search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐரோப்பா"

    • செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது என்ற குற்றம் சாட்டப்பட்டுள்ளது
    • கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எலான் மஸ்க்

    சமூக ஊடகமாகவும் செய்தி பரிமாற்ற செயலியாகவும் விளங்கும் டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ் பிரான்ஸ் போலீசால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது என்ற குற்றச்சாட்டின் பேரில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  மேலும் பயங்கரவாத்துக்கு துணை நிற்பதாவும், பயனர்களின் தரவுகளை அரசுகளிடம் இருந்து பாதுகாப்பதாகவும் டெலிகிராம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

     

    இந்நிலையில் இந்த கைது குறித்து மற்றொரு சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவது குறித்து தனது பதிவில் குறிப்பிட்டுள்ள எலான் மஸ்க், 2030 ஆம் ஆண்டு வாக்கில் ஐரோப்பாவில் மீம் [MEME] ஒன்றுக்கு லைக் போட்டால் கூட உங்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பாவெல் துரோவ் பிரான்சில் இருக்கிறாரா என்ற கேள்விக்கு எக்ஸ் தளத்தின் ஏஐ தொழில்நுட்பமான GORK அளித்த பதிவையும் பகிர்ந்துள்ளார். மேலும் பாவெலுக்கு 20 வருடன் சிறை தண்டனை கிடைக்கும் என்று பயனர் ஒருவரின் பதிவை பகிர்ந்து, 20 ஆண்டுகளா.. என்று பதிவிட்டுள்ளார்.

    இதற்கிடையே பாவெல் துரோவின் கைது குறித்து சமூக வலைத்தளங்களில் காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. பெருமபாலான சமூக வலைத்தளங்களை மூலமும் தனி நபரோ குழுவோ சட்டவிரோதமான செயல்களுக்குப் பயன்படுத்துவது அவ்வப்போது வெளிச்சத்து வரும் நிலையில், டெலிகிராமை மட்டும் குறிவைப்பது, பாவெல் துரோவ் ரஷிய நாட்டைச் சேர்ந்தவர் என்ற காரணத்தாலா என்ற கேள்வியும் நெட்டிசன்கள் எழுந்துள்ளது. மேலும் எக்ஸ் தலத்தில் பாவெல் துப்ரோவ் என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.

    • ஐந்து வயது சிறுமி உட்பட 9 பேர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கேனரி தீவுகளை அடைய முயன்றபோது, 5,000 புலம்பெயர்ந்தோர் கடலில் மூழ்கி இறப்பு.

    ஐரோப்பா நோக்கிச் சென்ற புலம்பெயர்ந்தோர் படகு மொரிட்டானியா கடற்கரையில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், கடலில் மூழ்கி 89 பேர் உயிரிழந்துள்ளனர்.

    படகில் 170 பேர் பயணித்துள்ளனர். படகு கவிழ்ந்ததில் 89 புலம்பெயர்ந்தோரின் உடல்களை கடலோரக் காவல்படையினர் மீட்டுள்ளதாக மொரிடானியாவின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதில், ஐந்து வயது சிறுமி உட்பட 9 பேர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2024ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் கேனரி தீவுகளை அடைய முயன்றபோது, 5,000 புலம்பெயர்ந்தோர் கடலில் இறந்ததாக இடம்பெயர்வு உரிமைகள் குழுவான வாக்கிங் பார்டர்ஸ் கடந்த ஜூன் மாதம் தெரிவித்துள்ளது.

    • எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் நாசா ஒப்படைத்துள்ளது.
    • ஒப்பந்தத்தின் மதிப்பு 843 மில்லியன் டாலர் ஆகும்.

    வாஷிங்டன்:

    சர்வதேச விண்வெளி நிலையத்தை அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா, கனடா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கின.

    விண்வெளி நிலையத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் 1998-ம் ஆண்டு தொடங்கப் பட்டு 2000-ம் ஆண்டு முதல் விண்வெளி வீரர்களின் குழு நடவடிக்கைகளுடன் இயங்கத் தொடங்கியது. பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் 2030-ம் ஆண்டு முடிகிறது.

    அதன்பின்னர் விண் வெளியில் இருந்து அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அப்புறப்படுத்தி வளிமண்டலத்திற்கு கொண்டு வருவதற்காக பிரத்தியேக விண்கலம் உருவாக்கப்படுகிறது.

    இந்த பணியை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திடம் நாசா ஒப்படைத்துள்ளது. இந்தப் பணிக்கான 843 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7 ஆயிரம் கோடி) மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

    அடுத்த 10 ஆண்டுகளில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 4.5 லட்சம் கிலோ எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தை பசிபிக் பெருங்கடலில் தள்ளக் கூடிய ஒரு வாகனத்தை உருவாக்க உள்ளது.

    இதுதொடர்பாக நாசா கூறும்போது, யு.எஸ். டி.ஆர்.பிட் வாகனத்தை (விண் கலம்) உருவாக்கி வழங்குவதற்கு ஸ்பேஸ்எக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தின் மதிப்பு 843 மில்லியன் டாலர் ஆகும். இது விண்கலம் தயாரிப்புக்கான தொகை மட்டுமே.

    விண்வெளி நிலையத்தை வளிமண்டலத்திற்குள் கொண்டு வருவது மட்டுமல்லாமல், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஆபத்தை தவிர்ப்பதையும் இந்த விண்கலம் உறுதி செய்யும். டிஆர்பிட் விண்கலத்தின் மூலம், சர்வதேச விண்வெளி நிலையம் பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து அப்புறப்படுத்தப்படும்.

    அதன் பின்னர் அந்த விண்கலமும், சர்வதேச விண்வெளி நிலைய பாகங்களும் வளிமண்ட லத்தில் நுழையும்போது, அவை இரண்டும் உடைந்து எரியும் என்று தெரிவித்தது. விண்வெளி நிலையத்தின் கட்டமைப்பு இன்னும் நல்ல நிலையில் இருந்தாலும், அதனை அகற்றுவதற்கான எதிர்கால திட்டங்களை இப்போதே உருவாக்க வேண்டும் என்றும் எந்த உதவியும் வழங்கப்படாவிட்டால் அது இறுதியில் தானே பூமியின்மேல் விழுந்து மக்களுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    • டெல்லியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்த வழித்தடத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் அதை செயல்படுத்துவதற்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
    • இது இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா நாடுகளில் ரயில் மற்றும் கப்பல் வழித்தடத்தை ஏற்படுத்தி பொருளாதார பயன்பாட்டிற்காக இணைக்கும் திட்டமாகும்.

    அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து நாடுகளை கொண்ட ஜி7 கூட்டமைப்பின் 50வது உச்சி மாநாட்டை இந்த வருடம் இத்தாலி தலைமையேற்று நடத்தியது. கடந்த ஜூன் 13 முதல் 15 வரை நடந்த இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த மாநாட்டில் உக்ரைன் ரஷ்ய போர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. குறிப்பாக இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா வழித்தடத்தை மேம்படுத்துவதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு  டெல்லியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்த வழித்தடத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் அதை செயல்படுத்துவதற்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

     

    இந்த திட்டத்தில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும். இது இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா நாடுகளில் ரயில் மற்றும் கப்பல் வழித்தடத்தை ஏற்படுத்தி பொருளாதார பயன்பாட்டிற்காக இணைக்கும் திட்டமாகும்.

    இந்தியாவின் மேற்கு கரையில் இருந்து அனுப்பப்படும் பொருட்கள் கப்பல் வழியாக எமிரேட்ஸுக்கு சென்று அங்கிருந்து ரயில் வழியாக ஐரோப்பாவிற்கு செல்லும். இந்நிலையில்தான் தற்போது ஜி7 நாடுகள் கூட்டத்தில் எமிரேட்ஸில் ரயில் தடத்தை மேம்படுத்தி இந்த திட்டத்தை செயல்படுத்துவது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.

