search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girls"

    • பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கு முதிர்வு தொகையை கலெக்டர் வழங்கினார்.
    • விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவார ணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித் தொகை, திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    இம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்கு மாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி னார். சமூகநல அலுவ லகத்தின் கீழ் செயல்படும் முதலமைச்ச ரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 18 வயது பூர்த்தியடைந்த 45 பயனாளிகளுக்கு முதிர்வு தொகையாக ரூ.18 லட்சத்து 20 ஆயிரத்து 10-க்கான காசோலைகளையும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரத்து 800 மதிப்பில் இலவச தையல் எந்திரங் களையும் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவி குமார், மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் முத்துக்கழுவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்து தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜ மாணிக்கத்தை கைது செய்தனர்.

    காடையாம்பட்டி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை பொன்னம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (50).

    இவர் தீவட்டிப்பட்டி அடுத்த நடுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் காடையாம்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் மாலை நேரங்களில் டியூஷன் நடத்தி வருகிறார்.

    இவரிடம் காடையாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவிகள் டியூஷன் பயின்று வருகின்றனர். இதில் 2 மாணவிகளை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆசிரியர் ராஜமாணிக்கம் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்து தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜ மாணிக்கத்தை கைது செய்தனர். 

    • உணவு, இயற்கை காய்கறிகள், பழ வகைகள், சிறு தானியங்கள் குறித்து விழிப்புணர்வு
    • வாழப்பாடி புதுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான அடுப்பில்லா சமையல் போட்டி

    வாழப்பாடி:

    பள்ளி குழந்தைகளிடையே சரிவிகித ஊட்டச்சத்து உணவு, இயற்கை காய்கறிகள், பழ வகைகள், சிறு தானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வாழப்பாடி புதுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான அடுப்பில்லா சமையல் போட்டி நடத்தப்பட்டது.

    பள்ளி தலைமையாசிரியை ஜெயலட்சுமி தலைமையில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகா தேவி, மேற்பார்வையாளர் பிரேமா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மாணவிகளிடையே போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இதனைத்தொடர்ந்து சரிவிகித சத்துணவு, சுகாதாரம் மற்றும் ரத்த சோகை தவிர்ப்பு இயற்கை காய்கறிகள், பழ வகைகள், சிறுதானியங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் நன்மைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கினர். நிறைவாக, அங்கன்வாடி பணியாளர் வசந்தி நன்றி கூறினார்.

    • சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 2 தம்பதிகளின் 14 வயது உடைய 2 மகள்கள் சேலம் கிச்சிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
    • அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் மாமன் உடனடியாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 2 தம்பதிகளின் 14 வயது உடைய 2 மகள்கள் சேலம் கிச்சிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

    இந்த 2 மாணவிகளும் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர். பின்னர் மதியம் பள்ளியிலிருந்து சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தனர். அதில் ஒரு மாணவி தனது தாய் மாமனுக்கு போன் செய்து நாங்கள் இருவரும் வீட்டிற்கு செல்ல விருப்பமில்லாத காரணத்தால் வெளியூர் செல்கிறோம், எங்களை தேட வேண்டாம் என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் மாமன் உடனடியாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தனர்.

    இதையடுத்து போலீசார் மாணவிகளின் செல்போன் சிக்னலை கண்காணித்தபோது மாணவிகள் திருச்சி பஸ்சில் சென்று கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர். துரிதமாக செயல்பட்ட போலீசார் உடனடியாக பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரின் செல்போன் எண்களை வாங்கி அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் அந்த மாணவிகளை முசிறி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கும்படி தெரிவித்துக் கொண்டனர். அதன்படி முசிறி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட மாணவிகளை பள்ளப்பட்டி போலீசார் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று இரவு மீட்டு சேலத்திற்கு அழைத்து வந்தனர்.

    • நரிக்குடி அருகே வட்டார விளையாட்டு போட்டிகள் நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகேயுள்ள இலுப்பையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.

