search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "dead body"

  • குளத்தில் இருந்த நபர் நெல்லூரை சேர்ந்த கூலி தொழிலாளி என்று தெரியவந்தது.
  • களைப்பாக இருந்ததால் குளிர்ந்த நீரில் ஓய்வெடுக்க சென்றேன்.

  தெலுங்கானா மாநிலம் ஹனுமகொண்டா பகுதியில் உள்ள ஒரு குளத்தில் நீண்ட நேரமாக ஒரு ஆணின் உடல் எவ்வித அசைவும் இல்லாமல் இருந்ததால் அவர் இறந்து விட்டதாக சந்தேகப்பட்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

  அப்பகுதிக்கு வந்த காவலர் அந்த ஆணின் உடலை குளத்தில் இருந்து இழுக்கும் பொழுது அந்த ஆண் உயிருடன் எழுந்து வந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

  குளத்தில் இருந்த நபர் நெல்லூரில் உள்ள காவாலி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி என்று தெரியவந்தது.

  போலீசாரிடம் பேசிய அந்த நபர், "நான் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கிரானைட் குவாரியில் வேலை செய்து வருகிறேன். எனக்கு சம்பளம் கொடுத்தாலும், என் உழைப்பை அவர்கள் துஷ்பிரயோகம் செய்கின்றனர். இவ்வளவு வெயிலில் ஒருவரால் எப்படி நீண்ட நேரத்திற்கு வேலை செய்ய முடியும். களைப்பாக இருந்ததால் குளிர்ந்த நீரில் ஓய்வெடுக்க சென்றேன்" என்று தெரிவித்தார்.

  • கடந்த 12ம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக வங்கதேசத்தில் இருந்து கொல்கத்தா வந்திருந்தார்.
  • காணாமல் போன அன்வருல் அசீமை போலீசார் தேடி வந்தனர்.

  மேற்கு வங்கத்தில் மாயமான வங்கதேசம் எம்.பி அன்வருல் அசீம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

  எம்.பி அன்வருல் அசீம், கடந்த 12ம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக வங்கதேசத்தில் இருந்து கொல்கத்தா வந்திருந்தார்.

  ஆனால், 14ம் தேதிக்கு பிறகு, அன்வருல் அசீமை தொடர்பு கொள்ள இயலாக நிலையில், செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

  காணாமல் போன அன்வருல் அசீமை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நியூ டவுன் பகுதியில் அன்வருல் அசீம் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

  வங்கதேச எம்.பி., கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சந்தேகத்தின் அடிப்படையில் வங்கதேச தலைநகர் தாக்காவில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • பால்பின் ராஜ் என்ன ஆனார் என்று அவரது குடும்பத்தினர் தவித்து வந்தனர்.
  • மேலும் சிலர் செல்போன் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

  ஆறுமுகநேரி:

  தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அடுத்த அடைக்கலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பால்பின்ராஜ் (வயது 26).

  இவர் சாகுபுரம் தனியார் நிறுவனத்தில் பணியாளராக இருந்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார்.

  வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பும் போது ஏற்கனவே பெய்த பலத்த மழை காரணமாக சாலையில் பெருவெள்ளம் ஏற்பட்டு தடைபட்டிருந்தது.

  ஆனால் இதையும் கடந்து எப்படியாவது வீடுகளுக்கு சென்று விட வேண்டும் என்ற முனைப்பில் பெரும்பாலான தொழிலாளர்கள் இருந்துள்ளனர்.

  இதற்கு ஏற்ப அவர்களில் பலர் தொழிற்சாலையின் பின்பக்கத்தில் வழியாக அபாயகரமாக பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரை ஒருவர் பின் ஒருவராக கைகோர்த்து சென்றுள்ளனர்.

  இதன்படி 15 பேரை கொண்ட குழுவினரோடு பால்பின் ராஜும் அவ்வழியே சென்றுள்ளார். அந்த வரிசையில் இவர் கடைசி ஆளாகவும் இருந்துள்ளார்.

