

உத்தரபிரதேசம் மாநிலம் புலந்த்சர் அருகே குா்ஜா பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் அந்த பள்ளியில் ஆசிரியை செய்த அநாகரிக செயல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் வகுப்பறையில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஆசிரியை முன்பாக மாணவ-மாணவிகள் பாடம் கவனிக்க ஆவலோடு உட்கார்ந்து இருக்கின்றனர். அப்போது அவர் தனது செல்போனை எடுத்து இந்தி பட பாடலை ஸ்பீக்கர் மூலமாக ஒலிக்க விடுகிறார். தொடர்ந்து தலையை விரித்து போட்டு எண்ணெய் தேய்க்கிறார்.
ஒரு மாணவியை அழைத்து தனது கைப்பையில் உள்ள செல்போன் சார்ஜரை எடுத்து தருமாறு கட்டளையிடுகிறார். வகுப்பு நேரத்தில் பாடம் நடத்தாமல் சாவகாசமாக தலையை விரித்துபோட்டு எண்ணெய் தேய்த்ததுடன் சொந்த வேலைக்கு பள்ளி மாணவிகளை பயன்படுத்தியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
வகுப்பில் அலட்சியமாக செயல்பட்ட அவர் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை என தெரிந்தது. இதனை தொடர்ந்து அவரை பணி இடைநீக்கம் செய்து மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
वाह क्या ठाठ है यार प्रिंसिपल मैडम तेल से चंपी कर रही हैं ? लाउडस्पीकर में क्लासिकल सांग का आनंद लेते हुए। सिंगार दानी से तेल निकाल कर सर में डाल-डाल कर मानसिक टेंशन दूर कर रही हैं।?? सहायक अध्यापक द्वारा वीडियो बनाये जाने पर छात्र छात्राएं मुस्कुराते हुए इशारा कर रहे हैं,… pic.twitter.com/hgVVQzYjg4