search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடுகள்"

    • ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.
    • சந்தையில் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும் கொண்டு வந்தனர்.

    அரூர்:

    கம்பைநல்லூரில் வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு சந்தையில் நடைபெறும் ஆடு, கோழி உள்ளிட்ட வாங்க விவசாயிகளும், ஆடு வளர்ப்பவரும், விற்பனைக்கு கொண்டு வந்தனர்

    ஆடுகளை வாங்க ஊத்தங்கரை, திருப்பத்தூர், ஆம்பூர், காரிமங்கலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.

    நேற்று நடந்த சந்தையில் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும் கொண்டு வந்தனர். ஒரு ஆடு விலை ரூ. 5,000 முதல் ரூ.9,500 வரையும் விற்பனையானது. சந்தையில் நேற்று ஆடுகள் மொத்தம் ரூ.23 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • எப்படி ரூ.600-க்கு விற்கப்படுகிறது என்பதற்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
    • உயிரோடு உள்ள ஆடுகளை வெட்டி பயன்படுத்துவது தான் பாதுகாப்பானதாகும்.

    சென்னை:

    சென்னை புளியந்தோப்பில் மாநகராட்சியின் இறைச்சி கூடம் செயல்பட்டு வருகிறது. அங்கு ஆடு மற்றும் மாடுகள் வெட்டப்பட்டு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. சென்னை நகரில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகளுக்கு இங்கிருந்து தான் விற்பனைக்கு இறைச்சி கொண்டு செல்லப்படுகிறது.

    மற்ற நாட்களைவிட ஞாயிற்றுக்கிழமைகளில் 5 ஆயிரம் ஆடுகள் அங்கு வெட்டப்படுகின்றன. கிலோ ரூ.700 வரை விற்கப்படுகிறது. ஆனால் இறைச்சி கடைகளில் ஆட்டு இறைச்சி கிலோ ரூ.900 வரை விற்கப்படுகிறது.

    புளியந்தோப்பு இறைச்சி கூடத்தின் முன் பகுதியில் சிலர் ஆட்டு இறைச்சி விற்பனை செய்து வருகின்றனர். அங்கு கிலோ ரூ.600-க்கு ஆட்டு இறைச்சி கிடைக்கிறது.

    மட்டன் கடைகளில் கிலோ ரூ.900-க்கு விற்கும்போது அங்கு எப்படி ரூ.600-க்கு விற்கப்படுகிறது என்பதற்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

    ராஜஸ்தான், சூரத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஞாயிற்றுக் கிழமைகளில் விற்பனைக்கு சனிக்கிழமை ஆடுகள் கொண்டு வரப்படும். ஒரு லாரிக்கு 350 ஆடுகள் வீதம் கொண்டு வரும்போது நெரிசலில் சிக்கி அவற்றில் 4 அல்லது 5 ஆடுகள் செத்து விடுவது வழக்கம். ஒரு லாரியில் 5 ஆடுகள் என்றால் 10, 15 லாரிகளில் வரும் போது 50 ஆடுகளுக்கு மேல் வழியில் இறந்து விடுகிறது.

    இறந்துபோன ஆடுகளை அந்த பகுதியில் உள்ள சிலர் குறைந்த விலைக்கு வாங்கி, சுத்தம் செய்து பிரீசரில் வைத்து பாதுகாக்கின்றனர்.

    மறுநாள் காலையில் அதனை வெட்டி விற்பனைக்கு கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    இறந்த ஆடுகளை பதப்படுத்தி உண்பது சுகாதார மற்றதாகும். உயிரோடு உள்ள ஆடுகளை வெட்டி பயன்படுத்துவது தான் பாதுகாப்பானதாகும்.

    ஆனால் இறைச்சி கூடத்தின் முன்பு சிலர் இதனை தொழிலாக செய்து வருகின்றனர். செத்து போன ஆட்டு இறைச்சிக்கும் உயிரோடு வெட்டிய ஆட்டு இறைச்சிக்கும் பார்க்கும் போது வேறுபாடு தெரியாது.

    இறைச்சி கடைகளை விட கிலோவிற்கு ரூ.300 குறைவாக கிடைப்பதால் அதனை மக்கள் தெரியாமல் வாங்கி சென்று பயன்படுத்துகின்றனர்.

    ஆனால் இதுபோன்ற சாகின்ற ஆடுகளை இறைச்சி கூடத்தில் தூக்கி எறிந்து விடுவார்கள். கூடத்தில் உள்ள வியாபாரிகள் இந்த செயலில் ஈடுபடுவது இல்லை. ஆனால் வெளியே சிலர் கடை வைத்து சுகாதாரமற்ற ஆட்டு இறைச்சி விற்பதை அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை.

    மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் தான் இறைச்சி கூடம் முழுவதும் உள்ளது. அப்படி இருக்கும் போது மலிவான விலையில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்வதை ஏன் தடுக்க முடியவில்லை என்று வியாபாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

    • விவசாய தோட்டத்தில் 80 செம்மறி ஆடுகளை வளர்த்து, அதனை பராமரித்து வருகிறார்.
    • 4 பேரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள பாப்பினி, பாலசமுத்திரம், முருங்ககாட்டுத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சிவகோகுல் (வயது 24). இவரது விவசாய தோட்டத்தில் 80 செம்மறி ஆடுகளை வளர்த்து, அதனை பராமரித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஆடுகளை மேய்ச்சல் முடித்து, மாலையில் அனைத்து ஆடுகளையும் தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    பின்னர் அடுத்த நாள் காலையில் வழக்கம் போல பட்டிக்கு சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பட்டியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 3 செம்மறி ஆடுகள் மற்றும் 5 செம்மறி ஆட்டுக்குட்டிகள் என மொத்தம் 8 ஆடுகள் காணாமல் போயிருந்தது. உடனே அக்கம் பக்கத்தில் சென்று தேடிப்பார்த்தும், விசாரித்து பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    மர்ம நபர்கள் ஆடுகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிவகோகுல் காங்கயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடிய நபர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று (வியாழக்கிழமை) காங்கயம் அருகே உள்ள நத்தக்காடையூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதுசமயம் காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், காரில் இருந்த 4 பேரையும் பிடித்து தீவிரமாக விசாரித்த போது அவர்கள் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பக்கம் உள்ள பச்சாபாளையம் கரடு பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 38), ஈரோடு, வெங்கியம்பாளையம் பகுதியை சேர்த்த விஜயகுமார் (35), ஈரோடு, கடைசி குப்பி வாய்க்கால் பகுதியை சேர்ந்த பேரறிவாளன் (24), ஹரிமுகேஷ் (21) என்பதும் இவர்கள் 4 பேரும் செம்மறி ஆடுகளை திருடியது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் 4 பேரும் விவசாய, கூலி வேலைக்கு சென்று கொண்டு இதுபோல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கொளத்தூரில் நடைபெற்ற கால்நடை வார சந்தையில் வெள்ளாடு, செம்மறிஆடு, குரும்பை ஆடு விற்பனை சூடு பிடித்தது.
    • வெள்ளாடு கிடாய் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று செம்மறியாடு ரு.7 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூரில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நாளன்று கால்நடை வார சந்தைக்கு சுற்றுவட்டார கிராமப் பகுதியில் இருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு இன்று கொளத்தூரில் நடைபெற்ற கால்நடை வார சந்தையில் வெள்ளாடு, செம்மறிஆடு, குரும்பை ஆடு விற்பனை சூடு பிடித்தது. வெள்ளாடு கிடாய் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று செம்மறியாடு ரு.7 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    இதன் காரணமாக கொளத்தூர் கால்நடை வார சந்தையில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கால்நடை விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளை விட வியாபாரிகள் அதிகளவில் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்ததால் ஆடுகளின் விலை கிலோ ஒன்றுக்கு 1,200 ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டது.

    • மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது.
    • சுமார் 2,500 ஆடுகள் வரை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் உள்ள மேலப்பாளையம் கால்நடை சந்தை தென்மாவட்டத்தின் புகழ்பெற்ற சந்தையாகும். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த சந்தை நடைபெறும்.

    இங்கு நெல்லை மட்டுமல்லாமல் தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் தங்களுடைய ஆடுகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். அதுதவிர கோழி, மீன், கருவாடு, மாடு உள்ளிட்டவையும் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

    பக்ரீத், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது வியாபாரிகளின் கூட்டமும், ஆடுகள் வாங்க வருபவர்களின் கூட்டமும் அலைமோதி காணப்படும். வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி மேலப்பாளையம் கால்நடை சந்தை இன்று களைகட்டி காணப்பட்டது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் இன்று கூட்டம் அலைமோதியது. சுமார் 2,500 ஆடுகள் வரை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் அவை சில மணி நேரங்களிலேயே முழுவதுமாக விற்று தீர்ந்துவிட்டன. சிறிய குட்டிகளை விட பெரிய ஆடுகளை அதிக ஆர்வத்துடன் கறிக்கடைக்காரர்கள் வாங்கி சென்றனர்.

