என் மலர்
செய்திகள்

வெனிசூலா நாட்டில் இரவு விடுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பலி
வெனிசூலா நாட்டில் இரவு விடுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தும், மூச்சு திணறியும் 17 பேர் உயிரிழந்தனர். #Venezuela #NightClub #Violence
கராக்கஸ்:
வெனிசூலா நாட்டின் தலை நகர் கராக்கஸ். அங்கு லாஸ் காட்டராஸ் என்ற இரவு விடுதி உள்ளது.
அதில் நேற்று முன்தினம் பள்ளி கல்வி ஆண்டு நிறைவு விழாவையொட்டி விருந்து நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இரு தரப்பினரிடையே மோதல் வெடித்து உள்ளது. அதைத் கட்டுப்படுத்தும் முயற்சியாக அங்கு கண்ணீர்ப்புகை குண்டு வெடிக்கப்பட்டது. இதைக் கண்டு பதறிப்போன மக்கள் அங்கிருந்து ஒரே நேரத்தில் வெளியேற முயற்சித்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது ஏறிச்சென்று பலர் தப்பினர்.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தும், மூச்சு திணறியும் 17 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் 16-20 வயதுக்கு உட்பட்டவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக் கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். #Venezuela #NightClub #Violence #tamilnews

Next Story