நள்ளிரவுக்குப் பின்: நைட் கிளப்-இல் துப்பாக்கிச் சூடு.. 3 பேர் பலி.. குண்டடிபட்ட 16 பேர்

மிசிசிப்பி மாகாணத்தில் இண்டியாநோலா தேவாலய தெருவில் உள்ள நைட் கிளப்பில் இந்த துப்பாக்கிச்சூடு அரங்கேறியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை மிசிசிப்பி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நள்ளிரவுக்குப் பின்: நைட் கிளப்-இல் துப்பாக்கிச் சூடு.. 3 பேர் பலி.. குண்டடிபட்ட 16 பேர்
Published on

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள நைட் கிளப் ஒன்றில் மர்ம நண்பர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 16 பேர் குண்டடிபட்டுள்ளனர். சமீப காலமாக துப்பாக்கிச்சூடு சமபாவங்கள்  அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது.

மிசிசிப்பி மாகாணத்தில் இண்டியாநோலா தேவாலய தெருவில் உள்ள நைட் கிளப்பில் நேற்று நள்ளிரவுக்கு மேல்  இந்த துப்பாக்கிச்சூடு அரங்கேறியுள்ளது. கிளப்பின் வாசலில் பலர் நின்றிருந்தபோது அவர்கள் மீது நடந்த இந்த துப்பாக்கிச்சூத்தில் 19 வயது இளைஞன் உட்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குண்டடி பட்ட  16 பெரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை மிசிசிப்பி போலீசார்  தீவிரமாக தேடி வருகின்றனர்.

அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்பது சகஜமாக உள்ள நிலையில் மளிகைக் கடைகளில் ஏடிஎமில் பணம் எடுப்பது போன்று குண்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற அளவுக்கு வந்துள்ளது. அதை அந்நாட்டு மக்கள் வரவேற்றும் உள்ளனர். எனவே அங்கு வன்முறை சகஜமாகிவருவதாக நெட்டிசன்கள் அபிப்பிராயப்படுகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com