search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sacrifice"

    • விழுந்த வேகத்தில் தீப்பிடித்ததால் அதில் இருந்தவர்களால் உடனடியாக வெளியில் வரமுடியவில்லை.
    • பஸ்சில் பயணித்த 8 வயது சிறுமி மட்டும் அதிர்ஷ்டவசமாக தீக்காயங்களுடன் உயிர் தப்பினார்.

    ஜோகன்ஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவில் ஈஸ்டர் பண்டிகைக்காக சென்ற 45 பேர் பஸ் விபத்தில் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அண்டை நாடான போட்ஸ்வானாவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மோரியா நகரில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு ஈஸ்டர் பிரார்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 46 பேர் ஒரு பஸ்சில் புறப்பட்டு சென்றனர்

    அந்த பஸ் மலைப்பாதை யில் உள்ள ஒரு பெரிய பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச்சுவற்றை உடைத்துக்கொண்டு தலைகீழாக கீழே பாய்ந்ந்தது.

    சுமார் 165 அடி உயரத்தில் இருந்து விழுந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது.இதனால் பஸ்சில் பயணம் செய்தவர்கள் உயிர் பயத்தில் அலறினார்கள். பஸ்சும் சுக்குநூறாக நொறுங்கியது. விழுந்த வேகத்தில் தீப்பிடித்ததால் அதில் இருந்தவர்களால் உடனடியாக வெளியில் வரமுடியவில்லை.

    என்ன நடந்தது என்பதை அறிவதற்குள் பெண்கள் உள்பட 45 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். பஸ்சில் பயணித்த 8 வயது சிறுமி மட்டும் அதிர்ஷ்டவசமாக தீக்காயங் களுடன் உயிர் தப்பினார்.

    சம்பவம் பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்றனர். காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்கள் உடல்களை மீட்கும் முயற்சி யில் ஈடுபட்டனர். பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி சிதைந்து காணப்பட்டது. பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். நீண்ட நேரம் போராடி அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டது. விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

    • மனோஜ்குமார் நடத்தி வந்த கோழி பண்ணையில் வெள்ளம் புகுந்து அனைத்து கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.
    • கோழி பண்ணையில் சுமார் 6 ஆயிரம் கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சிலோன் காலனியை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் கோழிப்பண்ணை நடத்தி 5 ஆயிரம் கோழிகளை வளர்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக ஓட்டப்பிடாரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மனோஜ்குமார் நடத்தி வந்த கோழி பண்ணையில் வெள்ளம் புகுந்து அனைத்து கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.

    மேலும் கோழிப்பண்ணைக்கு கடந்த 2 நாட்களாக செல்ல முடியாத நிலையில் இன்று காலையில் மனோஜ்குமார் சென்று பார்த்தபோது அங்கு அனைத்து கோழிகளும் உயிரிழந்து துர்நாற்றம் வீசிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து மனோஜ் குமார் ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் அப்பகுதியில் கிடங்கு தோண்டி இறந்த கோழிகள் அனைத்தையும் புதைத்துள்ளார். அதேபோல் சிலோன் காலனி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் நடத்தி வரும் கோழிப்பண்ணையில் சுமார் 7 ஆயிரம் கோழிகளும், கவர்னகிரியில் பொன்பெருமாள் என்பவர் நடத்தி வரும் கோழி பண்ணையில் சுமார் 6 ஆயிரம் கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன. இதுகுறித்து கோழி பண்ணை நடத்தி வருபவர்கள் கூறுகையில், வங்கிகளில் கடன் வாங்கி தொழிலை நடத்தி வந்த நிலையில் அதிக கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோழிகள் அனைத்தும் உயிரிழந்தது.

    இதனால் தங்களது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொகை பெற்று தந்தால் மட்டுமே மீண்டும் இத்தொழிலை செய்ய முடியும் என தெரிவித்தனர்.

