என் மலர்tooltip icon

    இந்தியா

    பயங்கரவாத செயலுக்கு இந்தியாவில் ஆள் சேர்த்த உ.பி. டாக்டர் கைது
    X

    பயங்கரவாத செயலுக்கு இந்தியாவில் ஆள் சேர்த்த உ.பி. டாக்டர் கைது

    • டெல்லியில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
    • பெண் டாக்டரின் காரில் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

    புதுடெல்லி:

    டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

    இதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லியில் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லி அருகே பரிதாபாத்தில் பெருமளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில், லக்னோவை சேர்ந்த டாக்டர் ஷஹீனா ஷாஹித் என்ற பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காரில் இருந்து ஒரு துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

    விசாரணையில் ஷஹீனா பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பெண்கள் பிரிவுக்கு ஆள்சேர்ப்பு மற்றும் தலைமை பொறுப்பை வகித்தவர் என தெரிய வந்தது.

    ஜெய்ஷ்-இ-முகமது நிறுவனர் மசூத் அசாரின் சகோதரி சாடியா அசாரின் தலைமையில் செயல்படும் பிரிவுக்கு ஷஹீனா தலைமை தாங்கியதும், பரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட காஷ்மீர் மருத்துவர் முஜம்மில் கணாய் என்பவருடன் ஷஹீனா நெருங்கிய தொடர்பு வைத்ததும் தெரியவந்தது.

    Next Story
    ×