    இந்த போட்டிகளில் நரிக்குடி ஓடம் கஸ்தூரி பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளி மாணவிகள் இறகு பந்து, எறிபந்து, கோகோ, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவிகளான ரோகிணி குண்டு எறிதல், தட்டு எறிதல் போட்டிகளில் முதலிடமும், லாவண்யா நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடமும், இலக்கியா தட்டு எறிதல் போட்டியில் 2-ம் இடமும் பெற்றனர். 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் ஜனனி 2-ம் இடமும், 80 மீட்டர் தொலைவிலான தடை ஓட்டப்போட்டியில் அருணா 3-ம் இடமும், காவியா ஸ்ரீ, ஜனனி, பிரமிளா மற்றும் அருணா ஆகியோர் 100 மீட்டர் தொலைவிலான ஓட்டப்பந்தய போட்டிகளில் கலந்துகொண்டு 3-ம் இடமும் பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    • மண்எண்ணை கேனுடன் நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • தண்ணீர் கொண்டு வர முயற்சிக்கும்போது ஒருவர் குழாய் அமைக்க விடாமல் தடுக்கிறார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் மனு அளிக்க வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே வந்தபோது, அவர்கள் கொண்டு வந்திருந்த மண்எண்ணை கேனுடன் நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மண்எண்ணை கேனை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இதனைதொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட பெண்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களில் முத்தழகி என்பவர், தனது நிலத்தில் விவசாயம் செய்து வருவதும், அதற்காக அருகில் உள்ள மற்றொரு நிலத்திலிருந்து ஆழ்துளை கிணறு அமைத்து வாய்க்கால் மூலம் பாசனம் செய்து வருவதும், தற்போது அந்த நிலத்திலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வர முயற்சிக்கும்போது ஒருவர் குழாய் அமைக்க விடாமல் தடுக்கிறார். 

    இதனால் 2 ஆண்டுகளாக பயிர் செய்ய முடியாமல் சிரமப்படுகிறேன். எனவே ஆழ்துளை கிணற்றிலிருந்து பயிர் செய்யக்கூடிய நிலத்திற்கு குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளிக்க வந்ததாக கூறினார். உடனே போலீசார், இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இந்த பிரச்சினை தொடர்பாக கலெக்டரிடம் மனு அளியுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு அளிக்க சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பெற்றோர்கள் சிறுமிகளை தேடினர். அவர்கள் கிடைக்கவில்லை.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமிகளை தேடி வந்தனர்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் அடுத்த எழுமேடு பகுதியை சேர்ந்த மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தோழி 15 வயது சிறுமி. இருவரையும் திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர்கள் சிறுமிகளை தேடினர். அவர்கள் கிடைக்கவில்லை. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமிகளை தேடி வந்தனர். அப்போது திருவண்ணாமலை அடுத்த சேத்துப்பட்டு பகுதியில் 2 சிறுமிகள் இருந்தது தெரிய வந்தது. பின்னர் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை பாதுகாப்பாக மீட்டு வந்தனர். வீட்டில் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததால் ஊரை விட்டு சென்றுவிடலாம் என்று எண்ணிக் கொண்டு 2 சிறுமிகள் சென்றதாக போலீசாருக்கு தெரியவந்தது. இது போன்ற நடவடிக்கைகளில் வருங்காலங்களில் ஈடுபடக்கூடாதென சிறுமிகளிடம் அறிவுரை கூறிய போலீசார், அவர்களது பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.

    • மாதம் தோறும் 2-வது செவ்வாய்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
    • வைப்புத் தொகை ரசீதுகள் பெற நட வடிக்கை மேற்கொள்ளுதல்

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

    கடலூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்த பெண் குழந்தைகளில் 18 வயது நிறைவடைந்தும் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்காமல் உள்ள பெண் குழந்தைகள் மற்றும் புதிய பயனாளிகளை சேர்ப்பதற்கும் மாவட்ட கலெக்டர்வளாகம், மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் மாதம் தோறும் 2-வது செவ்வாய் கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

    சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை எனில் ரூ. 50 ஆயிரத்திற்கான நிலை வைப்புத் தொகையும், 2பெண் குழந்தைகள் எனில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ. 25 ஆயிரம் நிலை வைப்புத் தொகை செய்யப்பட்டு வருகிறது. முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகளும் ஆக மொத்தம் மூன்று பெண் குழந்தைகளுக்கும் சிறப்பு அனுமதியின் பெயரில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தலா ரூ. 25 ஆயிரம் பெற்று பயனடையலாம்.