  இந்நிலையில் தட்டு தடுமாறி போராடியபடி அக்குழுவினர் வெள்ள நீரோட்டத்தை கடந்து மறுகரையை அடைந்துள்ளனர். ஆனால் அப்போது பால்பின் ராஜை மட்டும் காணவில்லை. இதனால் மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் பரவி ஆறுமுகநேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  பால்பின் ராஜ் என்ன ஆனார் என்று அவரது குடும்பத்தினர் தவித்து வந்தனர். இதனிடையே மீட்பு படையினர் படகு மூலம் அவரை முழுவீச்சில் தேடி வந்தனர். இந்த நிலையில் பால்பின் ராஜ் வெள்ள நீரில் வெகு தூரம் இழுத்துச் செல்லப்பட்டு சிக்கி பிணமாக கிடந்தது தெரியவந்தது. 3 நாட்களுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.

  இதே போல் மேலும் சிலர் செல்போன் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை கருதி மீட்பு படையினர் தேடி வருகின்றனர். 

  • சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
  • திருநங்கை தற்போது சாலையோரம் பிணமாக கிடப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  நாகர்கோவில்:

  தேனி மாவட்டம் குமுளி பகுதியை சேர்ந்தவர் சுமன் (வயது 33). திருநங்கையான இவர் கடந்த 2 ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை வீர புலி பகுதியில் வசித்து வந்தார்.

  கூலி வேலை செய்து வந்த சுமன் இன்று காலை வீரபுலி பகுதியில் ரோட்டோரத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் கீரிப்பாறை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

  ரோட்டோரத்தில் பிணமாக கிடந்த சுமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து கீரிப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  பலியான திருநங்கை சுமனின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. பிரேத பரிசோதனையில் தான் அவர் எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவரும். கடந்த வாரம் கன்னியாகுமரி பகுதியில் ரோட்டோரத்தில் திருநங்கை ஒருவர் பிணமாக கிடந்த நிலையில், மேலும் ஒரு திருநங்கை தற்போது சாலையோரம் பிணமாக கிடப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
  • திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயோ-கெமிஸ்ட்ரி முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.

  ராசிபுரம்:

  நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மெட்டாலா ஆனந்தாயி அம்மன் கோவில் காடு பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டு வேல் (44) விவசாயி. இவரது தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் இளம் பெண் உடல் ஒன்று தண்ணீரில் மிதந்தது.

  இது பற்றி தகவல் கிடைத்ததும் ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இறங்கி இளம் பெண்ணின் உடலை மீட்டனர். பிணமாக மீட்கப்பட்ட 20 வயது மதிக்கத்தக்க இந்த இளம் பெண் யார்? எந்த ஊர்? எப்படி இறந்தார்? போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

  இது பற்றி ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

  அப்போது பிணமாக கிடந்த பெண் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரது மகள் ஆசிகா (18) என்பது தெரியவந்தது. மேலும் இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பயோ-கெமிஸ்ட்ரி முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.

  ஆனந்தாயி அம்மன் மாணவியின் குல தெய்வம் ஆகும். சம்பவத்தன்று தனியாக மாணவி கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டுள்ளார். இந்த காட்சி கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.

  இந்த நிலையில் தான் மாணவி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். எனவே மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எப்படி இறந்தார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

  • பெருந்துறை கீழ்பவானி வாய்க்காலில் மூதாட்டி பிணம் கிடந்தது
  • போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்

  ஈரோடு,

  ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை தாடான்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்பு சாமிகவுண்டர். இவரது மனைவி ராமாயியம்மாள் (வயது 80). இவர்கள் இருவ ரும் மூத்த மகன் தேவசி காமணியுடன் வசித்து வருகி ன்றனர். இந்நிலையில் தேவசிகா மணியின் மகன் தமிழரசு ஏற்கனவே திருமணம் செய்த பெண்ணை மறு மணம் செய்ய முடிவு செய்து ள்ளார். இதற்கு ராமாயி யம்மாள் மறுப்பு ெதரிவி த்துள்ளார். இந்நிலையில் கடந்த 5-ந்தேதியன்று வீட்டை விட்டு வெளியேறிய ராமாயி யம்மாள் பின்னர் வீடு திரும்பவில்லை.

