குளத்தில் சடலமாக மிதந்த நபர் உயிருடன் எழுந்து வந்ததால் அதிர்ச்சியான பொதுமக்கள்

குளத்தில் இருந்த நபர் நெல்லூரை சேர்ந்த கூலி தொழிலாளி என்று தெரியவந்தது.களைப்பாக இருந்ததால் குளிர்ந்த நீரில் ஓய்வெடுக்க சென்றேன்.
குளத்தில் சடலமாக மிதந்த நபர் உயிருடன் எழுந்து வந்ததால் அதிர்ச்சியான பொதுமக்கள்
Published on

தெலுங்கானா மாநிலம் ஹனுமகொண்டா பகுதியில் உள்ள ஒரு குளத்தில் நீண்ட நேரமாக ஒரு ஆணின் உடல் எவ்வித அசைவும் இல்லாமல் இருந்ததால் அவர் இறந்து விட்டதாக சந்தேகப்பட்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அப்பகுதிக்கு வந்த காவலர் அந்த ஆணின் உடலை குளத்தில் இருந்து இழுக்கும் பொழுது அந்த ஆண் உயிருடன் எழுந்து வந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

குளத்தில் இருந்த நபர் நெல்லூரில் உள்ள காவாலி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி என்று தெரியவந்தது.

போலீசாரிடம் பேசிய அந்த நபர், "நான் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கிரானைட் குவாரியில் வேலை செய்து வருகிறேன். எனக்கு சம்பளம் கொடுத்தாலும், என் உழைப்பை அவர்கள் துஷ்பிரயோகம் செய்கின்றனர். இவ்வளவு வெயிலில் ஒருவரால் எப்படி நீண்ட நேரத்திற்கு வேலை செய்ய முடியும். களைப்பாக இருந்ததால் குளிர்ந்த நீரில் ஓய்வெடுக்க சென்றேன்" என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com