    முகாமில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளை சேர்த்தல், விண்ணப்பித்த 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல், விண்ணப்பித்து நீண்ட நாட்களாக வைப்புத் தொகை ரசீதுகள் பெறாமல் இருப்பவர்களுக்கு வைப்புத் தொகை ரசீதுகள் பெற நட வடிக்கை மேற்கொள்ளுதல், வைப்புத் தொகை ரசீதுகளில் பெயர், பிறந்த தேதி மாற்றம் இருப்பின் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளு வதற்கு இந்த சிறப்பு முகாமில் பொது மக்கள் கலந்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • பிரச்சினை தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.
    • டாஸ்மாக் கடையை மூடாமல் இந்த கேட்டை திறக்க முடியாது.

    சென்னை:

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் மாநகராட்சி பெண்கள் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    டி.எச்.ரோடு பகுதியில் பள்ளியின் பின்பக்க கேட் உள்ளது. மாணவிகள் பலர் இந்த வாசல் வழியாக பள்ளிக்கு செல்வது வழக்கம். இங்குள்ள பாசுதேவ் தெருவில் பள்ளியில் இருந்து 40 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. மாணவிகள் இந்த பகுதி வழியாக செல்லும்போது மது குடித்துவிட்டு வருவோரால் இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு இங்கு பயிலும் மாணவி இந்த வாசல் வழியே பள்ளி முடிந்து சென்றபோது மதுபோதையில் 4 வாலிபர்கள் பின் தொடர்ந்தனர். அந்த மாணவி கொருக்குப்பேட்டையில் உள்ள வீட்டுக்கு செல்லும்வரை அந்த வாலிபர்கள் பின்னால் தொடர்ந்து சென்றுள்ளனர். தினமும் பள்ளி முடியும் வேளையில் மாணவிகளிடம் பேசுவதற்காக சில ஆசாமிகள் காத்திருப்பதும், மாணவிகளை பின்தொடர்ந்து செல்வதும் வாடிக்கையாகி உள்ளது.

    இந்த பிரச்சினை அதிகமானதால் மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளியின் கேட் மூடப்பட்டது. இது மதுப்பிரியர்களுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது. ஆனால் மாணவிகள் பிரதான கேட் அமைந்துள்ள டி.எச்.சாலையை எம்.சி.எம்.கார்டன் 1-வது தெருவழியாக 400 மீட்டர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக பள்ளி நிர்வாக குழுவில் உள்ள அந்த பகுதி வார்டு கவுன்சிலர் ரேணுகா கூறுகையில், இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. மாணவிகளின் பாதுகாப்பு கருதியே பள்ளியின் பின்பக்க கேட் மூடப்பட்டு உள்ளது. இங்குள்ள டாஸ்மாக் கடையை மூடாமல் இந்த கேட்டை திறக்க முடியாது.

    இதுபற்றி மாவட்ட கலெக்டர் மற்றும் டாஸ்மாக் அதிகாரியிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பள்ளிக்கு பின்னால் ஒரு நூலகம் உள்ளது. டாஸ்மாக் கடை இயங்குவதால் பள்ளி நேரத்தில் கூட நூலகத்தில் மாணவிகள் உட்கார முடியவில்லை என்றார். பள்ளி தலைமை ஆசிரியை கோகிலா கிரேஸ் கூறுகையில், டாஸ்மாக் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால்தான் பின்பக்க கேட்டை திறக்க முடியும் என்றார். இதுபற்றி ராயபுரம் எம்.எல்.ஏ. ஆர்.மூர்த்தி கூறுகையில், மாணவிகளுக்கு இடையூறாக இருந்தால் அந்த டாஸ்மாக் கடை மூடப்படும் என்றார்.

    • இந்த முகாம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும்.
    • ஓய்வூதியதாரா் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்துக்கான சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கி தொடா்ந்து 3 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறியதாவது:

    தஞ்சை மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வது தொடா்பாக தமிழக முதல்வா் அறிவிப்பின்படி இன்று சிறப்பு முகாம்கள் தொடங்கி நடந்து வருகிறது.

    இந்த முகாம் நாளை (சனிக்கிழமை ) மற்றும் நாளை மறுநாள் 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும்.

