search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரம்ஜான் பண்டிகையையொட்டி மேலப்பாளையம் கால்நடை சந்தையில் விற்பனைக்கு குவிந்த ஆடுகள்
    X

    சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகள்.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி மேலப்பாளையம் கால்நடை சந்தையில் விற்பனைக்கு குவிந்த ஆடுகள்

    • கோவில் கொடை விழாவுக்காக ஆடுகள் அதிக அளவில் விற்பனை ஆகும்.
    • ரம்ஜான் பண்டிகையில் செம்மறி ஆடுகள் தேவை அதிகம் இருக்கும்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளை யத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று ஆடு, கோழி, மாடு விற்பனை செய்யக்கூடிய சந்தை நடந்து வருகிறது.

    இங்கு நெல்லை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியா பாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து ஆடு, மாடுகளை விற்பனை செய்தும், வாங்கியும் செல்வார்கள்.

    இதனால் இந்த சந்தையில் விற்பனை மும்முரமாக நடைபெறும். வியாபாரிகள் கூட்டம் அலைமோதும். மேலும் சித்திரை, ஆடி, ஆவணி மாதங்களில் கோவில் கொடை விழாவுக்காக ஆடுகள் அதிக அளவில் விற்பனை ஆகும். இதேபோல் ரம்ஜான், பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெறும்.

    சந்தையில் குவிந்த ஆடுகள்

    இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை வருகிற சனிக்கிழமை கொண்டாடப் படுகிறது. இதையொட்டி மேலப்பாளையம் கால்நடை சந்தையில் இன்று காலை முதலே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், அருப்பு க்கோட்டை, தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆயிரக்க ணக்கான ஆடுகளை சந்தைக்கு கொண்டு வந்து குவித்தனர்.

    ரம்ஜான் பண்டிகையில் செம்மறி ஆடுகள் தேவை அதிகம் இருக்கும் என்பதால், இன்று கூடுதல் செம்மறி ஆடுகள் சந்தைக்கு வந்திருந்தன. பாவூர்சத்திரம், ஆலங்குளம், ரெட்டியார்பட்டி, கடையம், அடைக்க லப்பட்டினம் பகுதியில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஆடுகள் மற்றும் குட்டிகளை விற்பனைக்கு கொண்டு வந்து குவித்தனர்.

    செம்புகிடா

    ஆட்டுக்குட்டிகள் தலா ரூ.6 ஆயிரம் முதல் விற்பனையானது. சில குறிப்பிட்ட இன ஆடுகள் ரூ.25 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. அதே நேரத்தில் செம்புகிடா ஒன்று அதிகபட்சமாக ரூ.32 ஆயிரத்துக்கு விலைபோனது. ஆனாலும் விலையை பற்றி வியாபாரிகள் யோசிக்காமல் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.

    இன்று ஒரே நாளில் 4 ஆயிரம் டோக்கன்கள் மாநகராட்சி சார்பில் வாக னங்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு டோக்கனுக்கு ரூ.50 வீதம் ரூ.2 லட்சம் மாநகராட்சிக்கு வசூலானது. சந்தையை ஒட்டியுள்ள நேதாஜி சாலை, மேலப்பாளையம் சக்திநகர் பகுதியிலும் குவிந்த வியாபாரிகளால் கோழி விற்பனையும் களை கட்டியது.

    Next Story
    ×