என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "conflict"
- மதுரை நோக்கி வந்த கார் மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
- இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருப்பத்தூர்
மதுரையில் இருந்து பொன்னமராவதிக்கு பயணிகளுடன் வாடகை கார் ஒன்று புறப்பட்டது. இந்த காரை லியாகத் அலி என்பவர் ஓட்டி வந்தார். பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் அந்த கார் மதுரையை நோக்கி செல்லும்போது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஆ.தெக்கூருக்கு வரும்போது திடீரென்று அந்த கார் கட்டுப் பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது.
இதில் கார் தலை குப்புற கவிழ்ந்தது. டிரைவர் எந்தவித காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும் அந்த மின்கம்பம் சேதமானதால் அந்த பகுதி களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு உடனடியாக நெற்குப்பை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் சுந்தர பாண்டி யன் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- வாக்குவாதம் முற்றியதில் 2 பேரின் ஆதரவாளர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
- ஒரு கட்டத்தில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
நெல்லை:
சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 87-வது குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி நெல்லை மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள மணி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது முழு உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று மாலை 7 மணியளவில் ஒரு அமைப்பின் மகளிர் அணியின் மாநில நிர்வாகிகளான மதுரையை சேர்ந்த 2 பெண்கள் தங்களது ஆதரவா ளர்களுடன் மாலை அணிவிக்க வந்திருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் 2 பேரின் ஆதரவாளர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதோடு அங்கிருந்த கார்களை அடித்து நொறுக்கினர்.
இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஒரு கட்டத்தில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பட்டாலியன் போலீசுக்கு காயம் ஏற்பட்டதாகவும், அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் 2 தரப்பினரும் சந்திப்பு போலீஸ் நிலையத்தில் மாறி மாறி புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வடகலை, தென்கலை பிரிவை சேர்ந்த ஏராளமானவர்கள் பிரபந்தம் பாடுவதற்காக குவிந்தனர்.
- இருதரப்பு அர்ச்சகர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், விளக்கொளி கோவில் தெருவில் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. இங்கு பிரபந்தம் பாடுவதில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த கோவிலில் ஸ்ரணவ நட்சத்திரத்தை ஒட்டி வேதாந்த தேசிகர், வரதராஜ பெருமாள் கோவில் அருகே எழுந்தருளி மாட வீதிகளில் உலா வருவது வழக்கம்.
அன்படி இன்று காலை வேதாந்த தேசிகர் சுவாமி வீதி உலா வந்து வரதராஜ பெருமாள் கோவில் அருகே சன்னதி வீதியில் நடை பெற்றது. அப்போது வடகலை, தென்கலை பிரிவை சேர்ந்த ஏராளமானவர்கள் பிரபந்தம் பாடுவதற்காக குவிந்தனர்.
அப்போது, தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதற்க்கு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாக கூறி வடகலை பிரிவினர் வேதாந்த தேசிகர் முன்பு பிரபந்தம் பாட எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் வடகலை பிரிவினர் பிரபந்தம் பாடத்தொடங்கினர். இதனால் இருதரப்பு அர்ச்சகர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
இதனால் அங்கிருந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் விஷ்ணு காஞ்சி போலீசார் மற்றும் கோவில் செயல் அலுவலர் பூவழகி ஆகியோர் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
இருதரப்பினரையும் சுவாமி ஊர்வலம் முன்பு பாடுவதற்கு போலீசாரும, இந்து சமய அறநிலைத்துறையினரும் அனுமதி அளித்த பின்பு தேசிகர் சுவாமி விதி உலா போலீசாரின் பாதுகாப்புடன் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சன்னதி வீதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். பிரபந்தம் பாடுவதில் அர்ச்சகர்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
விழுப்பரம்:
திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள டி. கொளத்தூரை சேர்ந்தவர் முருகன். விவசாயி.இவரது உறவினர் நாராயணன் (40). இருவரது வீடும் அருகருகே உள்ளது. இவர்கள் இருவருக்கும் வீட்டு மனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. முருகன் வீட்டில் வளர்த்து வந்த கோழிகள் அடுத்தடுத்து காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகன் மனைவி மான்விழி வீட்டின் வெளியே வந்து திட்டியதாக கூறப்படுகிறது.அப்போது அங்கு வந்த நாராயணன் எங்கள் வீட்டை பார்த்து ஏன் திட்டுகிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது. இதில் முருகன், அவரது மனைவி மான்விழி, நாராயணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்டுள்ளனர்.
இது முருகன் அளித்த புகாரின் பேரில நாராயணன், வீரன், பிரபு (32)மற்றும் சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நாராயணன் அளித்த புகாரின் பேரில் முருகன், மான்விழி ஆகியோர் மீது திருவெண்ணை நல்லூர் சப்- இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்தார். இதில் பிரபுவை போலீசார் கைது செய்தனர்.
- வீரபாபு சிறையில் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கைதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் தாலுகா அலுவலக சாலையில் கிளைச் சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
வடமதுரை திடீர் நகரைச் சேர்ந்த முருகன் மகன் வீரபாபு என்ற குட்டி (வயது 35) என்பவர் பைக் திருட்டு வழக்கில் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நேற்று இரவு இவருக்கும், மதுரையைச் சேர்ந்த மற்றொரு கைதிக்கும் எங்கே தூங்குவது என்ற பிரச்சினையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் இது கைகலப்பாக மாறி இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். வீர பாபுவை மற்றொரு தரப்பினர் கடுமையாக தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து சிறைக்காவலர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே வீரபாபு சிறையில் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கைதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பெரம்பலூரில் நடந்த கல்குவாரி ஏலத்தில் பயங்கர மோதல் நடைபெற்றது
- அமைச்சர் உதவியாளர் உள்பட தி.மு.க.வினர் 10 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்கு
பெரம்பலுார், அக்.31-
பெரம்பலுார் மாவட்டத்தில், பெரம்பலுார் மற்றும் ஆலத்துார் யூனியனில் உள்ள, 31 கல் குவாரிகளை, இன்று (செவ்வாய் கிழமை) ஏலம் விடுவதாக, பெரம்பலுார் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அறிவிப்பு வெளியிட்டது.அதன்படி, ஏற்கனவே செயல்படும், 19 பழைய பிட் கல் குவாரிகளுக்கு, ஒரு குவாரிக்கு தலா, 1.36 கோடி ரூபாயும், 12 புது பிட் கல் குவாரிகளுக்கு, ஒரு குவாரிக்கு தலா 2 கோடி ரூபாயும் என டெண்டர் தொகை நிர்ணயிக்கப்பட்ட டது.
இதற்கான விண்ணப்பங்களை பெறுவதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல் தளத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் பெட்டி வைக்கப்பட்டது.டெண்டர் பெறும் பணியில் கரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட உதவி இயக்குனர் ஜெயபால் மற்றும் துறை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் அந்த அலுவல கத்தில் ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். அதில் தி.மு.க.வினர் பெரும்பான் மையாக திரண்டிருந்தனர்.
இதில் தி.மு.க.வினர் வேறு எவரையும் டெண்டர் சமர்ப்பிக்க அனுமதிக்க வில்லை என்று கூறப்படு கிறது. போலீசாரும் அங்கு பாதுகாப்புக்காக குவிக்க ப்பட்டு இருந்தனர். இந்நிலையில், பா.ஜ.க. வைச் சேர்ந்த, பெரம்பலுார் மாவட்டம், கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் (வயது 48) என்பவர், தன் தம்பி முரு கேசன் என்பவருக்கு, கல் குவாரி டெண்டருக்கு விண்ணப்பிப்பதற்காக, பா.ஜ.க தொழில் துறை பிரிவு மாவட்ட தலைவர் முருகேசனுடன் பெரம்ப லுார் கலெக்டர் அலுவல கத்துக்கு வந்தார்.அங்குள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டி யில் விண்ணப்பத்தை போடுவதற்காக, விண்ணப்பம் மற்றும் 50 ஆயிரத்திற்கான 2 வங்கி வரைவோலையுடன் சென்றார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தி.மு.க.வினர் அவர்களை தடுத்தனர். இதனால் கலெக்டர் அலுவ லகத்தின் முதல் தளத்தி லேயே பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.இதில் கலைச் செல்வன் கட்டையால் தாக்கப்பட்டார். விண்ணப்பங்கள் கிழித்தெ றியப்பட்டது. டெண்டர் செலுத்து வதற்காக வைக்கப் பட்டிருந்த மரத்தடுப்புகள் உடைத்து சேதப்படுத் தப்பட்டன. இதனை தடுக்க வந்த அரசு அலுவலர்கள், பாது காப்பிற்காக நிறுத்தப்ப ட்டிருந்த போலீஸ் அதிகாரி கள் உள்ளிட்டோர் தாக்கப் பட்டனர்.
அலுவலகம் சூறையா டப்பட்டதில் ஆவணங்கள், விண்ணப்பங்கள் கீழே சிதறி கிடந்தன. இதனால் கலெக்டர் அலுவலகம் முதல் தளம் போர்க்களம் போல காட்சி அளித்தது.
இந்த தகராறில் காயம டைந்த ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன், பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பழனி சாமி, நெடுஞ்சாலை போக்கு வரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்பையன், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் கலா, பெரம்பலூர் சப் இன்ஸ்பெக்டர் சண்மு கம், பெண் போலீஸ் ஏட்டு லட்சுமி மற்றும் மாவட்ட உதவி புவியியலாளர் இளங்கோவன், புவியியல் துறை வருவாய் ஆய்வாளர் குமரி அனந்தன் ஆகியோர் பெரம்பலூர் மருத்துவ மனையில் வெளி நோயாளி களாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.இச்சம்பவம் தொடர்பான புகாரின் அடிப்படையில் அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் உள்பட தி.மு.க.வினர் 10 பேர் மீது 8 பிரிவின் கீழ் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இதைய றிந்து, கனிம வளத்துறை அலுவலகத்திற்கு விரைந்து வந்த கலெக்டர் கற்பகம், சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருதி கல் குவாரி டெண்டரை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டார்.
- கடந்த ஒரு ஆண்டாக மாணவர்க ளிடையே சிறு, சிறு மோதல் ஏற்பட்டு வருவதும், மாணவர்கள் ஆசிரியர் மீது கல் எரிந்து பிரச்சினையில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது
- ஆசிரியர்கள் தாரமங்கலம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் மற்றும் வெளிநபர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிப்பட்டி ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி யில் 740 மாண வர்கள் பயின்று வருகின்ற னர். 20 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் கடந்த ஒரு ஆண்டாக மாணவர்க ளிடையே சிறு, சிறு மோதல் ஏற்பட்டு வருவதும், மாணவர்கள் ஆசிரியர் மீது கல் எரிந்து பிரச்சினையில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் சம்பவத் தன்று மாலை மாணவர்கள் 2 பிரிவினர் இடையே வாய் தகராறு ஏற்பட்டு பள்ளி வளாகத்திலேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களின் வெளி நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து பள்ளிக்கு வரவழைத்து பெரும் மோதலில் ஈடுபட ஆயத்தமாகினர்.
இந்த தகவல் அறிந்த ஆசிரியர்கள் தாரமங்கலம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் மற்றும் வெளிநபர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.
இதையடுத்து நேற்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கராஜ், தலைமை ஆசிரியர் உமாராணி ஆகியோர் மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்தனர்.
தொடர்ந்து தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி தரன் உள்ளிட்டோர் முன்னி லையில் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தவறான நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். மேலும் இதுபோன்ற மோதல்கள் உருவாகாமல் இருக்க பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி மாணவர்களின் போக்கை கண்காணித்து ஒழுங்கு படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
- பாலகுருவிற்கும், இவரது மனைவி செல்வமணிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம்.
- இதனையடுத்து சிறிது நேரத்தில் மயங்கி கிழே விழுந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு செல்வநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகுரு விவசாயி. இவரது மனைவி செல்வமணி (வயது 43). இந்நிலையில் பாலகுருவிற்கும், இவரது மனைவி செல்வமணிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். இதேபோல் நேற்றும் இவர்களுக்கிடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மனஉளைச்சளில் இருந்த செல்வமணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கிருந்த விவசாய நிலத்திற்கு அடிக்க வைத்திருக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்தில் மயங்கி கிழே விழுந்தார்.
பின்னர் வீட்டிற்கு வந்த பாலகுரு வீட்டில் மயங்கி கிடந்த மனைவி செல்வமணியை மீட்டு அருகில் இருந்தவர்களின் உதவியுடன் சிகிச்சைக்காக சிதம்பரம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் செல்வமணியை சேர்த்தனர். இன்று காலை சிகிச்சை பலனின்றி செல்வமணி உயிரிழந்தார். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசில் பாலகுரு கொடுத்த புகாரின் பேரில் நகர போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அழகிய மீனாள் கோவிலில் சுவாமி கும்பிடுவதில் இரு தரப்பினர் திடீரென மோதிக் கொண்டனர்.
- திருவிழாவின் போது மாவட்ட காவல்துறை சார்பாக 100-க்கும் மேற் பட்ட போலீசார் குவிக்கப் பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ளது பள்ளப்பட்டி கிராமம். இந்த கிராமத்தினருக்கும், நரிக்கு டியிலுள்ள ஒரு தரப்பினர் மற்றும் இதர பிரிவை சேர்ந்த மக்களுக்கும் சாமி கும்பிடுவதில் சமீப காலமாக பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் நரிக்குடி பகுதியில் அமைந்துள்ள அழகிய மீனாள் கோவிலில் பள்ளப்பட்டி கிராமத்தினர் தனியாக காப்புக்கட்டி திரு விழா நடத்த முடிவு செய்த தாக கூறப்படுகிறது. இத னையறிந்த நரிக்குடி பகு தியைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தினரும் மற்றும் இதர சமூகத்தினரும் பள்ளப்பட்டி கிராமத்தினர் திருவிழாவை தனித்து நின்று நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த னர்.
இதனால் பாதிக்கப்பட்ட பள்ளப்பட்டி கிராமத்தினர் திருச்சுழி தாசில்தாரிடம் புகார் அளித்தனர். இதனை யடுத்து திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் இரு தரப்பையும் சேர்ந்த தலா 5 பேரை ஊர் முக்கியதர்களாக அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து இரண்டு மணி நேர பேச்சு வார்த் தைக்கு பிறகு இரு தரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
இதில் பள்ளப்பட்டி கிரா மத்தினர் நரிக்குடி பேருந்து நிலையம் அருகேயுள்ள அய்யனார் கோவிலில் காப் புக்கட்டும் நிகழ்ச்சியை நடத் திக்கொள்வது, கிராமத்தி னர் சார்பாக 5 பொங்கல் வைத்து சாமி கும்பிடுவது, கோவில் திருவிழாவின் போது மேள, தாளமின்றி அமைதியான முறையில் வழிபாடு செய்வது என்பது போன்ற பல்வேறு கட்டுப்பா டுகளுடன் சாமி கும்பிட கூட்டத்தில் முடிவு செய்து இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.
இந்தநிலையில் மேலும் பள்ளப்பட்டி கிராமத்தினர் நடத்தும் இந்த திருவிழா விற்கு இந்த ஆண்டு மட்டுமே அனுமதி எனவும், வரும் காலங்களில் அனுமதி யில்லை எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு இரு தரப்பினரும் சம்மதம் தெரி வித்தனர். பள்ளப்பட்டி கிராமத்தினர் அய்யனார் சுவாமிக்கு பல்வேறு பூஜை கள் நடத்திய நிலையில் ஆண்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் காப்புக் கட்டி தங்களது விரதத்தை தொடங்கினர்.
இதற்கிடையே பள்ளப் பட்டி கிராமத்தினர் அதிக எண்ணிக்கையில் பொங்கல் வைத்து வழிபாடுகள் செய்வ தற்கு மீண்டும் அனு மதி கோரியதாக கூறப்படு கிறது. இந்தநிலையில் அருப்புக்கோட்டை கோட் டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதனைய டுத்து பள்ளப்பட்டி கிரா மத்தினர் கோரிய அதிகப்ப டியான பொங்கல் வைக்கும் நிகழ்ச்சிக்கு நரிக்குடி பகு தியை சேர்ந்த ஒரு தரப்பினர் மற்றும் இதர வகுப்பை சேர்ந்தவர்களுக்கு உடன் பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏற்க னவே திட்டமிட்டப்படி நேற்று மாலை பள்ளபட்டி கிராமத்தினர் போலீசாரின் பாதுகாப்புடன் நரிக்குடி அழகிய மீனாள் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவில் வளாகத் தில் பள்ளப்பட்டி கிராமத் தினர் பொங்கல் வைத்து வழிபாடுகள் செய்தனர்.
இந்த விழாவில் பள்ளப் பட்டி கிராமத்தினர் அனை வரும் ஒன்றிணைந்து அமை தியான முறையில் சாமி கும்பிட்டு வழிபாடுகள் செய்த நிலையில் நேற்று மாலை திருவிழா நிறைவ டைந்தது. இந்த திருவிழாவின் போது மாவட்ட காவல்துறை சார்பாக 100-க்கும் மேற் பட்ட போலீசார் குவிக்கப் பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- வடமாநில தொழிலாளர்களுக்கிடையே மோதல்-இரும்பு கம்பியால் தாக்கியதில் ஒருவர் காயம்
- மேலும் தப்பிச்சென்ற சோட்டு, சச்சின் ஆகிய இருவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூர் மலையப்பன் சாலை பகுதியை சேர்ந்தவர் கண்ணையன் (வயது57).
இவர் மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் கோவை மாவட்டம் சூலூரில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இவரது வீட்டின் உட்புறத்தை அழகு படுத்துவதற்காக நாமக்கல்லை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரை அணுகி உள்ளார்.
அவர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த தர்மேந்தர் சர்மா (31), சோட்டு (28), சச்சின் (28) ஆகிய 3 பணியாளர்களை கண்ணையன் வீட்டிற்கு பணிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த மூன்று ேபரும் கண்ணையன் வீட்டின் கீழ் புறத்தில் ஒரு அறையில் தங்கி பணி செய்துள்ளனர்.
இந்நிலையில் தர்மேந்தர் சர்மா என்பவரை சோட்டு, சச்சின் ஆகிய இருவரும் இரும்பு கம்பியால் தாக்கினர்.
இதனை பார்த்த கண்ணையன் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டு உள்ளார்.
இதனை கேட்ட சோட்டு, சச்சின் கண்ணையனுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
பின்னர் மயக்க நிலையில் இருந்த தர்மேந்திர ஷர்மாவை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக கண்ணையன் அளித்த புகாரின் பேரில் சோட்டு, சச்சின் ஆகிய இருவர் மீதும் துறையூர் போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 307 (கொலை முயற்சி) வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தப்பிச்சென்ற சோட்டு, சச்சின் ஆகிய இருவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். துறையூரில் வடமாநில இளைஞர்கள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.