்பட்ட இந்தியர்கள் பலர் சைபர் குற்றங்களில் ஈடுபட நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர் என்று சமீப காலமாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
லாவோஸ் மற்றும் கம்போடியாவில் இது போன்ற மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட 635 இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது, லாவோஸின் பொஹியோ மாகாணத்தில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஐடி நிறுவன போர்வையில் இயங்கி வந்த டேட்டிங் செயலி மோசடிகளில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர்கள் 47 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளின் பின்னணியில் இதுபோன்று இந்தியர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டேட்டிங் செயலிகளில் பெண்களை போன்று புரொபைல் உருவாக்கி இந்தியாவில் உள்ளவர்களிடம் சாட்டிங் செய்து அவர்களை கிரிப்டோ மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளுக்கு இட்டுச் செல்வதே இங்கு பணியமர்த்தப்பட்டுள்ள இந்தியர்களின் வேலை.
அதை அவர்கள் ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் அவர்களுக்கு உணவு அளிக்காமல் அடித்து துன்புறுத்துகிறது இந்த கும்பல். இதுதொடர்பாக இந்தியத் தூதரகத்துக்குச் சிலர் தகவல் அளித்த நிலையில் உள்ளூர் அதிகாரிகள் உதவியுடன் அதிரடி ஆய்வில் ஈடுபட்டு 47 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில் 30 பேர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 17 பேரை இந்தியாவுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருவதாக தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், லாவோஸ் நாட்டில் போலி வேலைவாய்ப்புகளை நம்பி இந்தியர்கள் ஏமாற வேண்டாம் என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
- காதல் என்பது ஒவ்வொரு நாளும் சின்ன சின்ன சைகைகள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று அவர் பதிவிட்டுள்ளார்.
- பதிவு வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
டேட்டிங் கலாசாரம் உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிறது. இளம் ஜோடிகள் தங்கள் இணையை தேர்ந்தெடுக்க இணையத்தில் சில டேட்டிங் செயலிகளும் வந்துவிட்டன. இந்நிலையில் இந்திய ஆண்களுடன் டேட்டிங் செய்யாததற்கு மூன்று காரணங்கள் உள்ளது என ஒரு பெண் பட்டியலிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேத்னா சக்கரவர்த்தி என்ற அந்த பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதற்கான காரணங்களை விளக்கி உள்ளார். அதில், இந்திய ஆண்கள் கடினமான உரையாடல்களை கற்றுக்கொள்ளவில்லை. அவர்களால் ஒரு விஷயத்தை வாதிட முடியாதபோது அவர்கள் அமைதியாகி விடுகின்றனர்.
மேலும் அவர்கள் பெண்ணை ஆக்ரோஷமானவர் என்று முத்திரை குத்துகின்றனர். இந்திய ஆண்களுக்கு காதல் புரியவில்லை. காதல் என்பது ஒவ்வொரு நாளும் சின்ன சின்ன சைகைகள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று அவர் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு வைரலான நிலையில் பயனர்கள் பலரும், இது இந்திய ஆண்களின் பிரச்சினை அல்ல. இது பாலின பிரச்சினை என்று பதிவிட்டுள்ளனர்.
- தமன்னா நடித்த அரண்மனை-4 படம் பெரிய வெற்றியை பெற்று ரூ.100 கோடி வசூலையும் குவித்தது.
- லஸ்ட் ஸ்டோரீஸ்-2 படத்தின் விருந்தில் தமன்னாவிடம் காதலை கேட்டேன்.
தமிழ், இந்தி, தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் தமன்னா. சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா நடித்த அரண்மனை-4 படம் பெரிய வெற்றியை பெற்று ரூ.100 கோடி வசூலையும் குவித்தது.
தமன்னா லஸ்ட் ஸ்டோரீஸ்-2 என்ற வெப் தொடரில் நடித்த போது சக நடிகரான விஜய்வர்மாவுடன் காதல் உருவானது. இந்த தொடரில் படுக்கையறை காட்சிகளில் இருவரும் நெருக்கமாக நடித்திருந்தனர்.
தொடர்ந்து தமன்னாவும், விஜய் வர்மாகவும் பல்வேறு இடங்களில் டேட்டிங் செய்து வந்த நிலையில் கடந்த மாதம் தங்கள் காதலை உறுதி செய்தனர். தமன்னாவுடனான காதல் பற்றி விஜய் வர்மா கூறியதாவது:-
காமக்கதைகளுக்கு பிறகு எங்கள் உறவு தொடங்கியது. முதலில் நாங்கள் சக நடிகராக சந்தித்தோம். லஸ்ட் ஸ்டோரீஸ்-2 படத்தின் விருந்தில் தமன்னாவிடம் காதலை கேட்டேன். 2005-ம் ஆண்டு நான் ஐதராபாத்தில் இருந்து வெளியேறி மும்பை வந்தேன். தமன்னா மும்பையில் இருந்து ஐதராபாத் வந்தார். ஐதராபாத்தில் நிலை நிறுத்திய மும்பை பெண். நான் ஐதராபாத் பையன். தமன்னா தமிழ், தெலுங்கு சரளமாக பேசுகிறார் என்றார். திருமணம் குறித்து தமன்னா கூறும்போது, "திருமணம் ஒரு பெரிய பொறுப்பு. அது ஒரு விருந்து அல்ல" என கூறினார்.