    ஜி 7 நாடுகள் இந்த திட்டதை செயல்படுத்த ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய காரணம் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இது  அமையும் என்பதே ஆகும். எது எப்படியாக இருந்தாலும் இந்த திட்டத்தால் இந்தியாவில் பொருளாதார உறவுகள் மேம்படும் என்பது உறுதி.

    • சோபிதா துலி பாலாவுடன் அடிக்கடி டேட்டிங் செல்வதாக தகவல்கள் பரவின.
    • புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. இவர் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார்.

    நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

    இதைத்தொடர்ந்து சமந்தா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

    நாக சைதன்யாவும் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். புதிய படம் ஒன்றில் மீனவர் கதாபாத்திரத்தில் நடித்துவரும் நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதா துலி பாலாவுடன் அடிக்கடி டேட்டிங் செல்வதாக தகவல்கள் பரவின.

    இந்த தகவலை இருவரும் ஏற்கவோ மறுக்கவோ இதுவரை இல்லை. இந்நிலையில் இருவரும் ஐரோப்பாவில் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளனர். அங்கு நாக சைதன்யாவும் சோபிதா துலி பாலாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சி இதழில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
    • தென்கிழக்கு ஆசியாவின் தாழ்மையான தொடக்கத்திலிருந்து ஐரோப்பா மற்றும் அதற்கு 17 நாடுகள் மற்றும் ஆறு கண்டங்களில் இருந்து 280 கரப்பான் பூச்சிகளின் மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

    உலகம் முழுவதும் பரவியுள்ள ஜெர்மன் கரப்பான் பூச்சி இனம், சுமார் 2,100 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கரப்பான் பூச்சி இனத்திலிருந்து உருவாகியிருக்கலாம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சி இதழில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

    தென்கிழக்கு ஆசியாவின் தாழ்மையான தொடக்கத்திலிருந்து ஐரோப்பா மற்றும் அதற்கு 17 நாடுகள் மற்றும் ஆறு கண்டங்களில் இருந்து 280 கரப்பான் பூச்சிகளின் மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் கரப்பான் பூச்சிகள் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவிலிருந்து மேற்கு நோக்கியும் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் நோக்கியும் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

     

    மேலும் சுமார் 270 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி வீரர்கள் ஆசியாவிலிருந்து வர்த்தக பாதைகளில் ஐரோப்பாவிற்கு பயணித்த போது, அவர்களின் ரொட்டி கூடைகளில் கரப்பான் பூச்சிகள் ஏறி ஐரோப்பாவிற்குப் பயணித்து அங்கு அதிகம் பரவியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

     

    அந்த காலகட்டங்களில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட நீராவி இயந்திரம் மற்றும் கடிதத்துக்கு உட்புறமாகக் குழாய்கள் போன்ற கண்டுபிடிப்புகள் பூச்சிகள் மேலும் பயணிக்கவும், உட்புறமாக வசதியாக வாழவும் உதவியது. கரப்பான் பூச்சிகளைக் கட்டுப்படுத்த அவற்றின் பரவலை ஆராய்வது உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.  

     

    • உங்களில் பெரும்பாலானவர்கள் பட்டினியை அனுபவித்து இருக்கமாட்டீர்கள்.
    • 50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் மற்றவர்கள் கார்களில் ‘லிப்ட்’ கேட்டே பயணித்துக்கொண்டு இருந்தேன்.

    நியூயார்க்:

    ஐ.நா.வில் இந்திய தூதரகம் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல தொழிலதிபரும், இன்போசிஸ் நிறுவனருமான நாராயணமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், 'உங்களில் பெரும்பாலானவர்கள் பட்டினியை அனுபவித்து இருக்கமாட்டீர்கள். ஆனால் நான் அனுபவித்து இருக்கிறேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் மற்றவர்கள் கார்களில் 'லிப்ட்' கேட்டே பயணித்துக்கொண்டு இருந்தேன். அப்போது பல்கேரியாவுக்கும் இன்றைய செர்பியாவுக்கும் இடையே உள்ள நிஷ் என்ற பகுதியில் 120 மணி நேரம் (5 நாட்கள்) பட்டினி கிடந்தேன்' என்று தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் நிபுணர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×