இன்ஸ்டா ரீல்ஸ்க்காக நடுரோட்டில் பிணமாக நடித்த நபர் கைது

இன்ஸ்டா ரீல்ஸ்க்காக உயிரிழந்ததுபோல் நடித்து லைக்ஸ்களை குவிக்க முயன்ற இளைஞர் போலீசில் வசமாக சிக்கினார்.உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இன்ஸ்டா ரீல்ஸ்க்காக நடுரோட்டில் பிணமாக நடித்த நபர் கைது
Published on: 

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமிற்கு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ பதிவிட்டு லைக்ஸ்களை குவிக்க போராடும் பலரில் ரெயில்களில் சிக்கியோ, பள்ளத்தாக்கில் விழுந்தோ உயிரிழக்கும் சம்பவங்களும் நாம் நிறைய பார்த்திருப்போம்.

ஆனால், இன்ஸ்டா ரீல்ஸ்க்காக உயிரிழந்ததுபோல் நடித்து லைக்ஸ்களை குவிக்க முயன்ற இளைஞர் போலீசில் வசமாக சிக்கியுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த முகேஷ் குமார் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸூக்காக சாலையில் பிணமாக படுத்து வீடியோ எடுத்துள்ளார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரியவந்ததை அடுத்து, முகேஷ் குமாரை கைது செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com