  பல இட ங்களில் தேடி பார்த்தும் ராமாயியம்மாள் கிடை க்கவில்லை. இதையடுத்து பெத்தம்பாளையம் அருகே கருக்குபாளையம கீழ்ப வானி வாய்க்காலில் ராமா யியம்மாள் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது. பின்னர் காஞ்சி கோவில் போலீசார் சம்பவ இடத்தி ற்கு சென்று ராமாயியம்மாள் உடலை மீட்டு அரசு மருத்து வமனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வை த்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ராமாயியம்மாள் கீழ்பவானி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

  • பாலத்தின் அடியில் இன்று அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
  • போலீசார் உடலை கைப்பற்றி குடிபோதையில் தவறி விழுந்தாரா? அல்லது வேறு யாரேனும் தள்ளி விட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  எரியோடு:

  திண்டுக்கல் மாவட்டம் எரியோடு சந்தைப்பேட்டை யில் புதிதாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் அடியில் இன்று அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் மல்லப்புரம் பஞ்சாயத்து நல்லாகவுண்டன்பட்டியை சேர்ந்த மனோகரன்(52) என தெரியவந்தது.

  விவசாய கூலித்தொழி லாளியான இவர் மதுப்பழ க்கத்திற்கு அடிமையானவர். சம்பவத்தன்று சைக்கிளில் சென்றவர் பாலத்திற்கு அடியில் கீழே விழுந்தது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி மனைவி மட்டும் உள்ளார். குழந்தை கள் இல்லை. குடிபோதையில் தவறி விழுந்தாரா? அல்லது வேறு யாரேனும் தள்ளி விட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  குளித்தலை:

  திருச்சி கோணக்கரை பகுதி சாலையில் 4 நாட்களாக ஒரு கார் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் காருக்குள் பார்த்தபோது, காருக்குள் ஆண் ஒருவர் படுத்து இருந்தார். ஏ.சி. ஓடிக்கொண்டு இருந்தது. துர்நாற்றம் வீசியது.

  இதனால் அச்சம் அடைந்த அவர்கள் போலீ சாருக்கு தகவல் கொடுத்தனர்.

  தகவலின் பேரில் உறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காரின் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது, காருக்குள் இருந்தவர் உடல் அழுகிய நிலையில் இருந்தது.

  காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை செய்ததில் அவர் கரூர் மாவட்டம் குளித்தலை முதலைப்பட்டி விதைப்பண்ணை ரோட்டை சேர்ந்த ஆடலரசு (வயது 38) என்பதும் இவர் மார்கெட்டிங் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.

  இதைத்தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் விசாரணையில், அவர் தனது மனைவி லட்சுமி பிரியா, 2 வயது மகளை தஞ்சை திருப்பந்துருத்தி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு கடந்த 31-ந்தேதி காலை 7 மணிக்கு குளித்தலைக்கு புறப்பட்டுள்ளார். அதன் பிறகு அவர் வீட்டுக்கு செல்லவில்லை. அவரை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகம் அடைந்த அவருடைய மனைவி குளித்தலை போலீசில் தனது கணவரை காணவில்லை என்று புகார் அளித்திருந்தது தெரியவந்தது. அவர் காரை ஓட்டி வந்தபோது உடல்நலக்குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • இடையே தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்
  • கரூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த ஆணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

  கரூர்,

  குளித்தலை-லாலாபேட்டை ரெயில் நிலையத்திற்கு இடையே தண்டவாளத்தில் நேற்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த ஆணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து, பிணமாக கிடந்தவர் யார்? அவர் ரெயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • தா.பழூர் அருகே அடையாளம் ெதரியாத முதியவர் பிணம் கிடந்தது
  • இதுகுறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

  உடையார்பாளையம்,

  அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே வீரபாண்டியன் என்பவருக்கு சொந்தமான பருத்தி வயலில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் காரைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் மணிமாறனிடம் தகவல் தெரிவித்தனர். மணிமாறன் தா.பழூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முதியவரின் சடலத்தை மீட்டு அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மரணம் அடைந்த நபர் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.