    இந்த முகாம்களில் விடுபட்ட விண்ணப்ப தாரா்கள் மற்றும் வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள், ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும், இந்திரா காந்தி முதியோா் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டம், அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோா் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரா் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மனைவி அந்த பகுதியில் உள்ள மாநகராட்சி பொது கழிப்பறை பொறுப்பாளராக உள்ளார்.
    • கழிவறைக்கு வரும் 2 சிறுமிகளுக்கு காதர்பாஷா பாலியல் தொந்தரவு கொடுத்த தாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் தாதாகப்பட்டி கார்ப்பரேசன் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் காதர்பாஷா வயது 54, இவரது மனைவி அந்த பகுதியில் உள்ள மாநகராட்சி பொது கழிப்பறை பொறுப்பாளராக உள்ளார். இதனால் அங்கு காதர்பாஷா அடிக்கடி சென்று வந்தார். அப்போது கழிவறைக்கு வரும் 2 சிறுமிகளுக்கு காதர்பாஷா பாலியல் தொந்தரவு கொடுத்த தாக கூறப்படுகிறது.

    இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியான பள்ளி மாணவி ஒருவர் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறினார். தலைமை ஆசிரியர் கொடுத்த தகவலின் பேரில் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவிகளான 2 சிறுமிகளுக்கும் காதர்பாஷா ப ாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து காதர்பாஷாவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

    • மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் நன்மை கிடைக்கும் என்பதற்கு புதுவை அரசு முன்மாதிரியாகத் திகழ்கிறது.
    • பெண் குழந்தைகள் ரூ.50 ஆயிரத்துடன் பிறக்கிறது என்ற புரட்சியை புதுவை அரசு செய்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் சமையல் கியாஸ் மானியம், பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் வைப்பு தொகை, முதல் அமைச்சரின் விபத்து உதவி காப்பீடு திட்டம், ஏழை குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி என 4 புதிய திட்டங்கள் தொடக்க விழா நடந்தது.

    விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சபா நாயகர் ஏம்பலம் செல்வம் முன்னிலை வகித்தார். கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் திட்டங்களை தொடங்கி வைத்தனர்.

    பெண் குழந்தைகளுக்கான நிதி உதவித் திட்டம் பெருமை சேர்க்கும் திட்டமாகும். குடும்பத் தலைவிகளுக்கான நிதி உதவித் திட்டம் அறிவித்த பிற மாநிலங்கள் அதனை செயல்படுத்த முடியாத நிலையில் புதுவையில் அந்த திட்டத்தை செயல்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. அதுபோலத்தான் சமையல் கியாஸ் மானிய திட்டத்தை யும் அறிவித்த பிற மாநிலங்கள் முழுமையாகச் செயல்படுத்தவில்லை. ஆனால், புதுவையில் செயல் படுத்தப்பட்டுவிட்டது.

    புதுவை முதலமைச்சர், அமைச்சர்கள் எந்த புகழையும் எதிர்பாராமல் மக்களுக்கான சேவையை ஆற்றிவருவது பாராட்டுக்குரியது.

    மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் நன்மை கிடைக்கும் என்பதற்கு புதுவை அரசு முன்மாதிரியாகத் திகழ்கிறது.

    ஆகவே, புதுவையை சிறந்த மாநிலமாக மட்டுமல்லாது, அரசுத் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தும் மாநிலமாகவும் மாற்றி வருகிறோம். ஆனால், சிலர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது சரியல்ல.

    மத்திய அரசிடமிருந்து சிறப்பு நிதியாக ரூ.1400 கோடியும், ஜி.எஸ்.டி. வருவாயில் ரூ.3 ஆயிரம் கோடியும் கிடைத்திருப்பது நிர்வாகம் சிறப்பாக நடந்து வருவதையே காட்டுகிறது.

    பெண் குழந்தை பிறக்கிறது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த நிலை மாறி புதுச்சேரியில் பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பமும் இறைவனை வேண்டிக் கொள்ளும் சூழ்நிலை புதுச்சேரியில் உருவாகி இருக்கிறது.

    ஒரு பெண்ணுக்கு உதவி செய்தோம் என்றால் அது அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சென்று சேரும். அந்த அடிப்படையில் தான் முதலமைச்சர் ரங்கசாமி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

    அந்த காலத்தில் பெண் குழந்தைகளை பாரமாக நினைத்தனர். ஆனால் புதுவையில் தற்போது பெண் குழந்தைகள் ரூ.50 ஆயிரத்துடன் பிறக்கிறது என்ற புரட்சியை புதுவை அரசு செய்துள்ளது. அவர்களின் பெயரில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யப்படுகிறது. இதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இனி மேல் பெண் குழந்தை என்றால் தலை நிமிர்ந்து நடக்கலாம். பெண்களுக்கான திட்டங்கள் என்றால் நான் நிச்சயம் உறுதுணையாக இருப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×