என் மலர்
நீங்கள் தேடியது "UP"
- வீட்டில் தங்கியிருந்தவர் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு ஆலையை நடத்தி வந்துள்ளார்.
- விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
உத்திர பிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தை அடுத்த லோனி பகுதியில் இருந்த இரண்டு மாடிகள் கொண்ட வீட்டின் கட்டிடம் இடிந்து விழுந்ததில், மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் பலத்த காயமுற்றனர்.
இடிந்து விழுந்த வீட்டை அதன் உரிமையாளர் வாடகைக்கு விட்டிருந்ததாக தெரிகிறது. வீட்டில் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தவர், அதில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு ஆலையை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட விபத்து காரணமாகவே வீடு இடிந்து விழுந்துள்ளது.
குடியிருப்பு பகுதியில் வீடு இடிந்து விழுந்த சத்தத்தை கேட்டு அங்கு விரைந்த அக்கம்பக்கத்தினர், இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசாருடன், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஏழு பேரை மீட்டனர். மீட்கப்பட்ட ஏழு பேரும் கடுமையாக காயமுற்றனர் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
- பயணிகள் வேண்டுகோள் விடுத்ததால் இரண்டு நிமிடம் பேருந்து நிறுத்தம்
- ஒப்பந்த ஊழியராக செயல்பட்டவருக்கு வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தி
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மோஹித் யாதவ். இவர் அம்மாநில போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த கண்டக்டராக வேலைபார்த்து வந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் பெரேலியில் இருந்து டெல்லி ஜன்ராத் சென்ற பேருந்தில் கண்டக்டர் பணியில் இருந்துள்ளார்.
அப்போது தொழுகைக்காக தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்தியதாக தெரிகிறது. சில பயணிகள் தொழுகை நடத்துவதற்காக பேருந்தை நிறுத்த கேட்டுக்கொண்டுள்ளனர். இதனால் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் பேருந்தை நிறுத்தியுள்ளனர். இதனால் நிர்வாகம் வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
மோஹித் யாதவ்தான் அவரது வீட்டிற்கு மூத்த பிள்ளை. அவருடைய 17 ஆயிரம் சம்பளத்தில்தான் குடும்பம் வாழ்ந்து வந்துள்ளது.
கண்டக்டர் வேலையில் இருந்து நீக்கியதும் பல இடங்களில் வேலை தேடி அழைந்துள்ளார். ஆனால் எங்கும் வேலை கிடைக்கவில்லை. மேலும், மண்டல மானேஜரிடம் நிலைமை குறித்து விளக்கம் அளிக்க முயற்சி செய்துள்ளார். அதற்கும் பலன் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர், கடந்த திங்கட்கிழமை ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது குடும்பர் செய்வதறியாமல் உள்ளது.
மோஹித் யாதவின் மனைவி ரிங்கி யாதவ் ''உத்தர பிரதேச போக்குவரத்து துறை எனது கணவரின் கோரிக்கையை கேட்காத வண்ணம் செவிடாகிவிட்டது. பெரேலி மண்டல மானேஜரை தொடர்ந்து அழைத்து வந்தார். ஆனால், எனது கணவர் தரப்பு வாதங்களை அவர் கேட்கவில்லை'' என்றார்.
பேருந்தை மோஹித் யாதவ் நிறுத்துவதற்கு முன், அவர் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ''நாங்களும் இந்துக்கள்... இந்து, முஸ்லிம் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. இரண்டு நிமிடங்கள் பேருந்தை நிறுத்தினால், என்ன நடக்கும்'' என்பதுபோல் அந்த வீடியோ விவரிக்கிறது.
- சட்டசபை கூடும் காலம் 14 நாட்களில் இருந்து ஏழு நாட்களாக குறைப்பு
- சபாநாயகருக்கு முதுகு தெரியும்படி எந்த உறுப்பினரும் உட்காரவும், நிற்கவும் கூடாது
இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றமாக உத்தர பிரதேச மாநிலம் சட்டமன்றம் திகழ்கிறது. 403 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். உறுப்பினர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு, பேப்பர்களை கிழிப்பதற்கு, சத்தமாக சிரிப்பதற்கு விரைவில் தடைவர இருக்கிறது.
இதற்கான புதிய விதிமுறைகள் நேற்றுமுன்தினம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன்மீதான விவாதம் இன்று நடைபெற்று அதன்பின் நடைமுறைப்படுத்தப்படும்.
சபாநாயகருக்கு முதுகு தெரியும்படி எந்த உறுப்பினரும் உட்காரவும், நிற்கவும் கூடாது. உரை நிகழ்த்தும்போது கேலரில் உள்ள யாரையும் சுட்டிக்காட்டக் கூடாது. அதேபோல் பாராட்டக்கூடாது. புகைப்பிடிக்கக் கூடாது. சத்தமாக சிரிக்கக் கூடாது.
சட்டசபை கூடும் காலம் 14 நாட்களில் இருந்து ஏழு நாட்களாக குறைப்பு. உறுப்பினர்கள் எந்தவிதமான குறிப்புகளையும் எடுத்துச் செல்லக் கூடாது. சட்டமன்ற முதன்மை செயலகம் அன்றைய தினத்திற்குரிய பணிக்குறிப்புகளை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக உறுப்பினர்களுக்கு கிடைக்கப்பெற செய்யும் போன்ற விதிமுறைகள் அதில் அடங்கியுள்ளன.
- 1981-ம் ஆண்டு சத்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற வன்முறையில் பத்து பேர் கொல்லப்பட்டனர்.
- நாட்டையே உலுக்கிய கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
90 வயது முதியவருக்கு ஃபிரோசாபாத் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. 1981-ம் ஆண்டு பத்து பேரை கொலை செய்த வழக்கில் நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதுதவிர குற்றவாளிக்கு ரூ. 55 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது. 42 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கொலை சம்பவம், நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
1981-ம் ஆண்டு சத்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்ற வன்முறையில் பத்து பேர் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. வன்முறை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பத்து பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதன்படி இந்திய தண்டனை சட்டம் 302 மற்றும் 307 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முதற்கட்டமாக மெயின்பூரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பிறகு ஃபிரோசாபாத் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை ஃபிரோசாபாத் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நாட்டையே உலுக்கிய கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
பத்து பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஒருவேளை அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில், சிறை தண்டனை மேலும் 13 மாதங்கள் வரை நீட்டிக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தது உத்தர பிரதேச அரசு
- உயிரிழந்த 6 பேரில் 3 பேர் குழந்தைகள் என காவல்துறை தகவல்
ஃபிரோசாபாத்:
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் நகரில் வீட்டு உபயோகத்திற்கான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பர்னிச்சர் பொருட்களை விற்கும் கடை செயல்பட்டு வந்துள்ளது. கடைக்கு மேலே உள்ள முதல் தளத்தில் உரிமையாளரின் குடும்பத்தினர் வசித்து வந்தனர். நேற்று இந்த கடையில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.
இந்த தீ முதல் தளத்திற்கு வேகமாக பரவியது. ஆக்ரா, மெயின்புரி, எட்டா மற்றும் ஃபிரோசாபாத் ஆகிய இடங்களில் இருந்து 18 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்றன. மேலும் 12 காவல் நிலையங்களைச் சேர்ந்த பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இரண்டரை மணி நேரம் இந்த பணி நீடித்தது.
இந்த தீ விபத்தில் கடை உரிமையாளரின் வீடு எரிந்து நாசமானது. தீயில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிந்ததாக மூத்த காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் திவாரி தெரிவித்துள்ளார். தீக் காயங்களுடன் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் நெரிசல் நிறைந்த பகுதி என்பதால், மீட்பு பணியில் கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருந்ததாக ஆஷிஷ் திவாரி கூறியுள்ளார். தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்தார். மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
- அதிக பயணிகள் ஏற்றி வந்த ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை.
- ஆட்டோவை பறிமுதல் செய்ததுடன், உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர்.
பதேபூர்:
உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டத்தின் பிந்த்கி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அங்கு வந்த ஆட்டோவை நிறுத்தினர். அதில் வழக்கத்திற்கு மாறாக அதிக பயணிகள் இருப்பதை பார்த்த போலீசார் அவர்களை வெளியே வருமாறு கூறினர்.
#WATCH | Uttar Pradesh | Police seized an auto and imposed a fine of Rs 11,500 after 27 people were found traveling in it in the Bindki PS area of Fatehpur district, yesterday
(Source: Viral video confirmed by police) pic.twitter.com/XeOwFcoQ0r
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) July 11, 2022
அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஆட்டோவில் இருந்து 4 பெண்கள், 16 குழந்தைகள் என மொத்தம் 27 பேர் இருந்தனர். அவர்களை எச்சரிக்கை செய்த அனுப்பிய போலீசார், உடனடியாக அந்த ஆட்டோவை பறிமுதல் செய்ததுடன், அதன் உரிமையாளருக்கு 11,500 ரூபாய் அபராதம் விதித்தனர். இது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலானது.
- விபத்து குறித்து நிபுணர்களைக் கொண்டு விசாரணை நடத்த உத்தர பிரதேச அரசு உத்தரவு.
- தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹாபூர்:
உத்தர பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் திடீரென வெடித்ததால் அந்த பகுதி முழுவதும் தீப்பிடித்தது. உடனடியாக விரைந்து சென்ற தீயணைப்பு பணியில் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியே கரும்புகையாக காட்சி அளித்தது.
இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து அறிந்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளையும் வழங்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், விபத்து குறித்து நிபுணர்களைக் கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் யோகி ஆதித்யநாத் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஹாபூர் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹாபூர் ரசாயன தொழிற்சாலை விபத்து நெஞ்சை பதற வைக்கிறது, இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்றும் பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.