search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காயல்பட்டினத்தில் திருடப்பட்ட ஆடுகளின் சத்தம் கேட்காமல் இருக்க சொகுசு காரில் கடத்தப்பட்டனவா?-போலீசார் விசாரணை
    X

    திருடப்பட்ட ஆடுகளை போலீசார் மீட்ட காட்சி.

    காயல்பட்டினத்தில் திருடப்பட்ட ஆடுகளின் சத்தம் கேட்காமல் இருக்க சொகுசு காரில் கடத்தப்பட்டனவா?-போலீசார் விசாரணை

    • ஓடக்கரை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வளாகத்தில் 34 ஆடுகளும் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
    • மீட்கப்பட்ட ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ. 3.50 லட்சம் என்று தெரிகிறது.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் மற்றும் ஆறுமுகநேரி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஆடுகளை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் காயல்பட்டினத்தின் உச்சினிமாகாளி யம்மன் கோவில் தெரு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 5 வீடுகளில் வளர்க்கப்பட்ட 34 ஆடுகள் நேற்று முன்தினம் இரவு ஒரே நாளில் திருட்டு போன தால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

    ஆடுகளை பறிகொடுத்த நபர்கள் தங்களின் ஆடுகளை யார் திருடி னார்கள்? என்று ஊர் முழுவதும் தேடத் தொடங்கினர். அப்போது ஓடக்கரை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வளாகத்தில் 34 ஆடுகளும் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    உடனே இதுபற்றி ஆறுமுகநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில், சப்- இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து சென்று ஆடுகளை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட ஆடுகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 3.50 லட்சம் என்று தெரிகிறது.

    விசாரணையில் ஆடு களை திருடி வைத்தி ருந்தது ஓடக்கரை முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த சின்னத்து ரை (வயது45) என்பதும், இவருக்கு உடந்தையாக உச்சினி மாகாளி அம்மன் கோவில் தெரு பூஜை மணி இருந்து ள்ளார் என்பதும் தெரியவந்தது. ஆனால் இந்த இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

    ஆடுகளை திருடி கடத்தும் போது அவை கத்தும் சத்தம் கேட்டு விடக் கூடாது என்பதற்காக இருக்கைகள் அகற்றப்பட்ட சொகுசு காரில் ஆடுகளை ஏற்றி காரின் கண்ணாடிகளை அடைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பண்டிகை காலத்தில் விற்பதற்காக ஒரே நாளில் 34 ஆடுகளை திருடி உள்ளதும் தெரியவந்தது.

    ஆடுகளை திருடிய சின்னத்துரை, பூஜைமணி ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆடுகளை பறிகொடுத்த உச்சினி மாகாளி அம்மன் கோவில் தெரு வைரவன் மனைவி பத்மாவதி, நாராயணன் மனைவி பெரிய பிராட்டி, காட்டுப்பள்ளி தெரு சிராஜுதீன் மனைவி செய்யது அலி பாத்திமா, மங்கள விநாயகர் கோவில் தெரு சம்சுதீன் மனைவி ரகமது பீவி, முகமதுசுபின் ஆகிய 5 பேர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்ய ப்பட்டுள்ளது.

    ஆனாலும் இதே பகுதியைச் சேர்ந்த மேலும் பலரும் தங்களின் ஆடுகள் திருட்டு போய் உள்ளதாக புகார் கொடுத்துள்ளனர்.

    Next Story
    ×