மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி கூலித் தொழிலாளி பலி

ஜமீன்இளம் பள்ளி, அத்திக் காடு பிரிவு ரோடு அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அப்பகுதியில் இருந்த ஒரு மின்கம்பத்தில் மோதி தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சண்முகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி கூலித் தொழிலாளி பலி
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45) கூலித்தொழிலாளி.

இவர் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம், பாசூருக்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் வேலையை முடித்து விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல தனது மோட்டார் சைக்கிளில் ஜேடர்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஜமீன்இளம் பள்ளி, அத்திக் காடு பிரிவு ரோடு அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அப்பகுதியில் இருந்த ஒரு மின்கம்பத்தில் மோதி தலை யில் அடிபட்டு படு காயம் அடைந்தார். இதைப் பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சண்முகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com