- மைனர் பெண்களின் ஒப்புதலுடனே மைனர் சிறுவர்கள் டேட்டிங் செல்லும் நிலையில் ஏன் சிறுவர்களை மட்டும் கைது செய்ய வேண்டும்
- ஒரே சிறையில் இதுபோன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 20 சிறுவர்களை பார்த்தேன்
சிறுமிகளுடன் டேட்டிங் செய்வதாக மைனர் சிறுவர்கள் கைது செய்யப்படுவது அதிகரிக்கத் தொடங்கியள்ளது. ஆனால் மைனர் பெண்களின் ஒப்புதலுடனே மைனர் சிறுவர்கள் டேட்டிங் செல்லும் நிலையில் ஏன் சிறுவர்களை மட்டும் கைது செய்ய வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் பந்தாரி என்ற சமூக ஆர்வலரால் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்ட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் வெறுமனே சிறுவர்களை கைது செய்வதற்கு பதிலாக நடைமுறை தீர்வுகள் குறித்து ஆராய வேண்டும். பெற்றோரின் புகார் மட்டுமே சிறுவர்களை கைது செய்வதற்கு போதுமானது அல்ல. கைது செய்வதற்கு பதிலாக சிறுவர்களுக்கு அதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறை வழங்கலாம். மாநில அரசு இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து காவல்துறையினருக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். மேலும் மத்திய மாநில அரசுகள் இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
பொதுநல வழக்கு தாக்கல் செய்த பந்தாரி, ஒரே சிறையில் இதுபோன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 20 சிறுவர்களை பார்த்தேன் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- டிண்டர் எனும் ஆப் மிகவும் பிரபலமானது.
- டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்துக் கொண்டு இருக்கும் இளைஞர் டிண்டரில் வர்ஷா என்ற பெண்ணிடம் பேசி வந்துள்ளார்.
தற்பொழுது உள்ள சமூதாயத்தில் இளைஞர்கள் தங்களின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கு பல ஆப்கள் மற்றும் வெப்சைட்டுகள் வந்துவிட்டது.
அதில் டிண்டர் எனும் ஆப் மிகவும் பிரபலமானது. இதில் உங்களுக்கு பிடித்த பெண்களுக்கு அவருக்கும் உங்களை பிடித்திருந்தால் அவர்களுடன் நீங்கள் பேசலாம். இவ்வாறு டிண்டரில் தன்னுடைய வாழ்க்கை துணை கிடைத்தவர்கள் ஏராளம்.
ஆனால் இதே டிண்டர் ஆப்பில் நாம் பல்வேறு மோசடிகளையும் கேள்வி பட்டிருப்போம் அதேப் போல் மற்றொரு மோசடி டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படித்துக் கொண்டு இருக்கும் இளைஞர் டிண்டரில் வர்ஷா என்ற பெண்ணிடம் பேசி வந்துள்ளார். இவ்வாறு டிண்டரில் ஆரம்பித்த இந்த காதல் நாளடைவில் வளர்ந்துள்ளது. வர்ஷாவின் பிறந்தநாளை டெல்லியில் உள்ள ப்ளாக் மிரர் கஃபேவில் கொண்டாட வருகிறார் அந்த இளைஞன்.
கஃபேவில் இருவரும் பேசிவிட்டு இரண்டு கேக்குகள், ஸ்னாக்ஸுகள் மற்றும் சிலவற்றை ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் திடீரென்று வர்ஷா தனது குடும்பத்தில் ஏதோ பிரச்சனை என்று கூறிவிட்டு அவசரமாக அந்த இடத்தை விட்டு செல்கிறார் வர்ஷா.
இதைதொடர்ந்து, ஆர்டர் செய்ததை சாப்பிட்டுவிட்டு பில் செலுத்தலாம் என்று சென்ற இளைஞனுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. பில் கட்டணம் சில ஆயிரத்தில் இல்லை 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் என்று இருந்தது.
செய்வதறியாமல் திகைத்து நின்ற இளைஞனிடம் இருந்து அந்த கஃபே உரிமையாளர் பணத்தை செலுத்தும்படி மிரட்டியுள்ளார்.
வேறு வழியில்லாமல் அவரும் பணத்தை கட்டிவிட்டு நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று புகாரளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதில், பிளாக் கஃபேவை பாவா, அன்ஷ் க்ரோவர் மற்றும் வன்ஷ் பாவா ஆகிய மூவரும் இணைந்து நடத்தி வருகின்றனர்.
வர்ஷா என்ற பெண்ணும் இதில் கூட்டு களவானி என்றும் அவளின் உண்மையான பெயர் அஃப்சன் பர்வீன் என்றும் தெரியவந்துள்ளது.
ஆர்யன் அந்த இளைஞரிடம் டிண்டரில் பேசி, பர்வீனின் புகைப்படத்தை வர்ஷா என்ற பெயரில் அனுப்பி வைத்து, கடந்த ஜூன் 23 ஆம் தேதி அந்த கஃபேவிற்கு வரவழைத்துள்ளது தெரியவந்துள்ளது.
அவள் திடீரென குடும்ப அவசரம் என்று சென்றவுடன், அந்த கஃபேவை நடத்தி வந்த ஆர்யன் வேண்டுமென்றே அந்த பில்லை கொடுத்துள்ளார். இதை ஒரு குழுவாக செய்துள்ளனர்.
மேலும், அந்த பெண்ணுக்கு போலீசார் வலை வீசிய நிலையில், அவள் ஷாதி டாட் காம் திருமண ஆப் மூலம் சந்தித்த ஒரு ஆணுடன் டேட் செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த பெண் உள்பட கஃபே உரிமையாளர்களையும் போலீசார் பிடித்து காவலில் வைத்துள்ளனர்.
இச்சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிண்டர் உபயோகிக்கும் இளைஞர்கள் இதை கருத்தில் கொண்டு உஷாராக இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
- சோபிதா துலி பாலாவுடன் அடிக்கடி டேட்டிங் செல்வதாக தகவல்கள் பரவின.
- புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. இவர் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார்.
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இதைத்தொடர்ந்து சமந்தா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
நாக சைதன்யாவும் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். புதிய படம் ஒன்றில் மீனவர் கதாபாத்திரத்தில் நடித்துவரும் நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதா துலி பாலாவுடன் அடிக்கடி டேட்டிங் செல்வதாக தகவல்கள் பரவின.
இந்த தகவலை இருவரும் ஏற்கவோ மறுக்கவோ இதுவரை இல்லை. இந்நிலையில் இருவரும் ஐரோப்பாவில் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளனர். அங்கு நாக சைதன்யாவும் சோபிதா துலி பாலாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை தினேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.
- தினேஷிடம் பணம் இழந்த பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் தில்ஷிப் நகரை சேர்ந்தவர் தினேஷ். இவர் தன்னை ஒரு பெண்ணாக காட்டி டேட்டிங் செயலி மூலம் ஒரு வாலிபருடன் நட்பு கொண்டார்.
சில வாரங்கள் அவருடன் அரட்டை அடித்த தினேஷ் அவசர தேவை என்று கூறி அவரிடமிருந்து ரூ 4.09 லட்சத்தை அவரது வங்கி கணக்கில் பெற்றார்.
இதேபோல் இந்திய டேட்டிங் செயலிகளை பயன்படுத்தி பலரிடம் இருந்து ரூ.2 கோடி வரை பணம் பறித்தார்.
பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை தினேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடன் டேட்டிங்கில் ஈடுபடுபவர் பெண் இல்லை ஒரு ஆண் என்பதை கண்டுபிடித்தனர்.
தினேஷிடம் பணம் இழந்த பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷை கைது செய்து அவரிடமிருந்து ரூ. 2 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர்.
- எக்ஸ் தளத்தில் ஒருவர் புத்தகத்தில் உள்ள பாடத்தினை புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
- இந்த யுகத்தில் இதை ஏற்றுக்கொண்டு பாடத்திட்டத்தில் இது போன்ற தலைப்புகளை சேர்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
புதுடெல்லி:
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு பாட புத்தகத்தில் டேட்டிங் மற்றும் ரிலேசன்ஷிப் குறித்த பாடங்கள் இடம்பெற்றிருப்பது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதில் டேட்டிங் மற்றும் உறவுகள், பேய், கேட்பிஷிங், சைபர்புல்லிங் போன்ற அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகம் சிறந்த நட்பு போன்ற தலைப்புகளை உள்ளடக்கி உள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒருவர் புத்தகத்தில் உள்ள பாடத்தினை புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
அதில், இளம் வயது என்பது உணர்ச்சிகளால் நம் மனதையும், இதயத்தையும் அடிக்கடி குழப்பும் பருவம். இப்படியான பருவத்தில் மாணவர்களுக்கு வெவ்வேறு டேட்டிங் விதிமுறைகள் குறித்த வழிகாட்டுதலை வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது என கூறி உள்ளார்.
மற்றொரு பயனர், காலம் மாறிக்கொண்டிருக்கிறது, இப்போதெல்லாம் மக்கள் மிக இளம் வயதில் இருந்தே டேட்டிங் செய்ய தொடங்குகிறார்கள். இந்த யுகத்தில் இதை ஏற்றுக்கொண்டு பாடத்திட்டத்தில் இது போன்ற தலைப்புகளை சேர்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
இந்த சிக்கலான இயக்கவியலை புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு உதவுவது நம் நாட்களில் டேட்டிங் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை விட மிகவும் சிறந்தது என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், இது நேர்மையாக பெரியது. இந்திய கல்வி முறையின் உண்மையான வளர்ச்சியை அனைவரும் பார்க்க விரும்புகிறார்கள் என பதிவிட்டுள்ளார்.
இதுபோன்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், புத்தகத்தில் இடம்பெற்ற இந்த தலைப்பு விவாத பொருளாக மாறி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்