என் மலர்
நீங்கள் தேடியது "இன்ஸ்டா ரீல்ஸ்"
- நெடுஞ்சாலையில் ரீல் செய்யும்போது உரிமம் பெற்ற ஆயுதத்தை காண்பிப்பது விசாரணைக்கு உட்பட்ட விஷயம்.
- வீடியோவில் உள்ள அந்த பெண் இயக்கும் ஷாலினி பாண்டே என்பது தெரிய வந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ஒரு பெண் நெடுஞ்சாலையின் நடுவில் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸூக்காக கான்பூர்-டெல்லி நெடுஞ்சாலையில் பாடலுக்கு அந்த பெண் நடனமாடி உள்ளார்.
பொது இடத்தில் ஆயுதத்தை காட்டி நடனமாடும் பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தன.
இதுதொடர்பாக எக்ஸ் தள பயனர் ஒருவர், நெடுஞ்சாலையில் ரீல் செய்யும்போது உரிமம் பெற்ற ஆயுதத்தை காண்பிப்பது விசாரணைக்கு உட்பட்ட விஷயம் என்றும் தயவுசெய்து உடனடியாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீடியோவுடன் காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு டேக் செய்துள்ளார்.
ஒரு பயனர், அந்த நபர்களது துப்பாக்கிக்கு உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்எஸ்பி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் இதற்கு பதிலளித்த கன்னாஜ் காவல்துறை, இந்த விஷயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெண் கான்பூர் நகரில் வசிப்பவர் என்றும், அவர் கான்பூர் நகர் மாவட்டப் பகுதிக்குள் இந்த வீடியோவை எடுத்து இருப்பதாகவும் இது தொடர்பாக கான்பூர் நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அந்த பெண் இன்ஸ்டாகிராம் கணக்கை இயக்கும் ஷாலினி பாண்டே என்றும், அவருக்கு 60,000க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் அவரது கணக்கில் 2,550க்கும் மேற்பட்ட முறை பதிவிட்டுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.
முன்னதாக, "லக்னோ ராணி" என்று அழைக்கப்படும் சமூக ஊடகத்தில் பிரபலமான சிம்ரன் யாதவ், லக்னோவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோவிற்காக துப்பாக்கியை காட்டி மிரட்டிய வீடியோ மூலம் வைரலானார். வைரலான அந்த வீடியோவில், அவர் துப்பாக்கியை அசைத்துக்கொண்டே போஜ்புரி பாடலுக்கு நடனமாடுவது காட்டப்பட்டது. லக்னோ காவல்துறை இந்த வீடியோவை கவனித்து, தேவையான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
- முதல் மனைவியின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவை கணவன் தனது செல்போனில் பார்த்துள்ளார்.
- இதைக் கண்ட இரண்டாவது மனைவி ஆத்திரத்தில் கணவனின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்துள்ளார்.
அமராவதி:
ஆந்திரப்பிரதேசம் மாநிலம் என்டிஆர் மாவட்டம் முப்பலா கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டா ஆனந்த்பாபு. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுக்கு முன் தனது முதல் மனைவியை விட்டு பிரிந்து வீரம்மா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஆனந்த் பாபுவும் வீரம்மாவும் முப்பலா கிராமத்தில் கடந்த 5 மாதங்களாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை ஆனந்த்பாபு தனது முதல் மனைவி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோக்களைப் பார்த்து ரசித்துள்ளார்.
கணவன் ஆனந்த்பாபு தனது முதல் மனைவியின் இன்ஸ்டா ரீல்சை பார்த்து ரசிப்பதை கண்டு இரண்டாவது மனைவி வீரம்மா அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக வீரம்மா கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த வீரம்மா தனது கணவனின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்த்பாபு அலறி துடித்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஆனந்த்பாபுவை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதல் மனைவியின் இன்ஸ்டா ரீல்சை பார்த்த கணவரின் பிறப்புறுப்பை பிளேடால் அறுத்த இரண்டாவது மனைவியின் செயல் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இன்ஸ்டா ரீல்ஸ்க்காக உயிரிழந்ததுபோல் நடித்து லைக்ஸ்களை குவிக்க முயன்ற இளைஞர் போலீசில் வசமாக சிக்கினார்.
- உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமிற்கு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ பதிவிட்டு லைக்ஸ்களை குவிக்க போராடும் பலரில் ரெயில்களில் சிக்கியோ, பள்ளத்தாக்கில் விழுந்தோ உயிரிழக்கும் சம்பவங்களும் நாம் நிறைய பார்த்திருப்போம்.
ஆனால், இன்ஸ்டா ரீல்ஸ்க்காக உயிரிழந்ததுபோல் நடித்து லைக்ஸ்களை குவிக்க முயன்ற இளைஞர் போலீசில் வசமாக சிக்கியுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த முகேஷ் குமார் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸூக்காக சாலையில் பிணமாக படுத்து வீடியோ எடுத்துள்ளார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து, முகேஷ் குமாரை கைது செய்துள்ளனர்.






