என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய கிழக்கு"

    • ஈரான் மீது ஒரு பெரிய புதிய தாக்குதலை நடத்த டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    • அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது.

    ஈரானில் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. இதில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது.

    போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினால் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஈரான் அரசை அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார்.

    மேலும் ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை செல்வதாக அறிவித்தார். அதன்படி யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் விமா னம் தாங்கி கப்பல் படைப்பிரிவு ஈரானை நெருங்கி உள்ளது. இதற்கிடையே டிரம்ப் அணு ஆயுதங்கள் இல்லாத ஒப்பந்தம் தொடர்பாக ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்.

    ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை மூலம் எட்டுவதற்கு காலம் கடந்து கொண்டிருக்கிறது. இல்லையென்றால் முன்பை விட ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்றார். ஆனால் டிரம்பின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி கொடுத்தது.

    அந்நாட்டு வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி கூறும் போது,"எங்கள் துணிச்சலான ஆயுதப் படைகள், எங்களது நிலம், வான் மற்றும் கடலுக்கு எதிரான எந்த வொரு ஆக்கிரமிப்புக்கும் உடனடியாகவும் சக்திவாய்ந்ததாகவும் பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளன" என்றார்.

    இந்த நிலையில் ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்த ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. இதனால் ஈரான் மீது ஒரு பெரிய புதிய தாக்குதலை நடத்த டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ஈரானின் பாதுகாப்பு அதிகாரிகளை இலக்காகக் கொண்ட அமெரிக்க ராணுவ வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஈரான் அணுசக்தி தளங்கள், அரசாங்க நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் கூறும்போது, அணு ஆயுதங்கள் குறித்த ஒப்பந்தத்தை எட்டுவதில் பேச்சுவார்த்தைகள் உண்மையானவையாக இருந்தால் மட்டுமே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக உள்ளது.

    அதேநேரத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்க வீரர்களுக்குத் தீங்கு விளை விக்கப்படும் என்றார். அமெரிக்கா-ஈரான் இடையேயான எந்த நேரத்தி லும் மோதல் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்து வருகிறது.

    • அகதிகள் வந்த படகானது ஏடனின் கிழக்கில் உள்ள ஷாப்வா பகுதி கடற்கரையை நோக்கி மிக அருகே வந்துகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
    • ஐ.நா வின் அறிக்கைபடி கடந்த ஒரு வருடத்தில் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் நாட்டுக்கு சுமார் 97,000 அகதிகள் வந்துள்ளனர்.

    ஆப்பிரிக்காவில் இருந்து நூற்றுக்கணக்கான அகதிகளை ஏற்றிக்கொண்டு கடல்வழியாக பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் படகு மத்திய கிழக்கு நாடான ஏமன் நாட்டின் ஏடன் பகுதிக்கருகே நேற்று வந்துகொண்டிருந்தபோது கடல் சீற்றத்தால் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த கோர விபத்தில் 100 பேர் கடலில் தொலைந்த நிலையில் அவர்களை தேடும் பனி தொடங்கியுள்ளது. அகதிகள் வந்த படகானது ஏடனின் கிழக்கில் உள்ள ஷாப்வா பகுதி கடற்கரையை நோக்கி மிக அருகே வந்துகொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த இடத்துக்கு அருகில் இருந்த உள்ளூவர் மீனவர்கள் உடனே விரைந்து கடலில் தத்தளித்த 78 அகதிகளை மீட்டனர். இன்னும் சுமார் 100 பேர் கடலில் தொலைந்தனர் என்று அம்மீனவர்கள் தெரிவித்தனர்.

     

     இந்த விவகாரம் குறித்து ஐ.நா வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டையும் நாட்டையும் இழந்து நிர்கதியில் வேற்று தேசம் நோக்கி பயணிக்கும் அகதிகள் சாரை சாரையாக கடலில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஐ.நா வின் அறிக்கைபடி கடந்த ஒரு வருடத்தில் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் நாட்டுக்கு சுமார் 97,000 அகதிகள் வந்துள்ளனர்.

     

    • டெல்லியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்த வழித்தடத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் அதை செயல்படுத்துவதற்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
    • இது இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா நாடுகளில் ரயில் மற்றும் கப்பல் வழித்தடத்தை ஏற்படுத்தி பொருளாதார பயன்பாட்டிற்காக இணைக்கும் திட்டமாகும்.

    அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து நாடுகளை கொண்ட ஜி7 கூட்டமைப்பின் 50வது உச்சி மாநாட்டை இந்த வருடம் இத்தாலி தலைமையேற்று நடத்தியது. கடந்த ஜூன் 13 முதல் 15 வரை நடந்த இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த மாநாட்டில் உக்ரைன் ரஷ்ய போர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. குறிப்பாக இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா வழித்தடத்தை மேம்படுத்துவதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு  டெல்லியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்த வழித்தடத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் அதை செயல்படுத்துவதற்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

     

    இந்த திட்டத்தில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும். இது இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா நாடுகளில் ரயில் மற்றும் கப்பல் வழித்தடத்தை ஏற்படுத்தி பொருளாதார பயன்பாட்டிற்காக இணைக்கும் திட்டமாகும்.

    இந்தியாவின் மேற்கு கரையில் இருந்து அனுப்பப்படும் பொருட்கள் கப்பல் வழியாக எமிரேட்ஸுக்கு சென்று அங்கிருந்து ரயில் வழியாக ஐரோப்பாவிற்கு செல்லும். இந்நிலையில்தான் தற்போது ஜி7 நாடுகள் கூட்டத்தில் எமிரேட்ஸில் ரயில் தடத்தை மேம்படுத்தி இந்த திட்டத்தை செயல்படுத்துவது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.

    ஜி 7 நாடுகள் இந்த திட்டதை செயல்படுத்த ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய காரணம் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இது  அமையும் என்பதே ஆகும். எது எப்படியாக இருந்தாலும் இந்த திட்டத்தால் இந்தியாவில் பொருளாதார உறவுகள் மேம்படும் என்பது உறுதி.

    ×