என் மலர்

  நீங்கள் தேடியது "17 dead"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உக்ரைன் நாட்டில் செயல்பட்டு வந்த சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 17 பேர் பலியாகினர் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். #CoalMineBlast
  கியில்:

  கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்தில் உள்ள லுகான்ஸ்க் நகரின் யுரிவ்கா பகுதியில்  நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது.

  நேற்று முன்தினம் இங்கு நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 17 பேர் இறந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். 

  தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். #CoalMineBlast
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெனிசூலா நாட்டில் இரவு விடுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தும், மூச்சு திணறியும் 17 பேர் உயிரிழந்தனர். #Venezuela #NightClub #Violence
  கராக்கஸ்:

  வெனிசூலா நாட்டின் தலை நகர் கராக்கஸ். அங்கு லாஸ் காட்டராஸ் என்ற இரவு விடுதி உள்ளது.

  அதில் நேற்று முன்தினம் பள்ளி கல்வி ஆண்டு நிறைவு விழாவையொட்டி விருந்து நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டிருந்தனர்.  அப்போது அங்கு இரு தரப்பினரிடையே மோதல் வெடித்து உள்ளது. அதைத் கட்டுப்படுத்தும் முயற்சியாக அங்கு கண்ணீர்ப்புகை குண்டு வெடிக்கப்பட்டது. இதைக் கண்டு பதறிப்போன மக்கள் அங்கிருந்து ஒரே நேரத்தில் வெளியேற முயற்சித்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது ஏறிச்சென்று பலர் தப்பினர்.

  இந்த கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தும், மூச்சு திணறியும் 17 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் 16-20 வயதுக்கு உட்பட்டவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக் கின்றன.

  இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.   #Venezuela #NightClub #Violence #tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தர பிரதேசத்தில் தனியார் பேருந்து சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். #UPBusAccident #BusOverturned
  மெயின்புரி:

  உத்தர பிரதேச மாநிலம் மெயின் புரி அருகே இன்று காலை தனியார் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அதிவேகமாக சென்ற அந்த பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது.  பேருந்திற்குள் இருந்த பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் பலருக்கு கை கால்களில் முறிவு ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த அவர்கள், தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் மற்றும் போலீசார் வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

  இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். #UPBusAccident #BusOverturned

  ×