    • பலியானவர்களின் 5 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மஞ்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • விபத்தில் பலியான தஸ்னிமா ஐக்கிய அரபு நாட்டில் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே உள்ள குட்டிப்பாறை பகுதியை சேர்ந்த 7 பேர் நேற்று மாலை ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அந்த ஆட்டோவை அப்துல் மஜித்(வயது55) என்பவர் ஓட்டிச்சென்றார்.

    அவர்களது ஆட்டோ செட்டியங்காடு என்ற பகுதியில் சென்ற போது, எதிரே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வந்த பஸ் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ முற்றிலுமாக நொறுங்கியது.

    இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் அப்துல் மஜித், தஸ்னிமா(33), அவரது குழந்தைகள் ரின்ஷா பாத்திமா(12), ரைஹா பாத்திமா(4), சகோதரி முஹ்சினா(35) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    ஆட்டோவில் இருந்த மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆட்டோவில் சிக்கிக் கிடந்தவர்களை மீட்டனர்.

    பின்பு படுகாயம் அடைந்தவர்கள் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பலியானவர்களின் 5 பேரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மஞ்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பஸ்சில் வந்த ஐயப்ப பக்தர்கள் யாரும் காயம் அடையவில்லை. சாலை திருப்பத்தில் பஸ் வேகமாக திரும்பிய போது தவறுதலாக ஆட்டோ மீது மோதியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் விபத்தில் பலியானவர்கள் பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன. பலியான ஆட்டோ டிரைவர் அப்துல் மஜித் தனது மகளுக்கு திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், மகள் திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

    இதே போல் விபத்தில் பலியான தஸ்னிமா ஐக்கிய அரபு நாட்டில் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். அப்போது புல்லூரில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக சென்ற போது தனது 2 குழந்தைகள் மற்றும் சகோதரியுடன் பலியாகிவிட்டார்.

    இந்த விபத்து பலியானவர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி, விபத்து நடந்த பகுதியைச் சேர்ந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மப்பேடு போலீசார் மயில்வேலின் உடலை மீட்டனர்.
    • மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் மகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள நெய்வேலி கிராமம்,மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது38). கொத்தனார். இவரது மனைவி தாந்தோணி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    சமீபத்தில் பெய்த கனமழையால் கன்னிகைப்பேர் ஏரியின் உபரி நீர் செல்லும் கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. இந்த நிலையில் நேற்று இரவு ராஜா வந்த போது கன்னிகைப்பேர்-திருக்கண்டலம் நெடுஞ்சாலையில் உள்ள கால்வாயில் தவறி விழுந்தார். இதில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட அவரை அவ்வழியே சென்றவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடிவந்தனர். இதற்கிடையே இன்று காலை அதே பகுதியில் கால்வாயில் ராஜாவின் உடல் கரை ஒதுங்கி இருந்தது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூரை அடுத்த, பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரம் கிராமம் கிடங்கு தெருவை சேர்ந்தவர் மயில்வேல்(51). இவர் பிஞ்சிவாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் கேண்டினில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை மயில்வேல் வழக்கம்போல் வேலைக்கு சென்றபோது சத்தரை பஸ்நிறுத்தம் எதிரே உள்ள குளத்தில் குளித்தார். அப்போது சேற்றில் சிக்கிய அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். மப்பேடு போலீசார் மயில்வேலின் உடலை மீட்டனர்.

    திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் கபிலர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (30). கூலித்தொழிலாளி. இவர் இன்று காலை மேல் நல்லாத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலை எதிரே உள்ள டீ கடைக்கு சென்றார். அப்போது மகேஷ் சிறுநீர் கழிப்பதற்காக டீக்கடையின் சுவர் ஓரம் சென்றார். அவர் அருகில் இருந்த மின்இணைப்பு பெட்டியை தொட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் மகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவஹரி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே வீரப்பெருமாநல்லூரை சேர்ந்தவர் சிவஹரி (வயது31), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சந்திரலேகா (26). இருவரும் நேற்று இரவு உறவினர் வீட்டு விசேஷத்திற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு திருவாமூர் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திருவாமூர் ரோட்டில் இருந்த பெட்ரோல் பங்க் ஒன்றில் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போட்டு கொண்டு வெளியே வந்தனர். அப்போது திருச்சியில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த கார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதனால் படுகாயம் அடைந்த சிவஹரியும் சந்திரலேகாவையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். வரும் வழியில் சந்திரலேகா பரிதாபமாக உயிரிழந்தார். சிவஹரி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் லட்சுமி சாய் சந்தோஷ் (வயது 21). இவருக்கும் ஐதராபாத்தை சேர்ந்த பார்கவ் என்பவருக்கும் கடந்த 23-ந் தேதி திருமணம் நடந்தது.

    இந்நிலையில் 27-ந் தேதி லட்சுமி சாய் சந்தோஷ் தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசிக்க வந்தனர்.

    நேற்று முன்தினம் மாலை வரிசையில் சென்றனர். அப்போது கூட்டம் அதிகமாக இருந்தது. ஏழுமலையானை தரிசித்து விட்டு தங்கம் மண்டபம் அருகே புதுமணப் பெண் நடந்து வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் லட்சுமி சாய் சந்தோஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து லட்சுமி சாயின் பெற்றோர் கூறுகையில்:-

    அவருக்கு சிறு வயது முதலே சுவாசக் கோளாறு இருந்ததாகவும், கூட்ட நெரிசலில் தரிசனத்திற்கு வந்ததால் மயங்கி விழுந்து இறந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் பிணத்தை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் புது மணப்பெண் அணிந்து இருந்த தங்க நகைகள் காணாமல் போனதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரிக்கு புறப்படுவதற்காக தனது சட்டை துணியைஅயன் பாக்ஸ் மூலம் அயன் செய்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கணிசபாக்கத்தை சேர்ந்தவர் சுகுமார். கட்டிட தொழிலாளி. இவரது மகன் ராகுல் என்கிற கிருஷ்ணா (16).இவர் பண்ருட்டியை அடுத்துள்ள அங்கு செட்டிபாளையம்பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார்.

    இன்று காலை கல்லூரிக்கு புறப்படுவதற்காக தனது சட்டை துணியை அயன் பாக்ஸ் மூலம் அயன் செய்துள்ளார் அப்போது திடீரென மின்சாரம் தாக்கியது .இதில் சம்பவ இடத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணா உடலை கைப்பற்றிபிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் வீழிவரதராஜப்பெருமாள் கோவில் தெருவைச்சேர்ந்தவர் செய்யது இப்ராஹிம் மனைவி வஹிதா ரகுமான்(வயது58). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, செய்யது இப்றாஹிம் என்பவர் தனியாக வசித்து வருகிறார். இதனால், வஹிதா ரகுமானுடன், தங்கை ரஹமத் நிஷா(49) மற்றும் தாய், தந்தை சகோதரனுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில், சமீபகாலமாக, தங்கை ரஹமத் நிஷாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, வயிற்றுப்போக்கு, வாந்தி மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைக்கு ஆளாகியுள்ளார். தொடர்ந்து, வஹிதா ரகுமான் நேற்று முன்தினம் மாலை, தங்கை ரஹமத் நிஷாவை, காரைக்கால் அரசு ஆஸ்பத்திருக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ரஹமத் நிஷா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து, திரு.பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கடலூர்:

    சிதம்பரம் கொத்த ட்டையில் வசிப்பவர் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த வெங்கட்ராவ் (வயது 65). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் போர்மேனாக பணி செய்து வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக பணி செய்து வந்தார்.இவர் நேற்று இரவு பணி முடித்து வீடு திரும்பினார். அப்போது சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கட்ராவ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த பரங்கிப்பேட்டை போலீசார், அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்தில் சிக்கிய டாஸ்மாக் ஊழியர் பலியானார்.
    • நரிக்குடி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வந்த னர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள பனை யூர் பகுதியை சேர்ந்த வர் வெங்கலமுத்து (வயது 47). இவர் நரிக்குடி ரெயில் நிலையம் அருகேயுள்ள கண்டுகொண்டான் மாணிக் கும் அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் இவர் கடந்த 16-ந்தேதி இரவு பணி முடிந்து சொந்த ஊரான பனையூர் கிராமத்திற்கு தனது இருசக்கர வாக னத்தில் நரிக்குடி-திருச்சுழி சாலையில் சென்று கொண் டிருந்தார். அப் போது விடத்தக்குளம் அடுத்துள்ள மேலேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் வெங்கலமுத்து விற்கு முன்பக்க தலையில் பலத்த அடி விழுந்த நிலை யில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடினார்.

    இந்த நிலையில் சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நரிக்குடி போலீசார் விபத் தில் சிக்கி படுகாயமடைந்து உயிருக்கு போராடிய வெங்கலமுத்துவை மீட்டு தனியார் வாகனம் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத் துவமனைக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த விபத்து குறித்து அவரது மனைவியான கெங்கம்மாள் (44) கொடுத்த புகாரின் அடிப்படையில் நரிக்குடி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வந்த னர். இந்த நிலையில் தீவிர சிகிச்சையிலிருந்த வெங்கல முத்து சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    • ஒரே நாளில் தண்ணீரில் மூழ்கி 2 பேர் பலியாகினர்.
    • மாட்டுத்தாவணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கருப்பாயி ஊரணி சின்னப்பாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சின்னக்கருப்பு (வயது43). இவர் வண்டியூர் கண்மாய்க்கரைக்கு மீன் பிடிக்க சென்றார்.வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது சின்னக் கருப்பு தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி பஞ்சு மாட்டுத்தாவனி போலீஸ் நிலையத்தில் புகார் செய் தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சின்னக் கருப்புவின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மாட்டுத்தாவணி போலீசார் சின்னக்கருப்புவின் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் திருப்ப ரங்குன்றம் ராஜீவ்காந்தி 4-வது தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் அருண்பாண்டி (24).இவருக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. அதற்காக அவர் சிகிச்சையும் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் உறவினருடன் திருப்பரங்குன்றம் சரவணபொய்கைக்கு குளிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை கணேசன் திருப்ப ரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அருண்பாண்டியின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து வாலிபர் அருண் பாண்டியின் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிறிஸ்தவ வழிபாட்டு அரங்கம் ஒன்றில் ஜெப கூட்டம் நடைபெற்றது.
    • காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கேரள மாநிலம் எர்ணா குளம் பகுதியில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில் இன்று காலை நடை பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் எர்ணா குளத்தை அடுத்த கடமாச்சேரியில் ஞாயிற்றுக்கிழமையான இன்று கிறிஸ்தவ வழிபாட்டு அரங்கம் ஒன்றில் ஜெப கூட்டம் நடைபெற்றது. விடுமுறை தினம் என்பதால் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் அதில் பங்கேற்று இருந்தனர்.

    2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடியிருந்தனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலதரப்பட்ட மக்கள் ஜெப கூட்டத்தில் பங்கேற்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது காலை 9 மணி அளவில் கூட்ட அரங்கில் திடீரென அடுத்தடுத்து 6 குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின.

    குண்டு வெடித்த இடத்தில் போடப்பட்டிருந்த சேர் உள்ளிட்ட பொருட்கள் தீப்பிடித்து எரிந்தன. இதைப் பார்த்து பிரார்த்தனை கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் பீதியும் அதிர்ச்சியும் அடைந்தனர். அனைவரும் உயிர் பிழைப்பதற்காக ஆங்காங்கே சிதறி ஓடினார்கள்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த குண்டு வெடிப்பில் பெண் ஒருவர் உடல் சிதறி பலியானார். 25-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரையும் மீட்டு கொச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ×