search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nightclub"

    • துருக்கியில் இரவு விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த தீ விபத்தில் சிக்கி 29 பேர் உயிரிழந்தனர்.

    இஸ்தான்புல்:

    துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் அமைந்துள்ளது இரவு விடுதி. அந்த விடுதியில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்தது.

    இந்நிலையில், இரவு விடுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது என இஸ்தான்புல் கவர்னர் தெரிவித்தார்.

    இந்த தீ விபத்தில் 29 பேர் பலியாகினர் என்றும், தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டார்.

    விசாரணையில், தீ விபத்தில் பலியானோர் ஊழியர்கள் என தெரிய வந்தது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமைதிப் பூங்காவாக திகழும் ஆஸ்திரேலியா நாட்டின் இரவு விடுதி அருகே மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 4 பேரில் ஒருவர் உயிரிழந்தார். #Australiashooting ##Australianightclub #Melbourneshooting
    மெல்போர்ன்:

    உலகில் மக்கள் பாதுகாப்பாக வாழ உகந்த நாடுகளில் ஒன்றாக அறியப்படும் ஆஸ்திரேலியாவில் நீடித்த நிலையான ஆட்சிமுறை மற்றும் வாழ்வாதாரத்துக்கு பாதுகாப்பான அம்சங்கள் போன்றவற்றுக்கு உத்தரவாதம் உள்ளதால் வெளிநாடுகளுக்கு சென்று வாழ விரும்புபவர்களின் விருப்பத்தேர்வாக இந்நாடு விளங்குகிறது.

    மேலும், வன்முறை, துப்பாக்கி கலாச்சாரத்தால் உயிருக்கு அச்சுறுத்தல் போன்றவையும் ஆஸ்திரேலியாவில் மிகவும் குறைவு.

    கடந்த 1996-ம் ஆண்டில் இங்குள்ள போர்ட் ஆர்த்தர் பகுதியில் ஒருவர் நடத்திய வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் உயிரிழந்தனர். கடந்த மார்ச் மாதத்தில் நடந்த 4 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலியா தலைநகர் மெல்போர்ன் நகருக்கு உட்பட்ட பிரஹான் பகுதியில் உள்ள இரவு விடுதி வாசலில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் படுகாயமடைந்தனர்.



    மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் முன்னர் தெரிவித்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். #Australiashooting ##Australianightclub #Melbourneshooting
    வெனிசூலா நாட்டில் இரவு விடுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தும், மூச்சு திணறியும் 17 பேர் உயிரிழந்தனர். #Venezuela #NightClub #Violence
    கராக்கஸ்:

    வெனிசூலா நாட்டின் தலை நகர் கராக்கஸ். அங்கு லாஸ் காட்டராஸ் என்ற இரவு விடுதி உள்ளது.

    அதில் நேற்று முன்தினம் பள்ளி கல்வி ஆண்டு நிறைவு விழாவையொட்டி விருந்து நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டிருந்தனர்.



    அப்போது அங்கு இரு தரப்பினரிடையே மோதல் வெடித்து உள்ளது. அதைத் கட்டுப்படுத்தும் முயற்சியாக அங்கு கண்ணீர்ப்புகை குண்டு வெடிக்கப்பட்டது. இதைக் கண்டு பதறிப்போன மக்கள் அங்கிருந்து ஒரே நேரத்தில் வெளியேற முயற்சித்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது ஏறிச்சென்று பலர் தப்பினர்.

    இந்த கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தும், மூச்சு திணறியும் 17 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் 16-20 வயதுக்கு உட்பட்டவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக் கின்றன.

    இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.   #Venezuela #NightClub #Violence #tamilnews
    ×