    தீபாவளி தினத்தன்று பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும், புத்தாடைகள் உடுத்தியும் கொண்டாடும் நிலையில், தொடர்ந்து அவர்கள் அசைவ உணவுகள் சமைத்து சாப்பிட்டும் உற்சாகமாக பண்டிகையை கொண்டாடுவார்கள். எனவே இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்தது.

    சிறிய குட்டி ஆடு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விற்பனையானது. பெரிய ஆடுகள் ரூ.45 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. செம்பி கிடா ஒன்று ரூ.35 ஆயிரத்துக்கும், சண்டகிடா ரூ.30 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

    இதுதவிர செங்கிடா, கன்னி கிடா உள்ளிட்ட பல்வேறு ரக ஆடுகளின் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.4 கோடி வரை ஆடுகள் விற்பனை நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

    தொடர் மழையின் காரணமாக மேலப்பாளையம் கால்நடை சந்தையில் சேறும்- சகதியுமாக காணப்பட்டது. ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. தீபாவளியையொட்டி சந்தையில் அமோக விற்பனை நடப்பது வழக்கம். ஆயிரக்கணக்கான வியாபரிகள், பொதுமக்கள் வந்து செல்லும் சந்தையில் சேறும் சகதியுமாக காட்சியளித்தது பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.

    • யுவராஜ், அவிநாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்திருந்தார்.
    • ஆடு திருடியவரை கைது செய்து ஆடு மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள உகாயனூர், வடுகபாளையத்தை சேர்ந்தவர் யுவராஜ். இவரது ஆடு, கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டு போனது. இதுகுறித்து யுவராஜ், அவிநாசிபாளையம் போலீசில் புகார் தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் அந்த ஆட்டை விழுப்புரத்தை சேர்ந்த அந்தோணிசாமி என்பவரது மகன் அமல்ராஜ் (வயது 35) என்பவர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து ஆடு திருடிய அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஆடு மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சக்திவேல் தனது 250 ஆடுகளுடன் இரவு முழுவதும் கண்மாய் பகுதியிலேயே தவித்து வந்துள்ளார்.
    • விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வடமலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் நூற்றுக்கணக்கான ஆடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மாலை சக்திவேல் விளாத்திகுளம் அருகே உள்ள மாவிலோடை கிராமத்தில் உள்ள பெரிய கண்மாய் பகுதியில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது, அதிகமான மழை பெய்ததால், கண்மாயில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் சக்திவேல் தனது 250 ஆடுகளுடன் இரவு முழுவதும் கண்மாய் பகுதியிலேயே தவித்து வந்துள்ளார்.

    இதைப்பார்த்த மாவிலோடை கிராமத்தை சேர்ந்த மக்கள், இதுகுறித்து உடனடியாக விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதனைத்தொடர்ந்து அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் கிராம மக்கள், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த சக்திவேலையும், 250 ஆடுகளையும் பத்திரமாக மீட்டனர்.

    • கடந்த வாரத்தில் 10 கிலோ கொண்ட செம்மறி ஆடு ரூ.7ஆயிரத்து 500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • கன்னிவாடி சுற்றுவட்டார பகுதியில் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

     மூலனூர்:

    தமிழகத்தில் நடைபெறும் முக்கிய ஆட்டுச்சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தையாகும். இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.இங்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பெரு நகரங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து ஆடுகளை இறைச்சிக்காக வாங்கி செல்கின்றனர்.

    அதேபோல் கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக இங்கு கொண்டு வருகின்றனர். கடந்த 2 வாரங்களாக இந்த பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் மேலும் செம்மறி மற்றும் மேச்சேரி இன ஆடுகளால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் இனி வரும் காலங்களில் மழைக்காலம் தொடங்குவதால் இந்த பகுதியில் மேய்ச்சல் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தால் அதிக லாபம் தரும் மேச்சேரி இன மற்றும் செம்மறி ஆடுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டது

    இதனால் ஆடுகளின் விலை சற்று அதிகமாகவே இருந்தது. கடந்த வாரத்தில் 10 கிலோ கொண்ட செம்மறி ஆடு ரூ.7ஆயிரத்து 500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.770 என்ற அடிப்படையில் 10 கிலோ எடை கொண்ட ஒரு செம்மறி ஆட்டின் விலை ரூ.7ஆயிரத்து 700 ஆகும்.இதனால் கன்னிவாடி சுற்றுவட்டார பகுதியில் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த வாரம் சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ஆடுகளின் விலை மேலும் உயரும் என்பதால் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நாய் கடித்ததில் ஒரு ஆடு இறந்து விட்டது. மற்ற ஒரு ஆட்டிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.
    • ஆடுகள், கோழிகளை நாய்கள் கடிப்பது வாடிக்கையாகவே உள்ளது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில், உப்புபாளையம் ரோட்டில் முத்தாட்சி (வயது 70) என்பவர் வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று மாலை அவர் ஆட்டுபட்டியில் வளர்த்து வரும் ஆடுகளை நாலைந்து நாய்கள் சேர்ந்து கடித்துக் கொண்டிருந்தது. இதை அறிந்த அருகில் இருந்தவர்கள் உடனே சென்று நாய்களை விரட்டியடித்தனர்.

    இதில் நாய் கடித்ததில் ஒரு ஆடு இறந்து விட்டது. மற்ற ஒரு ஆட்டிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்; வெள்ளக்கோயில் பகுதியில் மான்கள், ஆடுகள், கோழிகளை நாய்கள் கடிப்பது வாடிக்கையாகவே உள்ளது, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ஆடுகளை விற்க விவசாயிகள் ஆர்வம் இல்லாததால் கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது.
    • 10 கிலோ எடை கொண்ட ஆடு சுமார் ரூ.7500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    மூலனூர்:

    தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை ஆகும். இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பெருநகரங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு கடந்த சில வாரங்களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

    இதுபற்றி விவசாயி ஒருவர் கூறியதாவது:-

    கன்னிவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்ேபாது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கிணறுகளில் போதிய அளவு தண்ணீர் உள்ளது. மேலும் கால்நடைகளுக்கு தேவையான தீனிகள் போதிய அளவில் இருப்பதால் விவசாயிகள் ஆடுகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆடுகளை விற்க விவசாயிகள் ஆர்வம் இல்லாததால் கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக விலை உயர்வடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சந்தையில் ஆடுகளின் விலை அதன் எடையை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அதனடிப்படையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.650-க்கு விற்பனை செய்யப்பட்டது. அது இந்த வாரத்தில் ரூ.100 அதிகரித்து ரூ.750-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு சுமார் ரூ.7500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.

    • வீடுகளில் உள்ள பொருட்கள் முழுவதுமாக தீயில் எரிந்து கருகின.
    • 3 ஆடுகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே அச்சுதராயபுரம் பகுதியில் உள்ள வடக்கு தெருவில் லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மூங்கில் கொத்து மரம் இருந்துள்ளது.

    இதனிடையே நேற்று மதியம் மூக்கில் மரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    காற்றின் வேகம் காரணமாக மூங்கில் மரத்திலிருந்து மளமளவென அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவியுள்ளது.

    இதனை அடுத்து அங்கிருந்த குடிசை வீடுகளில் தீ பரவியதை தொடர்ந்து 5-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிய தொடங்கின.

    தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை தீயணைப்பு துறையினர் இரண்டு வாக னங்களில் தீயினை அனை க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இருப்பினும் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள பொருட்கள் முழுவதுமாக தீயில் கருகின.

    இதில் ஜெயராஜ், சாந்தி, பாலசுப்பிரமணியம், மல்லிகா, செல்லக்கிளி ஆகியவரின் வீடுகள் முழுவதுமாக தீயில் எரிந்து கருகின. குறிப்பாக சாந்தி என்பவருது வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதால் அவர் வீட்டில் வளர்த்து வந்த மூன்று ஆடுகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன.

    இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    • ஆடுகளை திருடும் கும்பலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • விவசாயிகள் பொருளாதார அளவில் பாதிப்பை சந்திக்கின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம், கள்ளிக்குடி, பேரையூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ஏரா ளமானோர் ஆடுகள் வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அண்மை காலமாக ஆடுகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தற்போது திருடர்கள் ஆடுகளை திருடி வருகின்றனர்.

    கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான் பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமாரி (50). சம்ப வத்தன்று இவர் தனது ஆடுகளை தோட்டத்தில் கட்டியிருந்தார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் 2 ஆடுகளை திருடிச்சென்றனர்.

    இதேபோல் அதே பகுதியை சேர்ந்த தம்மைய நாயக்கர் என்பவருக்கு சொந்தமான ஒரு ஆடு திருடு ேபானது. கள்ளிக் குடியை அடுத்துள்ள கே.வெள்ளாகுளம் கிராமத்தில் முத்தையா என்பவருக்கு சொந்தமான 5 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மேற்கண்ட பகுதிகளில் ஆடுகள் திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது.

    இதனால் விவசாயிகள் பொருளாதார அளவில் பாதிப்பை சந்திக்கின்றனர். எனவே ஆடு திருடும் நபர்களை பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசா ருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×